என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
    தமிழில் கேடி படத்தில் அறிமுகமான தமன்னா, பின்னர் அஜித், விஜய், சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரில் நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா, சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- “சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். நான் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு எனது பெற்றோர்கள்தான் காரணம். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அஜித்குமாருடன் சேர்ந்து நடித்தது எனக்குள் நல்ல அனுபவமாக இருக்கிறது. வாழ்க்கை என்பது சாகசம்.

    தமன்னா

    காஜல் அகர்வால் மிகவும் ஜாலியான நடிகை. நாங்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவோம். எல்லா விஷயங்களையும் அவர் தெரிந்து வைத்து இருக்கிறார். எனக்கு பிடித்த இடம் என்னுடைய வீடுதான். என்னை வீட்டில் தம்மு என்ற செல்ல பெயர் வைத்துத்தான் அழைக்கிறார்கள். எனக்கு பாவ் பாஜி மிகவும் பிடிக்கும் விரும்பி சாப்பிடுவேன்.

    கல்லூரி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை எரியும் பஸ்சில் படமாக்கினர். அதில் நடித்தது கஷ்டமாக இருந்தது. நான் நடித்த படங்களில் பாகுபலி என்னை மிகவும் கவர்ந்தது. அதில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். கேமரா முன்னால் நிற்கும் ஒவ்வொரு நாளுமே புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.”

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அருள்நிதி, புதிய படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளாராம்.
    ‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தை அடுத்து வெளியான ‘மௌனகுரு’ படம் சிறந்த வெற்றிபடமாக அமைந்தது. இப்படத்தை அடுத்து வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ’கே13’ ஆகியவை ரசிகர்களை கவர்ந்த படங்களாக அமைந்தது. இவர் தற்போது களாத்தில் சந்திப்போம் மற்றும் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், அருள்நிதி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'எருமை சாணி' விஜய் இயக்கும் படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளார். இப்படம் மூலம் 'எருமை சாணி' விஜய் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்க உள்ளார். 

    விஜய்-அருள்நிதி

    உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக அருள்நிதி 7 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார்.
    வாழ்க்கை வரலாறு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கையும் படமாகிறது. இவர் பாலம் அமைப்பு மூலம் சமூக சேவை பணிகள் செய்துவருகிறார். அமெரிக்காவில் வழங்கப்பட்ட ரூ.30 கோடி பரிசு தொகையை பொதுத்தொண்டுக்கே திருப்பி கொடுத்தார்.

    ஆங்கிலத்தில் வெளியான பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை கதை புத்தகத்தை படித்த அமிதாப்பச்சன், அவரது வாழ்க்கை என்னை நெகிழச்செய்கிறது. அவரது வாழ்க்கை கதை படத்தில் நானே நடிக்கிறேன். பாலம் கல்யாணசுந்தரத்தின் இளமைக்கால கதாபாத்திரத்தில் எனது மகன் அபிஷேக்பச்சன் நடிப்பார் என்று இந்தி தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷிடம் கூறியுள்ளார்.

    அமிதாப் பச்சன், பாலம் கல்யாணசுந்தரம்

    இதையடுத்து தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷ் சென்னை வந்து பாலம் கல்யாணசுந்தரத்தை சந்தித்து பேசி, பட வேலைகளை தொடங்கி உள்ளார். பாலம் கல்யாணசுந்தரத்தின் தாய் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. படத்துக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை பொதுத்தொண்டுக்கு வழங்க பாலம் கல்யாணசுந்தரம் முடிவு செய்துள்ளார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. 

    ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தமிழ் புத்தாண்டை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

    சூர்யா

    இந்நிலையில், சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மொங்கா, படத்தை தேசிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியில் ரீமேக் முடிவு செய்துள்ளாராம். சூரரைப்போற்று படத்தில் நடித்த அதே நடிகர்களை இந்தி ரீமேக்கிலும் நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம்பிரபு, மகிமா, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அசுரகுரு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து அவரது நடிப்பில் ‘அசுரகுரு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.

    இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மகிமா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அசுரகுரு படத்தின் ரிலீஸ் தேதி

    இந்நிலையில், இப்படத்தை மார்ச் 13ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    ஒரு அடார் லவ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், தற்போது உருவாகி வரும் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    கடந்த இரண்டு வருடங்கள் வரை மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். தனது புருவ சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரசித்தி பெற்ற இவர் நடிப்பில் கடந்த வருடம் ஒரு அடார் லவ் என்கிற படம் வெளியானது. அந்த படம் பெரிய அளவில் போகாவிட்டாலும் பிரியா வாரியருக்கு ஹிந்தி மற்றும் கன்னடத்தில் வாய்ப்புகள் தேடி வந்தன. 

