என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜிப்ஸி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
    ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    திரைப்பிரபலங்கள் பலரும் ஜிப்ஸி திரைப்படத்தை பாராட்டி வரும் நிலையில், படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ராஜுமுருகன், தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட ஜிப்ஸி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். கமல்ஹாசனுடன் இயக்குநர் கெளதம் மேனனும் திரைப்படத்தை பார்த்து வாழ்த்தினார். 

    ஜிப்ஸி படக்குழுவினருடன் கமல்

    இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
    நடிகை கீர்த்தி பாண்டியன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். 

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்யும் இப்படத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில், நடிகை கீர்த்தி பாண்டியன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.  
    திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி, தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் திரெளபதி. ரிச்சர்டு நாயகனாக நடித்திருந்த இப்படம் நாடக காதல், ஆணவக்கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு தடைகளை கடந்து வெளியான இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. 


    இந்நிலையில், இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்த படம் குறித்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “திரெளபதி-ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான். விரைவில் அறிவிப்பு வரும். காத்திருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
    வேதாளம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த ராகுல் தேவ், தன்னைவிட 18 வயது குறைந்த நடிகையை காதலித்து வருகிறார்.
    தமிழில் விஜயகாந்தின் நரசிம்மா, அர்ஜூனுடன் பரசுராம், ஜெய்ஹிந்த்-2, ஜெயம் ரவியின் மழை, லாரன்சின் முனி, சூர்யாவின் ஆதவன், விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, அஜித்துடன் வேதாளம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். இவருக்கு தற்போது 51 வயது ஆகிறது. ராகுல் தேவின் மனைவி ரினா கடந்த 2009-ல் புற்றுநோயால் இறந்து போனார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் உள்ளார். 

    இந்த நிலையில் ராகுல் தேவுக்கும், இந்தி நடிகை முக்தா கோட்சேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. முக்தா தமிழில் ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமியின் காதலியாக நடித்து இருந்தார். இந்தியிலும் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு 33 வயது ஆகிறது. இருவருக்கும் 18 வயது வித்தியாசம் உள்ளது. முக்தாவுடன் ஏற்பட்டுள்ள காதலை ராகுல் தேவ் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். 

    முக்தா கோட்சே, ராகுல் தேவ்

    அவர் கூறும்போது, “எனக்கும் முக்தாவுக்கும் உள்ள காதல் மறைந்த எனது மனைவியின் குடும்பத்தினருக்கு தெரியும். ஒரு திருமண விழாவில் இருவரும் சந்தித்து நட்பானோம். அதன்பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எங்களுக்கு இருக்கும் வயது வித்தியாசம் காதலுக்கு தடையாக இல்லை” என்றார்.
    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா சர்மா, புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
    பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து புது படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருகிறார். தற்போது அனுஷ்கா சர்மா சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளார். 

    அனுஷ்கா சர்மா

    பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடிப்பதுடன், அதை தயாரிக்கவும் செய்கிறார். 'உங்கள் நடிப்புக்கேற்ற கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் தான், நீங்களே படம் தயாரித்து, நடிக்கிறீர்களா' என்ற கேள்வியை மறுக்கிறார். ''படங்களில் நடிப்பதை இப்போது குறைத்து விட்டேன். சினிமாவில் எல்லா துறையிலும் கால்பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக படம் தயாரிக்கிறேன்; அவ்வளவு தான்’ என்று கூறியிருக்கிறார். 
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    சூர்யா

    இப்படத்தின் மாறா தீம் மற்றும் வெய்யோன் சில்லி ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. மண்ணுருண்ட என தொடங்கும் அந்த குத்துப்பாடலை பிரபல பாடகர் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். பாடலாசிரியர் ஏகாதசி இப்பாடலை எழுதியுள்ளார். 
    அறிமுக இயக்குநர் நூர்தீன் இயக்கத்தில் ஆதித் அருண் நடிப்பில் உருவாகி வரும் ரீல் அந்து போச்சு படத்தின் முன்னோட்டம்.
    “காலிடஸ் மீடியா” தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நூர்தீன் இயக்கும் “ரீல் அந்து போச்சு”.இப்படத்தின் கதாநாயகனாக ஆதித் அருண் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “24 KISSES” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.  இப்படத்திற்கு நந்தா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஓமர் பணிபுரிகிறார். பாஸ்கர் சுப்ரமணியன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். காலிடஸ் மீடியா சார்பில் வி.கே.மதன் மற்றும் குர்ரம் கௌதம் குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

    ரீல் அந்து போச்சு படக்குழு

    படம் குறித்து நாயகன் ஆதித் அருண் கூறியதாவது: “இந்தப் படம் எனக்கு தமிழில் ஒரு மறு அறிமுகம் மாதிரிதான். இந்தப் படம் நிச்சயமாக ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும். முழுக்க முழுக்க காமெடி கலாட்டாகள்  நிறைந்ததாக இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நூர்தீன். சினிமா தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட படம் இது. அவர்களது வலிகளை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும் “ரீல் அந்து போச்சு”, என்றார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்துக்காக மலையாள நடிகை ஒருவர் தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ளார்.
    மலையாளத்தில் கடந்த 2016ல் அனுராக கரிக்கின் வெள்ளம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

    ரஜிஷா விஜயன்

    கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தில் தென் தமிழகத்தை சேர்ந்த கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் ரஜிஷா. சமீபத்தில் இந்தப்படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளன. இதுவரை இவர் நடித்து வந்த கதாபாத்திரங்களுக்கு சம்பந்தமில்லாமல், இவரது நிஜ தோற்றத்தும் சம்பந்தமில்லாமல் ஆளே மாறிப்போயுள்ளார் ரஜிஷா விஜயன். 
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். 

    மணிரத்னம்

    பொன்னியின் செல்வன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் விக்ரம் பிரபு பேட்டி அளித்த போது “நீங்க இந்த படத்தில் நெகடிவ் ரோல் தான் நடிக்கிறீங்களா” என்று தொகுப்பாளர் கேட்க. அதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம் பிரபு “இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்” என்று கேள்வியை மழுப்பும் விதமாக பதிலளித்தார். இப்படத்தில் எனக்கு தெரிந்த வரை 27 பேர் நடித்து வருகிறார்கள்” என்றும் கூறினார்.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, நடிகர் சூரி, சதிஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா மற்றும் புனேவில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக மீண்டும் ஐதரபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

    கோபிச்சந்த்

    இந்நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் கோபிச்சந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. ஜெயம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த கோபிச்சந்த், தற்போது ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் விஜய் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    நடிகர் விஜய் நடிக்கும் 64-வது படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கி‌‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

    மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த மாதம் குட்டி ஸ்டோரி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருந்தாலும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு பகிரப்பட்டது. பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை பேசியது இப்பாடல். இதனை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதி இருந்தார்.

    விமான நிலையத்தில் விஜய்

    மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 15-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் வரும் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்துக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது ஒவ்வொரு படத்தின் படப் பிடிப்பு முடிந்த பிறகும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
    மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடைபயண பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நடைபயண பேரணி நடந்தது. பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு பேரணி தொடங்கியது. பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி எத்திராஜ் சாலை, கல்லூரி சாலை, ஹாடேவ்ஸ் சாலை, ஆயகர் பவன் வழியாக நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கன்வென்ட் அரங்கத்தை அடைந்தது. அங்கு பேரணி நிறைவு விழா நடந்தது. கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    நயன்தாரா

    பேரணியையொட்டி பெண் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நடிகை நயன்தாராவுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு கருப்பு நிற உடையில் ஸ்டைலாக வந்த நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    ×