என் மலர்
சினிமா செய்திகள்
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணா’ படத்தின் முன்னோட்டம்.
நோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சி.கலைமாமணி தயாரித்துள்ள திரைப்படம் ‘டாணா’. வைபவ் கதாநாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநரான யுவராஜ் சுப்ரமணி. யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவா.ஜி.ஆர்.என். ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி கூறியதாவது: “என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்யை பார்த்து பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள்.

இந்த கலவைதான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பதுதான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்பு தன்மையுடன் இத்திரைப்படத்தில் செய்திருக்கிறேன்” என்றார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில், நடிகை காஜல் அகர்வால் வில்லி வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி தொடங்கியது. இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சிலகட்ட படப்பிடிப்புக்கு பின்னர் கமலுக்கு நடந்த ஆபரேஷன் காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. கமல் தற்போது உடல்நலம் தேறிவிட்டதால் பிப்ரவரி மாதம் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அவர் வயதான வேடத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டாலும் அது பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

காஜல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியன் 2 படத்தின் வேடம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘இதுவரை நான் நடிக்காத கதபாத்திரம் இது. வழக்கமாக எல்லோரும் கூறுவது தானே என கேட்க வேண்டாம். இது உண்மையிலேயே வித்தியாசமானது. வேறு எதுவும் என்னால் கூற முடியாது’ என கூறியுள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு இந்த படத்தில் வில்லி வேடம் என தகவல் பரவி வருகிறது.
தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேசுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். மோகன்லாலுடன் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்தே இந்த படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர்.

ரூ.100 கோடி செலவில் தயாராகிறது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது. மகாநடி படத்தைபோல் இதுவும் தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என்று கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்கிறார்.
மலையாள நடிகர் திலீப், நாதிர்ஷா இயக்கும் 'கேசு இ வீட்டின்டே நாதன்' படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார்.
மலையாள நடிகர் திலீப் தற்போது தனது நண்பரான இயக்குனர் நாதிர்ஷா இயக்கும் 'கேசு இ வீட்டின்டே நாதன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். பெண் வேடம், திருநங்கை, திக்குவாய் என வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வம் உள்ள திலீப், இந்த படத்தில் 60 வயது நடுத்தர குடும்பத்து மனிதர் ஆக நடித்து வருகிறார்.

ஏற்கனவே கம்மார சம்பவம் படத்தில் 90 வயது கிழவராக நடித்திருந்தார் திலீப். ஆனால் இந்த 'கேசு இ வீட்டின்டே நாதன்' படத்தில் மொட்டை தலையுடன் வித்தியாசமாக காட்சி அளிக்கிறார். வயதான தோற்றத்தில் மட்டுமல்லாமல் இளமைப்பருவ தோற்றத்தில் கூட அவர் மொட்டை தலையுடன் காட்சி அளிக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் அஜித் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக அஜித்தின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவே நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நஸ்ரியா, யாமி கவுதம், இலியானா ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், ரஜினிக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக அஜித் நடித்த பில்லா 2 படத்தில் ஹூமா குரோஷி நடிப்பதாக இருந்தது, சில காரணங்களால் அவர் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளமான ட்விட்டரில், தன்னை சம்பந்தப்படுத்தி ஆபாசமாக ட்விட் செய்த அஜித் ரசிகர்களை நடிகை கஸ்தூரி எச்சரித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் பதிவில், ஆபாசமான ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தனது பெயரை சம்பந்தப்படுத்தியதற்காக நடிகை கஸ்தூரி வார்த்தைப் போரைத் தொடங்கினார். அஜித் ரசிகர் என்று சொல்லி அவரது பெயரை கெடுக்க வேண்டாம் என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த நடிகை கஸ்தூரி, ஆபாச ட்வீட் செய்த அஜித் ரசிகர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திலும் புகாரளித்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர், உண்மையான அஜித் ரசிகர்கள் இப்படி பதிவிட மாட்டார்கள் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வார்த்தை யுத்தம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், 'அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன், உடல் எடையை குறைக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகைக்கான தோற்றம் கவர்ச்சி இல்லாமல் கூட ஒரு திறமையான நடிகை என்று பெயர் எடுத்து இருக்கிறார் வித்யாபாலன். இந்தி பட உலகுக்கு குண்டான நடிகைகள் சரிப்படமாட்டார்கள் என்ற கருத்தையும் உடைத்து இருக்கிறார். குண்டாக இருந்தாலும் சினிமா துறையில் நுழைந்ததில் இருந்து முன்னணி நடிகையாக வலம் வந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களின் தாக்கம் அனைத்து மொழிகளிலும் இருக்கிறது. இது நல்ல வளர்ச்சி. வெள்ளித்திரையில் கதாநாயகர்கள் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. முன்னணி நடிகர்கள் படங்கள்தான் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்க முடியும் என்ற எண்ணமும் இருந்தது.