    அந்த வகையில் இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்ட பிரியா வாரியர் தற்போது கன்னடத்தில் விஷ்ணுபிரியா என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிரபல மலையாள இயக்குனர் வி.கே.பிரகாஷ் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். கன்னடத்தில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சிரஞ்சீவியின் மகன் ஸ்ரேயா மஞ்சு இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். 

    பிரியா வாரியர்

    சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகின. காதல் கதை என்பதால் பிரியா வாரியர் நெருக்கமான காட்சிகளில் ஈடுபாடு காட்டி நடித்துள்ளார் என்பது இந்தப் புகைப்படங்களை பார்க்கும் போது நன்றாகவே தெரிகிறது. மேலும் லிப்-லாக் காட்சியிலும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
    தமிழில் இரும்புத் திரை மற்றும் தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை வைஜெயந்தி மாலா, 83 வயதிலும் கோல்ப் விளையாடி அசத்தியுள்ளார்.
    தமிழில் இரும்புத் திரை மற்றும் தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகையான வைஜெயந்தி மாலா. அவருக்கு தற்போது வயது 83. இவர் 75க்கும் அதிகமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அவர் தற்போது, கோல்ப் விளையாடுவது போன்ற படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

    அவர் இந்த வயதிலும் அசராமல் கோல்ப் விளையாடுவதைப் பார்த்து விட்டு, பலரும் அசந்து போய் உள்ளனர். இது குறித்து, வைஜெயந்தி மாலா கூறியிருப்பதாவது: எனக்கு எப்போதுமே கோல்ப் விளையாடுவது பிடிக்கும்; அந்த விளையாட்டை இளம் வயது முதல் நான் நேசிக்கிறேன். என்னுடைய கணவரும் என்னை கோல்ப் விளையாடவிட்டு அதைப் பார்த்து ரசிப்பார்.

    வைஜெயந்தி மாலா 

    என் இளமை காலங்களில் நான் குதிரை சவாரி செய்வேன். டேபிள் டென்னிஸ், பூப்பந்து விளையாடுவதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்த வயதிலும் கோல்ப் விளையாடுகிறீர்களே என பலரும் கேட்கின்றனர். தொடர்ந்து கோல்ப் விளையாடுவதாலேயே, என்னுடைய உடம்பு இன்றைக்கும் கோல்ப் விளையாட வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
    தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து டைட்டில் லுக் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங், ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
    என்ஜிகே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங்கிற்கு தெலுங்கில் புதிய படங்கள் இல்லை. ஆனால் இந்தியில் 3 படங்களில் நடித்து வருகிறார். 

    ரகுல் பிரீத் சிங்

    இந்நிலையில், தெலுங்கில் புதிய படங்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் அவர், உடல் எடையை குறைத்து எடுத்த புதிய படங்களை சமூகவலை தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதோடு ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர், உடற்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்குகிறார். தனது உடற்பயிற்சி வீடியோக்களை ஆண்களை விட பெண்களே அதிகம் லைக் செய்வதாக கூறுகிறார்.
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்திருக்கிறார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

    கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். அரவிந்த்சாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    பூர்ணா

    இந்நிலையில், இப்படத்தில் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். பூர்ணா நடிப்பது சசிகலாவின் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலனின் தற்போதைய கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் எதிர்த்து வருகிறார்கள்.
    பெங்காலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். அதன்பின் இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஒருகட்டத்தில் உடல் எடை கூடியதால் சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின் படுமோசமாக கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்த வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். 

    சமீபத்தில் தமிழில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்க்ளை கவர்ந்தார். இடையில் தமிழ் தயாரிப்பாளர்கள் நீயெல்லாம் நடிகையா என்று சொல்லி ஒதுக்கியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

    வித்யா பாலன்

    தற்போது அவரது சமூக வலைத்தள பக்கத்தில் மேலாடை நழுவி படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 41 வயதில் இதெல்லாம் தேவையா என்று கிண்டல் பண்ணி கொண்டு வருகிறார்கள். மேலும் அஜித் ரசிகர்கள் இதை எதிர்த்து வருகிறார்கள்.
    மாஸ்டர் படத்திற்காக விஜய் பாடியுள்ள குட்டி கதை பாடலை ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் பாராட்டி டுவிட் செய்துள்ளார்.
    விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

    இதனிடையே காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக்காக ’ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையில் விஜய் பாடிய இப்பாடல் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. 

    பில் டியூக்சின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், விஜய்யின் குட்டி கதை பாடலை ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான பில் டியூக் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறந்த இசை வீடியோ என குறிப்பிட்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஆகியோரை டேக் செய்துள்ளார்.
    ×