என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்த காட்சியை விஜய் இயக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மாநகரம், கைதி படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி திரைக்கு வருகிறது. கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் உள்ளனர்.

    இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் சில காட்சிகளை விஜய் இயக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு இயக்குனர் ரத்னகுமார் திரைக்கதை எழுதி உள்ளார். இவர் அமலாபால் நடித்த ஆடை வெற்றி படத்தை இயக்கியவர். மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனராஜும், ரத்னகுமாரும் ஒரு காட்சியில் நடித்துள்ளனர்.

    விஜய்

    இந்த காட்சியை விஜய், கேமரா, ஆக்‌ஷன் சொல்லி டைரக்டு செய்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் இந்த காட்சியை இயக்குனர் இருக்கையில் அமர்ந்து அவர் படமாக்கியதாகவும்,  2 இயக்குனர்களுக்கும் நடிப்பு சொல்லி கொடுத்து கேமரா கோணத்தையும் பார்த்து விஜய் டைரக்டு செய்ததை படக்குழுவினர் கைதட்டி ரசித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
    ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள அருவா படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஹரி இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘அருவா’ என்று பெயர் வைத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன.

    இந்த நிலையில் சூர்யா படத்துக்கு அருவா என்ற தலைப்பு வைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதே பெயரில் பாடலாசிரியர் ஏகாதசி படம் இயக்கி உள்ளார். இயக்குனர் தருண்கோபி தயாரித்துள்ளார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனாலும் பெர்லின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளது.

    சூர்யா, ஹரி

    இதுகுறித்து ஏகாதசி கூறும்போது, “அருவா என்ற பெயரில் நாங்கள் படம் எடுத்துள்ளோம். இதே பெயரை சூர்யா படத்துக்கு வைத்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார். இதனால் சூர்யா பட தலைப்பு மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
    விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி எம்.எம்.ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பில் உருவாகும் அஹம் பிரம்மாஸ்மி படத்தின் முன்னோட்டம்.
    மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி எம்.எம்.ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க, வித்யா நிர்வாணா, மஞ்சு ஆனந்த் வழங்கும் படம் ‘அஹம் பிரம்மாஸ்மி’. இப்படம் அழுத்தமான கதையுடன் நேர்த்தியான வடிவத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது.

    இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. மெகா பவர் ஸ்டார் ராம்சரண் விருந்தினராக கலந்து கொண்டு கிளாப் அடிக்க, அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க படப்பிடிப்பு துவக்கப்பட்டது. தெலுங்கு சினிமாவின் பிரபல ஆளுமைகளான மோகன் பாபு, பருசேரி கோபாலகிருஷ்ணா திரைக்கதை பிரதியை படைப்பாளிகளிடம் தந்தனர். மஞ்சு லக்‌ஷ்மி, சுஷ்மிதா கோனிடேலா கேமாராவை இயக்க பேபி வித்யா நிர்வாணா முதல் ஷாட்டை இயக்கினார். விருந்தினர்கள் அனைவரும் படம் சிறப்பாக வர படக்குழுவை வாழ்த்தினர்.

    ஶ்ரீகாந்த் என் ரெட்டி இயக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இசை - அச்சு ராஜாமணி, ரமேஷ் தமிழ்மணி, ஒளிப்பதிவு - சன்னி குருபாதி, பாடல்கள் - ராமஜோகய்யா சாஸ்த்ரி மற்றும் ஆனந்த் ஶ்ரீராம், படத்தொகுப்பு - தம்மிராஜு, கலை இயக்கம் - விவேக் AM, சண்டைப்பயிற்சி இயக்கம் - பீட்டர் ஹெய்ன், கூடுதல் வசனங்கள்- திவ்யா நாரயணன், கல்யாண் சக்ரவர்த்தி, இணை இயக்கம் - தொட்டம்புடி சுவாமி, நிர்வாக தயாரிப்பாளர் - வெங்கட் சல்லகுல்லா.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் பெயரில் போலி அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். ரசிக மன்றங்களை கலைத்துவிட்ட அஜித் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கியே இருக்கிறார். ஆனால், அவருடைய ரசிகர்கள் சமூகவலை தளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

    நேற்று அஜித் பெயரில் ஒரு கடிதம் சமூகவலைதளங்களில் பரவியது. அது அஜித் கையெழுத்துடன் அவரது லெட்டர் பேடில் வெளியானதால் பரபரப்பானது. அந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.

    அஜித்

    இதற்கான காரணங்களைப் பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. சைபர் கிரைம் அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். 

    இதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்த போது, “அந்த அறிக்கை போலியானது என்று விளக்கம் அளித்துள்ளனர். 
    நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிப்பதாக ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் கூறியிருக்கிறார்.
    ஸ்ரீதேவி மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார், அவரது மகளும், நடிகையுமான ஜான்வி கபூர். 

    சமீபத்தில், தன் தாயின் இரண்டாவது நினைவு நாள் அன்று, தன் குழந்தை பருவத்தில் எடுத்த, கறுப்பு - வெள்ளை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, 'ஒவ்வொரு நாளும் உங்கள் இழப்பை உணர்கிறேன்' என, பதிவிட்டிருந்தார் ஜான்வி. 

