என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனக்கு படங்கள் கிடைப்பதை தடுக்க ஒரு கூட்டமே வேலை செய்வதாக நடிகர் சிம்பு கல்லூரி விழாவில் பேசியுள்ளார்.
    நடிகர் சிம்பு நீண்ட காலத்திற்கு பிறகு நேற்று இரவு ஒரு பிரபல கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பாட்டு பாடியும், நடனமாடியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதனையடுத்து பேசிய அவர் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு கொடுத்துவரும் அன்பு பற்றி உருக்கமாக பேசினார்.

    அதில், ‘எனக்கு படங்கள் கிடைப்பதை தடுக்க ஒரு கூட்டமே வேலை செய்கிறது. நீங்கள் (ரசிகர்கள்) இப்படி எனக்கு அன்பு கொடுத்தால் அவங்களுக்கு காண்டாகுமே. சிம்பு ரசிகன்னு பசங்க சொன்னா பொண்ணுங்க தைரியமா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க. 

    சிம்பு

    ஊரே என்னை கழுவி ஊற்றும் போது ‘என் தலைவன் திரும்ப வருவான்’னு எனக்கு ஆதரவா நிக்கிறான்னா, அவன் கட்டுன பொண்டாட்டிக்கும் லவ் பண்ற பொண்ணுக்காகவும் எப்படி நிப்பான்னு யோசிச்சு பாருங்க’ என கூறியுள்ளார்.
    மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கி இருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தின் விமர்சனம்.
    எழுத்தாளரான பாரதிராஜா லண்டனில் வசிக்கும் மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார். அங்கு அவருடன் பழகி இறந்த நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை தொடங்குகிறார். அப்போது அக்கா கணவரின் கொடுமையில் இருந்து தப்பித்த நட்சத்திராவை சந்திக்கிறார். தற்கொலை முடிவில் இருக்கும் நட்சத்திரா மனதை மாற்றிக்காட்டுவதாக உறுதி தருகிறார். 

    10 நாட்களில் மாற்ற முடியாவிட்டாலே தன் கையாலேயே கொன்றுவிடுவதாக சவால் விடுகிறார். அந்த 10 நாட்கள் பயணத்தில் நட்சத்திராவுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை புரியவைத்தாரா? பாரதிராஜா எடுத்துக்கொண்ட கடமை என்ன ஆனது? பாரதிராஜா, நட்சத்திரா இருவருக்கும் இடையே உண்டாகும் உறவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நட்சத்திரா, பாரதிராஜா

    பாரதிராஜா தனக்கான கச்சிதமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் அனுபவ நடிப்பை காட்டி இருக்கிறார். அவர் பேசும் சில வசனங்கள் அழுத்தமானதாக இருக்கின்றன. 

    ராசி நட்சத்திரா தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். பாரதிராஜாவிடம் அவர் குறும்பு செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. மவுனிகா, ஜோ.மல்லூரி இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

    நட்சத்திரா, பாரதிராஜா

    தற்கொலையோ, கொலையோ ஒரு உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை என்பதை படம் உணர்த்துகிறது. கதையில் இருந்த வலுவை திரைக்கதை, வசனங்களிலும் கொண்டு வந்திருந்தால் இந்த மரியாதையும் காலம் கடந்து பேசப்பட்டு இருக்கும். 

    லண்டன் அழகை சாலை சகாதேவனின் கேமரா அப்படியே கொண்டு வந்துள்ளது. ரகுநந்தனின் பின்னணி இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் ‘மீண்டும் ஒரு மரியாதை’ நட்பும் பயணமும்.
    இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
    கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. 

