என் மலர்
சினிமா செய்திகள்
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘திரெளபதி’ படத்தின் முன்னோட்டம்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜுபின் இசையமைக்க மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறுகையில், இந்தப் படம் திரைக்கு வருவதே ஒரு வெற்றி. கூட்டு முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் ஒரு எள்ளளவு கூட குறையாமல் வந்து சேரும். இந்த விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்பட்டே தீரும்.

இது அனைத்து சமூகத்துக்குமான விழிப்புணர்வு தான். இதில் யாரையும் பெருமைப்படுத்தியோ, சிறுமைப்படுத்தியோ செய்த விழிப்புணர்வு அல்ல. அனைத்து தந்தை - மகளுக்குமான விழிப்புணர்வு. பாதிக்கப்படாமல் எந்தளவுக்கு விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
தனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டுள்ளனர். தாணு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். மேலும் சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ், கவுரி கிஷான், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர்.
சமீபத்தில் காதலர் தினத்தன்று விஜய் பாடிய குட்டி கதை பாடலை வெளியிட்டனர். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் சென்னையில் நடத்தவும் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் படத்தில் நடித்துள்ள சாந்தனுவும், “மாஸ்டர் குழுவினருடன் விரைவில் கோவைக்கு வருவோம். தயாராக இருங்கள்” என்று கூறியுள்ளார். விஜய்யின் முந்தைய மெர்சல், சர்கார், பிகில் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில்தான் நடந்தன. தற்போது மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் எனவே தான் கோவைக்கு மாற்றி இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.

இந்நிலையில், முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் அஜித்துடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். ஏற்கனவே விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் யோகிபாபு இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி ரே’ என்ற இந்தி படத்தில் நடிகர் தனுஷ் தமிழனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். தனுஷ் ஜோடியாக பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் நடிக்கிறார். அக்ஷய்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயரிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழிலும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.

இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் மதுரையை சேர்ந்த இளைஞனாக நடிக்கிறார். மேலும் இதன்கதை வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சாரா அலிகான் இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள ஜிப்ஸி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூ முருகன் தற்போது இயக்கி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். மேலும் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடித்ததால் இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 6-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் செக்ண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். அரவிந்த்சாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அ.தி.மு.க கட்சி கொடி நிறத்தில் ‘பார்டர்’ உள்ள சேலை அணிந்து கங்கனா ரனாவத் காட்சி அளிக்கிறார். இந்த தோற்றத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தலைவி படம் இந்தாண்டு ஜூன் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.
சிம்பு பட நடிகை ஒருவர் காதலித்துதான் திருமணம் செய்து கொள்வேன் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
பிரபல டைரக்டர் பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகளான கல்யாணி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹலோ என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஹீரோ’ படத்தில் நடித்தார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் அளித்த சமீபத்திய பேட்டியில், எனது வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க, ‘மணமகன் தேவை’ என்று பத்திரிகைகளில் விளம்பரம் தேவைப்படாது. நான் காதலித்துதான் திருமணம் செய்துகொள்வேன். காதலிக்கும் விஷயத்தில் நான் அதிக சினிமாத்தனத்தை எதிர்பார்க்கிறேன். எனக்கான ஆளைபார்க்கும்போது என் இதயத்தில் தீப்பொறி பறக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.
விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.
இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தால் துப்பறிவாளன் படத்திற்காக மிஸ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் துப்பறிவாளன் படத்தில் இருந்து மிஷ்கின் தற்போது விலகியுள்ளதாகவும், மீதி உள்ள காட்சிகளை விஷால் இயக்க போவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்கவில்லை.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் முன்னோட்டம்.
துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகி இருக்கிறது `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. தேசிங்கு பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைத்துள்ளனர். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி பேசுகையில், ''இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. மிக பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான். இக்கதைக்கு அவரை விட பொருத்தமான ஹீரோ யாருமில்லை. அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டு செல்வார் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் பாரம் படத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி உள்ளார்.
தேசிய விருதை வென்ற ‘பாரம்’ திரைப்படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பாரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஷ்கின் இந்த படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் என கூறி இருந்தார்.
Director #Mysskin’s heart-warming gesture for National award winning Tamil film #Baarampic.twitter.com/DRuSPkxGYE
— MalarCinema (@MalarCinema) February 23, 2020
சொன்னபடியே அவர் தற்போது அதை செய்து காட்டியுள்ளார். பாரம் படத்திற்காக அவர் தனது சொந்த செலவில் போஸ்டர் ஒட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ‘பாரம்’ படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பே கிடையாது என அப்படத்தின் இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை படத்தின் 3-ம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.
இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க உள்ளனர். காமெடி வேடங்களில் விவேக், யோகிபாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சத்யா இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக குஜராத்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குஜாரத்தில் ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம்.






