என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனனின் சமீபத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    மாளாவிகா மோகனன்

    சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் பாணியிலான எபெக்டை பயன்படுத்தி அந்த போட்டோஷூட் நடத்தியுள்ளார் மாளவிகா மோகனன். 
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பார்வதி, பட வாய்ப்பு குறைந்ததால் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
    தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை மீண்டும் சேர்த்த மோகன்லாலையும் கண்டித்தார்.

    ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறும் பெண்களுக்கு ஆதரவாக மலையாள நடிகைகள் தொடங்கிய அமைப்பிலும் அங்கம் வகித்தார். இதனால் மலையாள நடிகர்கள் பார்வதியை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்வதை தவிர்த்தனர். 

    பார்வதி

    இதுகுறித்து பார்வதி கூறும்போது, “நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன்பிறகு எனக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். இந்தியில் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அளிக்கின்றனர். ஆனால் இங்கு ஒதுக்குகிறார்கள். பல வெற்றி படங்களை கொடுத்த எனக்கு ஒரு வருடமாக புதிய படங்கள் இல்லை” என்றார்.

    இதையடுத்து பார்வதி டைரக்டராக மாற முடிவு செய்துள்ளார். இதற்காக இரண்டு கதைகளை எழுதி தயாராக வைத்துள்ளார். ஒரு கதை அரசியலை மையமாக கொண்டது. இன்னொன்று ‘சைக்கலாஜிக்கல் திரில்லர்’ கதை. சில மாதங்களில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், புதுமுகங்களுக்கு ஜோடியாக நடிக்க தயார் என தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:- ‘சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். ஒரு படத்திலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று விடுகிறவர்களும் இருக்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் குறிப்பிட்ட படத்தில் நடித்தால் நமக்கு பெயர் கிடைக்குமா அல்லது கெட்டுப்போகுமா என்ற பயமெல்லாம் இருந்தது.

    இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி? எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன்.

    காஜல் அகர்வால்

    இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்க ஆசைப்படுகிறேன். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்கிறேன். வெப் தொடரிலும் நடிக்க போகிறேன். சினிமாவில் இப்போதுதான் வந்த மாதிரி இருக்கிறது. கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு இன்னும் எனக்கு பிரகாசமான ஆண்டாக இருக்கும்”.

    இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
    தமிழில் முன்னணி நடிகையின் பின்னாடி 6 பேர் கொண்டு குழு சுற்றி வருகிறார்களாம்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நம்பர் நடிகை தற்போது சாமி படத்தில் நடித்து வருகிறாராம். இவருக்கு 6 பேர்களை கொண்ட பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களாம். இவர்களுக்கு எல்லாம் மேலாக அவருடைய காதலரும் கூடவே வருகிறாராம்.

    படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வரும் விருந்தினர்களில் யாராவது அந்த நடிகையை முறைத்துப் பார்த்தால், அடுத்த நிமிடமே அவர் அந்த இடத்தில் இருந்து பாதுகாவலர்களால் அகற்றப்படுகிறாராம். நடிகை மீது மற்றவர்களின் கண்பார்வை கூட விழக் கூடாது என்பதில், கவனமாக இருக்கிறாராம் காதலர்!
    தமிழில் மிகவும் பிரபலமான நடிகைகளாக இருக்கும் சினேகா, அமலாபால் வரிசையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனனும் இணைந்திருக்கிறார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். இந்தபடத்தில் விஜய்யும் - விஜய் சேதுபதியும் மோதிக்கொள்ளும் ஆக்சன் காட்சி பிரமாண்டமாக படமாக்கப்படுகிறது.