    இதனிடையே, கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    விபத்து ஏற்பட்ட பகுதி

    இந்த விபத்து தொடர்பாக, கிரேன் ஆபரேட்டர் ராஜன் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 தரப்பினர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரத்பேட்டை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    இந்தசம்பவம் குறித்து, நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் மற்றும் காயம் அடைந்தவர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை செய்ய நசரத்பேட்டை போலீசார் முடிவு செய்து இருந்தனர். இதனிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
    நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலன் தனக்காக உயிரையும் கொடுப்பான் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    டிவி சீரியலின் மூலம் பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர். அதனை தொடர்ந்து அவருக்கு வெள்ளிதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது கூட இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

    காதலனுடன் பிரியா பவானி சங்கர்

    இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரியாவிடம் அவரது காதலன் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: எந்த ஒரு பிரபல அந்தஸ்தும் இல்லாத நாளில் இருந்து எனக்கு அவரை தெரியும், அதுமட்டுமின்றி என்னை அப்பாவிற்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர் அவர் தான். இன்னும் சொல்லப்போனால் அவர் எனக்காக தனது உயிரை கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்கிறார். மேலும் இந்த உறவை நான் உண்மையாகவே மதிக்கிறேன்’. இவ்வாறு அவர் உருக்கமாக பேசியுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா பட விழாக்களில் கலந்துக் கொள்ளாமல் இருப்பதால் அவருக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’. இப்படத்தின் பிரி புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினர்களும் கலந்துக் கொண்டனர்.

    இதில் தயாரிப்பாளரும் நடிகருமான டி.சிவா பேசும்போது, ‘நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

    திரிஷா

    இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன்’ என்றார்.
    மதயானைக்கூட்டம் பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தேரும் போரும்’ படத்தின் முன்னோட்டம்.
    மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் தேரும் போரும். 

    இதில் கதாநாயகனாக அட்டக்கத்தி, குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்த தினேஷ் நடிக்கிறார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராவும், லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகிறனர். 

    இந்த படத்திற்காக ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடலாசிரியர் ஏகாதசி எழுதி அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

    இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் துவங்க இருக்கிறது. "தேரும் போரும்" திரைப்படத்தை வில்அம்பு, கென்னடி கிளப் படங்களை தயாரித்த தாய் சரவணனின் நல்லுசாமி பிக்ஸர்'ஸ் சார்பாக  நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகின்றனர்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் சமந்தா, ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்ததால் மிகவும் கோபப்பட்டிருக்கிறார்.
    சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து வந்ததை தொடர்ந்து பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 

    மேலும் கணவருடன் இணைந்தும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை சமந்தா ஜானு பட வெற்றிக்காக திருப்பதி கோவிலுக்கு படி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். 

    சமந்தா

    அதற்கு சமந்தா நடப்பது என்றால் ஒழுங்காக நட என்று கோபமாக கூறியுள்ளார். மேலும் இந்த இடத்தில் போட்டோ எடுக்குற வேலையெல்லாம் இங்கு வேண்டாம் என கடுமையாக கூறியுள்ளார். 
    அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கி இருக்கும் ‘திருவாளர் பஞ்சாங்கம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
    அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். இவருடன் சுதா, ஊர்வசி, காதல் சுகுமார், ஆடுகளம் நரேன் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    திருவாளர் பஞ்சாங்கம்

    காசி விஷ்வா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜே வி இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இப்படத்தை மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான ஸ்ரேயா, ஆடை வடிவமைப்பாளருடன் மிகவும் நெருக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழில் முன்னணி நடிகையாகி பின் இந்தி திரையுலகில் உச்சம் தொட்டவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் தனது முதல் படமாக எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ஸ்ரேயா. 

    கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் இவருக்கு பட வாய்ப்புக்கள் சரியாக அமையவில்லை. இதனால் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா. தற்போது ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரேயா கவர்ச்சியாக உடை அணிந்து இருந்தார்.

    ஆடை வடிவமைப்பாளருடன் ஸ்ரேயா

    அது மட்டுமல்லாமல் பிரபல ஆடை வடிவமைப்பாளருடன் ஸ்ரேயா எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காலை எடுத்து அவர் மீது வைத்து போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரேயா. இப்புகைப்படங்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது. பலரும் ஆடை வடிவமைப்பாளருடன் இவ்வளவு நெருக்கம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு ராமசாமி, சாயாதேவி, ஆடுகளம் முருகதாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கன்னி மாடம்’ படத்தின் விமர்சனம்.
    சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஶ்ரீராம் கார்த்திக்கும் ஆடுகளம் முருகதாசும் உறவினர்கள். ஊரில் வசதியாக வாழ்ந்த இவர்கள் இங்கு ஆட்டோ ஓட்டுவதற்கு பின்னணியில் ஸ்ரீராம் கார்த்திக் தந்தையின் சாதிவெறியால் ஏற்பட்ட சம்பவம் இருக்கிறது. 

