என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி பலியானார்.
    இயக்குனர் ஷங்கரிடம்  உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத். இவர் ஷங்கரின் ஐ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 4ஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அருண் பிரசாத்

    கடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித் வலிமை படக்குழுவுக்கு அன்புக்கட்டளை போட்டுள்ளாராம்.
    கொரோனா ஊரடங்கால் திரைப்பட தொழில் 52 நாட்கள் முற்றிலுமாக முடங்கியது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தியேட்டர்களை மூடினர். இதனிடையே ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்கு பிந்தைய டப்பிங், ரீ ரிக்கார்டிங், எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க அரசு கடந்த சில தினங்களுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து இந்தியன் 2, மாஸ்டர் போன்ற படங்களின் பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  

    அஜித்

    இதேபோல் வலிமை படத்தின் பின்னணி பணிகளும் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வலிமை படத்தின் பணிகள் கொரோனா பிரச்சனைகள் முடிந்து மீண்டும் இயல்புநிலை திரும்பிய பிறகுதான் தொடங்க வேண்டும் என தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத்திடம் ஆஜித் கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமா தொழிலாளர்கள் நலன்கருதி அஜித்தின் அன்பு கட்டளையை போனி கபூரால் மீற முடியவில்லையாம். இதனால் வலிமை பட வேலைகள் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 
    கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டருக்கு பதிலாக வருகிற 29-ந் தேதி ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர். இதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தையும் தியேட்டர்களுக்கு பதிலாக ஒடிடி தளத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயனண் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். சுமார் 4.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை இரண்டு மடங்கு லாபத்துக்கு பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்றுள்ளனர். 

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே29-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால் 9 இந்தி படங்கள் நேரடியாக டிஜிட்டல் தளங்களில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கொரோனா ஊரடங்கினால் சினிமா தொழில் முடங்கி உள்ளது. இதனால் ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தி படங்களையும் இணையதளத்தில் வெளியிட தயாராகி வருகிறார்கள். அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிதாபோ, செஹ்ரே, வித்யாபாலன் நடித்துள்ள கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை கதை ஆகிய படங்களை இணையதளத்தில் வெளியிட ஆலோசிக்கின்றனர். 

    பாலிவுட் பட போஸ்டர்

    நவாசுதின் சித்திக் நடித்துள்ள கூம்கேது படம் வருகிற 22-ந் தேதி இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து வெற்றிகரமாக ஓடிய காஞ்சனா படம் இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்க லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இந்த படத்தையும் இணையதளத்தில் வெளியிட ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

    வருண் தவான் நடிக்கும் கூலி நம்பர் 1, கியாரா அத்வானியின் இந்தூ கி ஜவானி, ஜான்வி கபூரின் குஞ்ஜன் சக்சேனா, அபிஷேக் பச்சன் நடித்துள்ள ஜூந்த் ஆகிய படங்களும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
    சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ஆபாசமாக கமெண்ட் அடிப்பதாக இளம் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    தமிழில் வெண்ணிலா வீடு படத்தில் நடித்தவர் சிரிண்டா. கேரளாவை சேர்ந்த இவர் போர் பிரண்ட்ஸ் படத்தில் அறிமுகமாகி 22 பிமேல் கோட்டயம், 101 வெட்டிங்ஸ், தட்டத்தின் மறையத்து, மங்கலீஷ், ஆடு, லோஹம், ராணி பத்மினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மம்முட்டி, பகத் பாசில், நிவின் பாலி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்தும் நடித்து இருக்கிறார்.

    சிரிண்டா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்த தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த புகைப்படங்களை பார்த்து சிலர் ஆபாச கருத்துகள் பதிவிட்டனர். அவரது தோற்றம் பற்றி அவதூறான வார்த்தைகளையும் பகிர்ந்தனர். இது சிரிண்டாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    சிரிண்டா

    இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியதாவது: சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சுதந்திரமும் இல்லை. எனது சமூக வலைத்தள பக்கத்தில் சிலர் ஆபாசமான கருத்துகளை பதிவிடுகின்றனர். இதனை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

    நான் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், என்ன கருத்துகளை பதிவிட வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்லித்தர தேவை இல்லை. எனது சமூக வலைத்தளத்தில் வந்து உங்கள் வக்கிரங்களை காட்ட வேண்டாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
    கைவிடப்பட்ட படத்தை கையிலெடுத்த நடிகர் கிஷோர், அதன்முலம் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் கிஷோர், பெங்களூருவைச் சேர்ந்தவர். கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவரை, ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டர் வெற்றிமாறன் அறிமுகம் செய்தார். வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த கிஷோர், படத்துக்கு படம் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார்.

    ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வட சென்னை’, ‘றெக்க’ ஆகிய படங்களில் இவருடைய திறமையான நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து கிஷோர், ‘கதவ்’ என்ற கன்னட படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தை ராகவ் என்ற டைரக்டர் இயக்கி வந்தார். கிஷோருடன், அனுபமா குமார் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்தார். என்ன நடந்ததோ, தெரியவில்லை. 

    கிஷோர்

    ‘கதவ்’ படத்தின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு படப்பிடிப்பை தொடர முடியவில்லை. அந்தப் படம் கைவிடப்பட்டதாக பேசப்பட்டது. ‘கதவ்’ படத்தின் கதை மீது கிஷோருக்கு ஈர்ப்பு இருந்தது. அந்தப் படத்தை கைவிட அவர் விரும்பவில்லை. அதனால், அவரே ‘கதவ்’ படத்தின் டைரக்டர் ஆனார். முழு வேகத்துடன் அவர் அந்த படத்தை இயக்கி வருகிறார்.
    மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக திரிஷா நடித்து வந்த படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
    மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்துக்கு, ‘ராம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், மோகன்லால் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். 50 சதவீத படம் வளர்ந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டு கேரளாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டாலும், உடனடியாக, ‘ராம்’ படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், மீதமுள்ள காட்சிகளை லண்டனில் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு அனுமதி கிடைப்பது, சுலபம் அல்ல. 