    படத்தில் நடிக்கும் மாளவிகா மோகனனுக்கும் ஒரு ஆக்சன் காட்சி உள்ளதாம். அதற்காக தற்காப்பு கலை பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படத்திற்காக மாளவிகா பற்களர் என்னும் மார்ஷியல் ஆர்ட்ஸை கற்று கொண்டு வருகிறாராம். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுக்கும் சில சண்டை காட்சிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

    மாளவிகா மோகனன்

    இதற்கு முன்னதாக பட்டாஸ் படத்திற்காக நடிகை சினேகா, அடிமுறை என்னும் தற்காப்பு கலையையும், அதோ அந்த பறவை போல படத்திற்காக நடிகை அமலாபால், கிராமகா என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொண்டு நடித்தனர். இவர்கள் வரிசையில் நடிகை மாளவிகா மோகனனும் இணைந்திருக்கிறார்.
    பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை கங்கனா ரணாவத், இன்னோரு குடும்பத்துகாக உழைக்க எனக்கு நேரம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
    இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். ஜனவரி 24-&ந்தேதி வெளியாகும் ‘பங்கா’ திரைப்படத்தில் பள்ளி வயது சிறுவனுக்கு தாயாக நடித்துள்ள கங்கனா ரணாவத், தற்போது அந்தப் படத்துக்கான புரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார். 

    அதன் ஒரு பகுதியாக கங்கனா, ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தனது திருமணம் பற்றியும் தனது குடும்பத்துடன் மீண்டும் தான் இணைந்ததைப் பற்றியும் கூறியிருக்கிறார்.

    திருமணம் குறித்து கங்கனாவிடம் கேட்டபோது, ‘எனது வாழ்க்கையை இப்போதுதான் வாழத் தொடங்கி இருக்கிறேன். என்னோடு சேர்ந்து வாழ விரும்புபவர் கிடைத்தால் ஓகேதான். ஆனால், இந்தக் காலகட்டத்தில் சுமைகளை நான் விரும்பவில்லை. எனவே, என்னை விரும்பி வருகிறவர், குடும்பத்துக்குப் பொறுப்பெடுத்துக் கொள்பவராக இருக்க வேண்டும்.

    கங்கனா ரணாவத்

    இந்த உலகத்துக்காகச் செய்வதற்கும் உலகுக்குத் தருவதற்கும் நிறைய உள்ளது. முதன்முறையாக நான் என்னைப் பற்றிச் சிந்திக்கிறேன். நான் எனது வாழ்வில் ஈட்டியதை அனுபவிக்கவும், எனக்கே எனக்கான வாழ்வை வாழவும் செய்கிறேன். எனவே, இன்னொரு குடும்பத்துக்காக உழைப்பதற்கு எனக்கு நேரமும் சக்தியும் இல்லை. பின்னாள்களில் நடக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

    குடும்பத்தைப் பற்றிக் கேட்டபோது, ‘15 வயதில் என் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றேன். இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறேன். இந்த இணைவு, என் வெற்றிகளால்தான் சாத்தியமானது. நான் வெற்றி பெறாமல் போயிருந்தால் எனக்கு என் கனவும் குடும்பமும் இல்லாமலே போயிருக்கும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார்.
    பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இப்படத்தை தொடந்து, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார்.

    நடிகை அமலாபாலின் தந்தை

    தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில், இவரது தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார். நாளை மாலை இவரது இறுதி சடங்குகள் கேரளாவில் உள்ள குறுப்பம்படி என்னும் ஊரில் நடைபெற இருக்கிறது.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிரபலமான நடிகை இலியானா, அறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்த பின்னர் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்த இலியானா இந்தி சினிமா மோகத்தில் தென்னிந்திய பட வாய்ப்புகளை உதறிவிட்டு சென்றார். இந்திக்கு போன வேகத்தில் முதல் படம் ஹிட்டானது.

    ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. மேலும் வெளிநாட்டு பாய்பிரண்டுடன் காதல் தோல்வி ஆனதால் மன உளைச்சலுக்கு உள்ளானார். இலியானாவின் இந்த நிலைமையை கண்டு சிலர் அவருக்கு அறிவுரை செய்யத் தொடங்கினர். என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்று அவர்கள் வரிசைப்படுத்தியிருந்தனர்.

    இலியானா

    ஆனால் இது இலியானாவை கோபத்தில் ஆழ்த்தியது. அறிவுரை செய்தவர்களுக்கு கோபமாக பதில் அளித்திருக்கிறார். ‘எனக்காக நீங்கள் பில் தொகையை செலுத்தாத வரையில், எனக்காக சிக்கன் வாங்கிதர முடியாத நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை செய்யும் தகுதி உங்களில் யாருக்கும் கிடையாது’ என கூறி உள்ளார்.
    அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அறிமுகமான நடிகர் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறியிருக்கிறார்.
    தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருப்பவர் ராகுல் ராம கிருஷ்ணா. அர்ஜுன் ரெட்டி படத்தில் அறிமுகமான இவர், இயல்பான நடிப்பால் மொழிகள் கடந்து ரசிகர்களைப் பெற்றார். அடிப்படையில் பத்திரிகையாளரான இவர் அர்ஜுன் ரெட்டி வெற்றியைத் தொடர்ந்து பரபரப்பான நடிகரானார்.