    ஊரை விட்டு சென்னை வரும் காதல் ஜோடி விஷ்ணுவும் சாயாதேவியும் ஶ்ரீராம் கார்த்திக், முருகதாஸ் தங்கியிருக்கும் வீட்டின் அருகிலேயே குடி வருகிறார்கள். அவர்களை சாதிவெறி கொண்ட கும்பல் ஆணவக்கொலை செய்ய துரத்துகிறது. சாயாதேவியை கொன்று விட்டு, விஷ்ணுவை அழைத்துச் செல்வது அவர்கள் திட்டம். 

    அவர்களின் திட்டம் நிறவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    கன்னி மாடம் விமர்சனம்

    ஸ்ரீராம் கார்த்திக்குக்கு உள்ளுக்குள் சோகத்தை வைத்துக்கொண்டு நண்பர்களுக்காக சிரித்து வாழும் கதாபாத்திரம். அதை சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாம் பாதி முழுக்க உணர்வுபூர்வமான நடிப்பு.

    சாயாதேவிக்கு படத்தையே தாங்கும் கதாபாத்திரம். முதல் படம் என்பதை நம்ப முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். முதல் பாதியில் மட்டும் வரும் விஷ்ணுவும் கவர்கிறார். ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, பிரியங்கா சங்கர் மூவருமே காமெடியாக படத்தை நகர்த்துகிறார். உணர்வுபூர்வ காட்சிகளிலும் மூவரும் கலக்கி இருக்கிறார்கள். ஆட்டோ டிரைவராக வந்து காதலை, மனதுக்குள் புதைக்கும் வலினா, சாதிவெறியுடன் அலையும் கஜராஜ் என அனைவரும் கச்சிதமான தேர்வு.

    கன்னி மாடம் விமர்சனம்

    நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராகி இருக்கும் படம். முதல் படத்திலேயே சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதையை எழுதி, அதை நேர்த்தியாக சொல்ல முயன்றுள்ளார். இடைவேளை காட்சியும் இறுதிக்காட்சியும் அவரை தேர்ந்த இயக்குனராக அடையாளம் காட்டுகிறது.

    ஹரி சாயின் பின்னணி இசையும் ஹரிஷ் ஜெ இனியனின் ஒளிப்பதிவும் கதையோடு பயணிக்க உதவுகிறது. சாதிவெறி கொடுமையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்த கதையின் முடிவு அதிர்ச்சி கொடுக்கிறது. சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் சாதிவெறியுடன் போராடும் காதலையும் நேசத்தையும் இயல்பாக சொன்னதில் படம் மனதை கனக்க செய்கிறது.

    மொத்தத்தில் ‘கன்னி மாடம்’ சுவாரஸ்யம் குறைவு.
    சமீபத்தில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து நடிகர் சிம்பு, கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.
    சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர்தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

    எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது. இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக்கொள்கிறேன்.

    சிம்பு

    இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும். இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.

    பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    கோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடந்த சிவராத்திரி விழாவில் நடிகை காஜல் அகர்வால் கலந்துக் கொண்டு நடனம் ஆடியுள்ளார்.
    சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிதம்பரம், தஞ்சை, நெல்லை உள்ளிட்ட முக்கிய சிவாலயங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.

    கோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய ஆடல், பாடல், நடனம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் சிவராத்திரி விழா உற்சாகமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

    காஜல் அகர்வால்

    ஆதியோகி சிலை முன்பு லட்சக்கணக்கானோருடன் சிவராத்திரி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காஜல் அகர்வால் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டனர். காஜல் அகர்வால் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×