என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சமந்தா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ரூ.15 கோடி வரை நஷ்டம் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழில் 2018ம் ஆண்டு வெளிவந்த ‘96’ படத்தை தெலுங்கில் சர்வானந்த், சமந்தா நடிக்க ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்து பிப்ரவரி 7ம் தேதி வெளியிட்டார்கள். முதல் நாளில் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற படம் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறிவிட்டது. 

    படம் தோல்வியை நோக்கிப் போவதாக கடந்த வாரமே சொன்னார்கள். அதன்படியே படம் எதிர்பாராத பெரும் தோல்வியைக் கொடுத்து தயாரிப்பாளரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழில் ‘96’ படம் வெளியாகும் முன்பே படத்தைப் பார்த்து தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கினார் பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜு. 

    சமந்தா

    அவருடைய இருபது வருட திரையுலக வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கியமான தோல்வி இது என டோலிவுட்டில் சொல்கிறார்கள். இப்படத்தை அவர் ரீமேக் செய்ய ஆரம்பிக்கும் முன்பே, தெலுங்கில் இப்படம் ஓடாது என நண்பர்கள் எச்சரித்தார்களாம். அதையும் மீறி அவர் தயாரித்து தோல்வியடைந்துவிட்டார் என்கிறார்கள். இப்படம் மூலம் சுமார் ரூ.15 கோடி வரை நஷ்டம் வரலாம் என்பது தகவல்.
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    பொன் மாணிக்கவேல்

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை மார்ச் மாதம் 6ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, தன்னுடைய முடியை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
    நடிகை ஓவியா எப்போதும் வெளிப்படையாக தன்னுடைய கருத்தை கூறுபவர். அதற்காகவே அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தபோது ஆர்மி துவங்கப்பட்டது. அப்போது அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர்.

    பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த கையோடு தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றினார் ஓவியா. தன் முடியை கேன்சர் பாதித்தவர்களுக்கு விக் செய்ய கொடுத்துவிட்டதாக கூறினார். அப்போது இருந்தே ஓவியா முடியை நீளமாக வளர்க்காமல் ஒரே விதமான ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். 

    ஓவியா

    இதை சில நாட்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓவியா, “நான் மூளையை
    வளர்க்க நினைக்கிறேன், முடியை அல்ல” என கூறியுள்ளார். மேலும் “வருத்தப்படாதீங்க.. நான் விக் வெச்சிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
    இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து எதிரொலியாக சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ பட தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஷங்கர், கமல், காஜல் அகர்வால் நூலிழையில் தப்பித்தனர்.

    இனிமேல் படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதனை முதன் முதலாகச் செயல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளது ‘மாநாடு’ படக்குழு.

    மாநாடு படக்குழுவினர்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் 2 நாட்கள் முடிந்துள்ளது.

    தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘இந்தியன் 2’ படப்பிடிப்புத் தள விபத்தை தொடர்ந்து, தனது ‘மாநாடு’ படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்துள்ளார். 30 கோடி ரூபாய் மதிப்புக்குக் காப்பீடு செய்துள்ளார். இதன் பிரீமியம் தொகை ஜிஎஸ்டி வரி சேர்த்து சுமார் 7.8 லட்ச ரூபாயாகும். ‘மாநாடு’ படக்குழுவினரின் இந்த முயற்சிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
    இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஓரினச்சேர்க்கை படத்தை குஷ்பு பாராட்டியுள்ளார்.
    இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’ஷுப் மங்கள் ஸ்யாதா ஸாவ்தான்’. இந்த படத்துக்கு இந்தி திரையுலகில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களின் திருமணத்துக்காக எப்படி பெற்றோரை சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதை இந்த படம் விளக்குகிறது. விமர்சகர்களும் இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்தப் படத்தில் நடித்ததற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கு நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குஷ்பு டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்த படத்தை எடுத்தவர்களுக்குப் பாராட்டுகள். அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இயக்குனர் ஹிதேஷ் கேவல்யா இந்தக் கதையை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். இப்படி ஒரு படத்தை எடுத்ததற்கு இதை எடுத்தவர்கள் பெருமைப்பட வேண்டும். இந்தக் குழுவுக்குப் பெரிய வாழ்த்துகள். ஆயுஷ்மான், சினிமாவில் புதிய பாதையைத் திறந்துள்ளீர்கள். வித்தியாசமாக யோசிக்க ஊக்குவித்திருக்கிறீர்கள்.

    குஷ்பு பாராட்டிய திரைப்படம்

    இதுவரை மூடி மறைவாக வைத்திருந்த கதைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கதாசிரியர்கள் தயாராக இருக்கின்றனர். நவீன சினிமாவுக்குப் புதிய பெயர் கிடைத்திருக்கிறது.

    இந்தப் படம் ஒரு நல்ல கலைப்படைப்பு. இந்தக் குழுவால் அட்டகாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நடித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்”. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
    அங்காடித் தெரு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது 59 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அங்காடித் தெரு படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அஞ்சலி. அங்காடித் தெரு படத்தின் வெற்றிக்கு பிறகு கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிய அஞ்சலி, ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக ஒப்பந்தமானார்.