    ஜான்வி கபூர்

    ''படப்பிடிப்பு, சுற்றுலா, தோழியருடன் ஊர் சுற்றுதல் என, நாட்கள் பரபரப்பாக நகர்ந்தாலும், என்னுடன் இப்போது அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன். அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.
    தமிழில் மேயாதமான் படம் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அஹம் பிரம்மாஸ்மி படத்தில் நடித்து வருகிறார்.
    மேயாதமான் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் தற்போது ‘மாஃபியா’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அருண்விஜய், பிரசன்னா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

    தற்போது மஞ்சு மனோஜ் நடிக்கும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. ராம்சரண் விருந்தினராக கலந்து கொண்டு கிளாப் அடிக்க, அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க படப்பிடிப்பு துவக்கப்பட்டது. 

    படக்குழுவினர்

    தெலுங்கு சினிமாவின் பிரபல ஆளுமைகளான மோகன் பாபு, பருசேரி கோபாலகிருஷ்ணா திரைக்கதை பிரதியை படைப்பாளிகளிடம் தந்தனர். மஞ்சு லக்‌ஷ்மி, சுஷ்மிதா கோனிடேலா கேமாராவை இயக்க பேபி வித்யா நிர்வாணா முதல் ஷாட்டை இயக்கினார். விருந்தினர்கள் அனைவரும் படம் சிறப்பாக வர படக்குழுவை வாழ்த்தினர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தை இயக்குனர் ஶ்ரீகாந்த் என்.ரெட்டி இயக்குகிறார்.
    வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை இயக்கிய செல்வராகவன், அடுத்ததாக புதுப்பேட்டை 2 படத்தை இயக்குவதாக அறிவித்திருக்கிறார்.
    தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தார். இறுதியாக சூர்யாவை வைத்து என்.ஜி.கே. என்ற படத்தை இயக்கினார். 

    சமீபத்தில் செல்வராகவன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டதாகவும், படத்துக்கான கதையை எழுத தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார். இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

    புதுப்பேட்டை படத்தில் தனுஷ்

    இந்நிலையில், புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை இயக்க இருப்பதாக செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதில் தனுஷுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகையை 2017-ல் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் கைதான நடிகர் திலீப் வழக்கில் சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்த முன்னணி நடிகையை 2017-ல் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கைதானார்.

    85 நாட்கள் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணை கொச்சி கோர்ட்டில் விறுவிறுப்பாக நடக்கிறது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    திலீப்

    இந்த வழக்கில் 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட நடிகை ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளார். இயக்குனர் லால், நடிகை ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் ஆகியோரும் வாக்குமூலம் அளித்தனர்.

    திலீப் ஏற்கனவே நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். பாதிக்கப்பட்ட நடிகையும், மஞ்சுவாரியரும் நெருங்கிய தோழிகள். எனவே மஞ்சுவாரியரும் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார். தற்போது நடிகை காவ்யா மாதவனின் தாயார் ஷியாமளா, நடிகர் இடைவேள் பாபு ஆகியோரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    தமிழில் வாட்ச்மேன், கோமாளி படங்கள் மூலம் பிரபலமான சம்யுக்தா ஹெக்டே, ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
    வாட்ச்மேன், கோமாளி படங்கள் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ள சம்யுக்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சி அறிவுரைகளையும், உடற்பயிற்சிகளையும் பகிர்ந்து வருகிறார்.

    இடையிடையே மாடல் அலங்கார போட்டோசூட்களை செய்து வந்தாலும் முழுநேரமாக உடற்பயிற்சியிலே அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது வித்தியாசமான ஒரு உடற்பயிற்சி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

    சம்யுக்தா ஹெக்டே

    சம்யுக்தா உடலை வில்லாய் வளைத்து நிற்க அவரின் மேல் மற்றொருவர் இடுப்பை பிடித்த படி தலை கீழாக அந்தரத்தில் நிற்கும் அந்த உடற்பயிற்சியை ஆச்சரியப்படும் அளவிற்கு அருமையாக செய்திருக்கிறார். இதற்கு பதிவாக உங்க காபிய விட ஸ்ட்ராங்கு என்றும், என் இடுப்பு பொய் சொல்லாது என்றும் கூறியுள்ளார்.
    மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜாய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் விமர்சனம்.
    நடிகையாக இருக்கும் கஸ்தூரி, மலை வாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் மலையில் கம்பெனி தொடங்குவதற்காக அங்கு தீ வைத்து அங்கு வாழும் மக்களை விரட்ட முயற்சிக்கிறார்கள். இந்த தீ இயற்கையாக வந்தது இல்லை, செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அறிந்த கஸ்தூரி, அதற்கான ஆவணங்களை தயார் செய்து ரிப்போர்ட்டராக இருக்கும் வரலட்சுமியிடம் கொடுக்க நினைக்கிறார்.