    பரத் அனே நேனு, சம்மொஹனம், கீதா கோவிந்தம், கல்கி, புரோ செவ்ரா போன்ற திரைப் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றிய ராகுல், சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் வைகுண்ட புரம்லோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில், சிறுவயதில் தான் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-

    ராகுல் ராம கிருஷ்ணா

    நான் சிறு வயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன். இந்த சோகத்தை பற்றி வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னைப் பற்றி தெரிந்துகொள்ள நினைக்கும்போது எல்லாம் எனக்கு இதுதான் கண்முன் வருகிறது. இவ்வாறு அவர் பதிவு செய்திருக்கிறார்.

    அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாகப் பதிவிட்டு வருகின்றனர்.
    மாயநதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்வது நல்லதல்ல என்று பேசினார்.
    ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர் பேசும் போது, ‘உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க்குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம். 

    நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும். வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற. இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன். 

    படக்குழுவினருடன் அமீர்

    தமிழ்சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமா தான் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை. இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்கள் சினிமாவிற்கு எதுவும் செய்யவில்லை.

    கலைஞர், எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப்பெயரை மாற்றினார். ஆனால் சினிமா ஆட்கள் உடனே இந்த இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைட்டில் பார்க்குக்கு கொடுத்து விட்டார்.

    அதுபோல் கலைஞர் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். அதுவும் நடக்கவில்லை. இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்தப்பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன்.

    இந்த மாயநதி என்ற திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியடையணும். ஒரு ஆரோக்கியமான சூழல் சினிமாவிற்கு வரணும். இந்த விழா சிறியதாக ஆரம்பித்து பெரிதாக முடிந்திருக்கிறது" என்றார்.
    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஸ்ருதிஹாசன், ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இணைவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் மதுரையில் ஒரு நகைக்கடை திறப்பு நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: என் தந்தையுடன் அரசியலில் கரம் கோர்ப்பீர்களா என கேட்கிறீர்கள்.

    அப்பாவிற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. சிறுவயதில் இருந்தே அவருக்கு சமூக அக்கறையும், அரசியல் தெளிவும் இருக்கிறது. ஆனால், எனக்கு அந்த தெளிவு கிடையாது. எனவே, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.

    என் துறையில் சாதிக்க வேண்டும் என்பதில் தான், கவனம் உள்ளது. அரசியலில், ரஜினி, கமல் இருவரும் இணைவார்களா எனக் கேட்டால், நான், என் தந்தையை பற்றி பேசுவதே சரியானதாக இருக்கும். மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது.

    ஸ்ருதி ஹாசன்

    என் தந்தைக்கு இருக்கும் சமூகத்தின் மீதான அக்கறைக்கு, அவர் அரசியலில் சிறந்த நிலைக்கு உயர வேண்டும். நிச்சயம், அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார் என நம்புகிறேன். இருவரும் இணைந்தால் வெற்றி கிடைக்குமா என்பதை கணிக்க, நான் ஜோதிடரோ, அரசியல் விமர்சகரோ கிடையாது.

    என் தந்தை நல்ல மனிதர்; திறமையானவர். அவர் அரசியலில் ஜொலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இந்தமுறை அமையவில்லை, விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
    வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த தகவலை படக்குழு வெளியிடாமல் வைத்துள்ளது. இதனிடையே, நடிகர் பிரசன்னா, வலிமை படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இதுகுறித்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். என்னுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். 

    பிரசன்னா வெளியிட்டுள்ள அறிக்கை

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு இந்தமுறை அமையவில்லை. விரைவில் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன். அஜித்துடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டுவிட்டேன்” என்று பிரசன்னா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
    ×