அது இப்போது மாறி உள்ளது. கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களும் கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அதிகம் வர தொடங்கி உள்ளன. சகுந்தலா தேவி வாழ்க்கை கதையில் நடிக்கிறேன். அவரைபோல் எனது தோற்றத்தை மாற்றியுள்ளேன்.
எனக்கு ஒரு அரிய வியாதி காரணமாக எடை கூடியது. அதை குறைத்தால் இன்னும் சில பிரச்சினைகள் வரலாம் என்று டாக்டர்கள் சொன்னதால் எடையை குறைக்கவில்லை. இதற்கு மேல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்கிறேன். எடை கூடியதால் வாய்ப்புகள் வராமல் இல்லை. முன்பை விட அதிக படங்கள் வருகின்றன”
இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.
வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், படக்குழு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.
வலிமை படத்துக்கு தேர்வான நடிகர், நடிகைகளிடம் படம் பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாது என்று தடை விதித்துள்ளதால் மவுனம் காக்கிறார்கள். படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அஜித்துக்கு பிடித்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மையில் ரசிகர் ஒருவர் பிரசன்னாவிடம், வலிமை படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதை வைத்து அவர் நடிப்பது உறுதி என்று பேச தொடங்கினர்.
மேலும் பிரசன்னா, அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தநிலையில், வலிமை படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
தான் நடித்த படம் ஹிட் ஆனாலும், தனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை ஒருவர் கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறாராம்.
சீட்டுக்கட்டு பெயர் கொண்ட படத்தில், சாக்லேட் பாய் நடிகருக்கு ஜோடியாக நடித்த மஞ்சு நடிகை, அந்த படத்திற்கு பின் பட வாய்ப்புகள் அதிகம் வரும் என நம்பி இருந்தாராம். ஆனால் அந்த படம் வெற்றி பெற்றாலும் நடிகைக்கு வேறு பட வாய்ப்புகள் வரவில்லையாம்.
இதனால் விரக்தி அடைந்த நடிகை வேறு ரூட்டை கையில் எடுத்துள்ளாராம். கிளாமருக்கு ஓகே சொல்லியுள்ள அந்த நடிகை, படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறாராம்.
ஜெய் விஜயகுமார் இயக்கத்தில் வெண்ணிஸ் கண்ணா, சானியா ஐயப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் இறலி படத்தின் முன்னோட்டம்.
கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜெய் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகும் படம் 'இறலி'. வெண்ணிஸ் கண்ணா நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார். பிரதீஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராஜா இசையமைக்கிறார். ஒரு நல்ல கருத்துடனும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த 'இறலி' படம் உருவாகி இருக்கிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

படத்தைப் பற்றி இயக்குநர் ஜெய். விஜயகுமார் கூறும்போது, "இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். மீறி அதனை செயற்கை வழிக்கு இழுத்தால், அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை எச்சரிக்கும் படமாக 'இறலி' இருக்கும். 'இறலி' என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விளைவு என்பதே அதன் பொருள். ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அதைத் தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை" என்கிறார் இயக்குனர்.
இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற அந்தாதுன் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த 'அந்தாதுன்' திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 'தி பியானோ டியூனர்' என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாக உருவான இந்த படம், வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.
பிரம்மாண்ட வெற்றியால், இந்தப் படத்தை இதர மொழிகள் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில், தமிழில் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்ற தனுஷ், சித்தார்த், பிரசாந்த் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் நடிகர் பிரசாந்த் அதனை கைப்பற்றினார். ஆயுஷ்மன் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரான இவர், ரீமேக் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். அவ்வாறு இவர் இயக்கிய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தான், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்கினால் சரியாக இருக்கும் என பிரசாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய் தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார்.
விஜய் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் தவிர மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பேராசிரியர் வேடத்தில் நடிப்பதால் தான் இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், பொங்கலை முன்னிட்டு, செகண்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 -ந்தேதி வெளியாகலாம் என தெரிகிறது. தொடர்ந்து 4, 5 நாட்கள் விடுமுறை வருவதால் இந்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், மாஸ்டர் படத்திற்காக விஜய் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். விஜய் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.