    ஜீத்து ஜோசப், திரிஷா, மோகன்லால்

    உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா, வெளிநாட்டு படப்பிடிப்புக்கும் தடையாக இருந்து வருகிறது. எனவே, ‘ராம்’ படத்தை அப்படியே கிடப்பில் போடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த இடைவெளியில், குறைந்த பட்ஜெட்டில் வேறு ஒரு படத்தை இயக்க டைரக்டர் ஜீத்து ஜோசப் முடிவு செய்து இருக்கிறார்.
    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் 1970 மற்றும் 80-களில் அபூர்வ ராகங்கள், ஆடு புலி ஆட்டம், அலாவுதீனும் அற்புத விளக்கும், 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. தற்போது மீண்டும் புதிய படத்தில் இருவரும் இணைய தயாராகி உள்ளனர். 

    இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்றும், கமல்ஹாசன் தயாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்த படத்தை கைவிட முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தற்போது தகவல் பரவி வருகிறது. 

    ரஜினிகாந்த், கமல்ஹாசன்

    ரஜினிகாந்த், சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விரைவில் முடித்து விட்டு கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ‘அண்ணாத்த’ படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டனர். ஆனால் கொரோனா ஊரடங்கினால் ‘அண்ணாத்த’ படம் பாதியில் நிற்கிறது. 2 மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை. 

    கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த தாமதம் காரணமாக ‘அண்ணாத்த’ வெளியீடு அடுத்த வருடம் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தீவிர அரசியலில் ஈடுபடும் முடிவில் இருக்கிறார். எனவே கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
    சமூக வலைத்தளத்தில் தன்னை திட்டிய நபருக்கு மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
    நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் அன்னையர் தினத்தன்று நயன்தாரா அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் குழந்தையுடன் இருக்கும் நயன்தாரா சிலவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவருக்கு அன்னையர் தின வாழ்த்து கூறி இருந்தார்.

    விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்கள் இதுவரை பார்த்திடாதவை என்பதால் அது இணையத்தில் அதிகம் வைரலானது.

    இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு, முதலில் உங்க அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் சொல்லுங்க" என சில மோசமான வார்த்தைகளில் ஒரு நபர் விக்னேஷ் சிவனை திட்டியிருந்தார்.

    அவருக்கு பதில் கொடுத்த விக்னேஷ் சிவன், "வாழ்த்துக்கள் கூறிவிட்டேன். உங்களுக்கும் Happy Mothers Day.. உங்களை போன்ற ஒரு அழகான, மரியாதை தெரிந்த, இரக்க மனம் கொண்ட ஒருவரை அவர் பெற்றெடுத்துள்ளாரே" என மறைமுகமாக அந்த நபரை தாக்கியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஷில்பா ஷெட்டி தனது கணவரை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
    தமிழில் விஜய் உடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ஷில்பா ஷெட்டி, மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவாவுடன் நடித்தார். பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

    இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் செய்த டிக் டாக் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில், பிஸியாக வேலைபார்க்கும் ஷில்பா ஷெட்டிக்கு அவரது கணவர் ராஜ்குந்த்ரா முத்தம் கொடுக்க வர, அவரைத் தடுத்து, தான் வேலை செய்து கொண்டிருக்கும் போது முத்தம் கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்.

    அப்போது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், நானும் பல தடவை சொல்லிவிட்டேன். கேட்க மாட்டேன் என்கிறார் என்று ஷில்பா ஷெட்டியைப் பார்த்து கூறுகிறார். இதையடுத்து தனது கணவரை வெளுத்து வாங்குகிறார் ஷில்பா ஷெட்டி.

    வேடிக்கையான இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    ரேடியோ பெட்டி இயக்குனர் இயக்கும் பாலிவுட் படத்தில் நயன்தாரா பட வில்லன் கதாநாயகனாக நடிக்கிறார்.
    விஷன் 3 கிளோபல் தயாரிக்க, அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிக்க, ‘பன்சூரி’ திரைப்படத்தை எழுதி, இயக்குவதன் மூலம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார்.

    ஒரு 8 வயது சிறுவன் தன்னில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதுவாகவே மாற நினைக்கிறான். அந்த பெருமுயற்சியின் காரணமாக அவனது வாழ்க்கை பயணத்தில் அவன் சந்திக்கும் வெற்றி-தோல்விகள், மகிழ்வுகளும்-இகழ்வுகளும், அவனை எப்படி புடம் போடுகின்றன, இறுதியில் அவன் இலக்கை அடைந்தானா இல்லையா என்பதை பல்வேறு சுவராஸ்யங்களுடனும், எதிர்பாராத  திருப்பங்களுடனும், ஜனரஞ்சகமான ஒரு புதிய பரிமாணத்தில் கதைகளத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், ரிதுபர்னா சென்குப்தா, அங்கன் மாலிக் முன்னணி வேடங்களில் நடிக்க, அவர்களோடு இணைந்து உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், டேனிஷ் ஹுசைன், மேஹெர் மிஸ்திரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.   
    அனுராக் காஷயப்
    ‘பன்சூரி’ படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

    பிரபல பாலிவுட் நடிகரான அனுராக் காஷ்யப் தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×