    இந்நிலையில், மர்ம நபரால் கஸ்தூரி கொலை செய்யப்படுகிறார். இதையறிந்த வரலட்சுமி, கஸ்தூரி சொன்ன ஆவணங்களை கைப்பற்றி மலை வாழ் மக்களுக்கு தீர்வு காணவும், கஸ்தூரியை கொலை செய்தது யார் என்பதையும் கண்டறிய முயற்சி செய்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பணம் பறிக்கும் கும்பலிடம் வரலட்சுமி சிக்குகிறார். 

    வெல்வெட் நகரம் விமர்சனம்

    இறுதியில் பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து வரலட்சுமி தப்பித்தாரா? ஆவணங்களை கைப்பற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் ரிப்போர்ட்டராக நடித்திருக்கும் வரலட்சுமி, தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக இல்லாமல் மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அர்ஜாய். 

    காமெடி நடிகராக வலம் வந்த ரமேஷ் திலக் இப்படத்தில் நல்லவரா, கெட்டவரா என்று சிந்திக்க வைத்திருக்கிறார். பாடகியான மாளவிகா சுந்தர், இந்த படத்தில் நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    வெல்வெட் நகரம் விமர்சனம்

    வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களை உட்கார வைத்திருக்கிறார். மெதுவாக தொடங்கும் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இறுதியில் ஒரு இடத்தில் கச்சிதமாக நிற்கிறது.

    பகத் குமாரின் ஒளிப்பதிவும், சரண் ராகவனின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் துணையாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வெல்வெட் நகரம்’ சுமாரான நகரம்.
    ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு, மதுபாலா, ராகுல் விஜய், நாசர், மனோபாலா, சாம்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் காலேஜ் குமார் படத்தின் விமர்சனம்.
    நண்பனின் ஆடிட்டர் அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார் பிரபு. மகன் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் பிரபு நண்பனால் அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் அந்த அலுவலகத்தில் இருந்து நிற்கும் பிரபு தன் மகனை ஆடிட்டர் ஆக்குவேன் என்று சபதம் ஏற்கிறார். 

    நல்ல பையனாக வளரும் ராகுல் விஜய் கல்லூரி வந்த பிறகு படிப்பில் தடுமாறுகிறார். பெற்றோர் மனது கஷ்டப்பட கூடாது என்று முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனின் மார்க் ஷீட்டை காட்டி ஏமாற்றுகிறார். இவை எல்லாம் ஒரு கட்டத்தில் பிரபு, மதுபாலாவிறகு தெரிய வருகிறது. மகனை கண்டிக்கும்போது அவர் அப்பாவை பார்த்து கல்லூரிக்கு சென்று படிக்க முடியுமா? என்று சவால் விடுகிறார். அந்த சவாலை ஏற்றுக்கொண்டு பிரபுவும் கல்லூரி செல்ல தொடங்குகிறார். அதன் பின் என்ன ஆகிறது? என்பதே கதை.

    பிரபுவுக்கு இது அல்வா சாப்பிடுவது போன்ற கதாபாத்திரம். வெளுத்து வாங்குகிறார். முதல் பாதியில் அழுத்தமாக இருக்கும் பிரபுவின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் செய்யும் காமெடி அலப்பறைகள் சிரிக்க வைக்கின்றன. இறுதிக்காட்சியில் தன் அனுபவ நடிப்பால் கலங்க வைத்துவிடுகிறார்.

    காலேஜ் குமார் விமர்சனம்

    மதுபாலா வழக்கமான அம்மா வேடம் என்றாலும் இடைவேளை காட்சியில் மகனிடம் ஆவேசப்படும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். மகன் மீது கோபம் இருந்தாலும் அவன் கஷ்டப்பட கூடாது என்று உருகும் இடங்களும் அட்டகாசம்.

    ராகுல் விஜய்யும் சிறப்பாக நடித்துள்ளார். பார்க்க பக்கத்து வீட்டு பையன் போல இருந்தாலும் பொறுப்பு இல்லாமல் திரிவது, பொறுப்பு வந்த பிறகு அப்பாவை உணர்வது என்று கலக்கி இருக்கிறார். 

    பிரியா வட்லமணிக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம். மனோபாலா, நாசர், சாம்ஸ் ஆகியோரும் காட்சிகளை கலகலப்பாக நகர்த்தியுள்ளனர்.

    குடும்ப கதையாக எழுதி அதில் கலகலப்பான காட்சிகளை வைத்து நல்ல பொழுதுபோக்கு படத்தை ஹரி சந்தோஷ் கொடுத்துள்ளார். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அனைவரும் ரசிக்கும் வகையிலும் நல்ல கதையை உருவாக்கி அதை கமர்சியலாகவும் சொல்லி இருக்கிறார்கள். 

    குரு பிரசாத்தின் ஒளிப்பதிவு ரம்மியம். குதூப் ஈ க்ருபாவின் இசையில் பாடல்களில் இளமை தெறிக்கிறது. 

    மொத்தத்தில் ‘காலேஜ் குமார்’ கலகலப்பு.
    ×