    சமீபத்தில் இவர் நடித்த நாடோடிகள் 2 படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது, இவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு இல்லாத இவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

    பாலகிருஷ்ணா - அஞ்சலி

    இந்த படத்தை போயபட்டி ஸ்ரீனு இயக்க உள்ளார். 59 வயதாகும் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக 33 வயதாகும் நடிகை அஞ்சலி நடிக்க உள்ளார். அஞ்சலிக்கு முன் நடிகை நயன்தாரா மற்றும் அனுஷ்காவை நடிக்க வைக்க ஏற்பாடு செய்ததாகவும், ஆனால், அவர்கள் படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது அஞ்சலியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 

    இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்கும் தாதாவாகவும் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 65-வது படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மகிழ் திருமேனி, வெற்றி மாறன், பாண்டிராஜ், சுதா கொங்கரா ஆகியோரிடம் விஜய் கதை கேட்டு இருப்பதாக கூறப்பட்டது. 

    விஜய், லோகேஷ் கனகராஜ்

    இந்த நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் சொன்ன மற்றொரு கதையும் விஜய்க்கு பிடித்துள்ளதாகவும், அடுத்து அந்த படத்தில் நடிக்க அவர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    இயக்குனர் சாமி இயக்கத்தில் மாஹின், டாவியா நடிப்பில் உருவாகி வரும் அக்கா குருவி படத்தின் முன்னோட்டம்.
    புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய இயக்குனர் சாமி, அதனை தமிழில் 'அக்கா குருவி' என்ற பெயரில் படமாக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

    அக்கா குருவி படக்குழு

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
    விஷாலிடம் ரூ.40 கோடி கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இயக்குனர் மிஷ்கின் அதற்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். 

    இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தால், துப்பறிவாளன் 2 படத்திற்காக மிஷ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக விஷால் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    மிஷ்கின், விஷால்

    இதையடுத்து படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டு, மீதி படத்தை விஷாலே இயக்க உள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மிஷ்கின் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் விஷாலிடம் ரூ.40 கோடி கேட்டதாக வந்த தகவலில் உண்மை இல்லை. உண்மையில் அவரிடம் ரூ.400 கோடி கேட்டேன். இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. 

    அதற்கு ரூ.100 கோடி செலவாகி உள்ளது. மீதி காட்சிகளை படமாக்க ரூ.400 கோடி தேவை. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிக்கும் காட்சியை எடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு மட்டுமே ரூ.100 கோடி செலவாகும். எனவேதான் மொத்தமாக அவரிடம் ரூ.400 கோடி கேட்டேன்” என்று பதில் அளித்துள்ளார்.
    இந்தியன் 2 விபத்து குறித்து அப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
    கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    விபத்து நிகழ்ந்த பகுதி

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், இனி திரைப்படம் தயாரிக்கும் போது கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். இனிமேல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என கமல் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டதால் மீம் போட்டதாக கூறியுள்ளார்.
    இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீ கணேஷ். இவர் 8 தோட்டாக்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

    இயக்குனர் ஸ்ரீ கணேஷுக்கு மீம்ஸ் போடுவதிலும் ஆர்வம் அதிகமாம். இதனால் தனக்காக ஒரு மீம் போட்டு தரும்படி நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டதாகவும், இதற்காக ஒரு மீம்மை தயார் செய்து, இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    மீம்

    பிரியா பவானி சங்கர் நடித்த மாஃபியா திரைப்படம் கடந்த வாரம் ரிலீசான நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் அந்த மீம்மை உருவாக்கியிருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
    தமிழில் கேடி படத்தில் அறிமுகமான தமன்னா, பின்னர் அஜித், விஜய், சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரில் நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா, சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- “சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். நான் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு எனது பெற்றோர்கள்தான் காரணம். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அஜித்குமாருடன் சேர்ந்து நடித்தது எனக்குள் நல்ல அனுபவமாக இருக்கிறது. வாழ்க்கை என்பது சாகசம்.

    தமன்னா

    காஜல் அகர்வால் மிகவும் ஜாலியான நடிகை. நாங்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவோம். எல்லா விஷயங்களையும் அவர் தெரிந்து வைத்து இருக்கிறார். எனக்கு பிடித்த இடம் என்னுடைய வீடுதான். என்னை வீட்டில் தம்மு என்ற செல்ல பெயர் வைத்துத்தான் அழைக்கிறார்கள். எனக்கு பாவ் பாஜி மிகவும் பிடிக்கும் விரும்பி சாப்பிடுவேன்.

    கல்லூரி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை எரியும் பஸ்சில் படமாக்கினர். அதில் நடித்தது கஷ்டமாக இருந்தது. நான் நடித்த படங்களில் பாகுபலி என்னை மிகவும் கவர்ந்தது. அதில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். கேமரா முன்னால் நிற்கும் ஒவ்வொரு நாளுமே புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.”

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    ×