என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கன்னட திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கிய மைக்கேல் மது உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
    கன்னட திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கியவர் மைக்கேல் மது. இவர் ஆரம்பத்தில் நடன இயக்குனராக இருந்து, பின்னர் சிவாராஜ்குமார் கதாநாயகனாக நடித்த ஓம் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. பட வாய்ப்புகளும் குவிந்தன. அதன் பிறகு ஏகே. 47, நீலாம்பரி, கஜனூரா, சூர்யவம்சா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். 300 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

    பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்த மைக்கேல் மதுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 51.

    கொரோனா ஊரடங்கினால் மைக்கேல் மது இறுதிச்சடங்கில் நடிகர்-நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இவருக்கு, மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கன்னட திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்தனர்.
    ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
    ஹாலிவுட் பட உலகையே திரும்பி பார்க்க வைத்த படம், ‘பாகுபலி’. அதன் இரண்டாம் பாகமான ‘பாகுபலி 2’வும் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, வசூலில் மிகப்பெரிய சாதனை புரிந்தது. டைரக்டர் ராஜ மவுலிக்கு மேலும் புகழ் சேர்த்தது.

    தற்போது ராஜமவுலி, ‘ஆர் ஆர் ஆர்’ (ரவுத்திரம் ரணம் ருத்திரம்) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். ராம்சரண் ஜோடியாக அலியாபட்டும், ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக இங்கிலாந்து நடிகை டெய்சியும் நடிக்கிறார்கள். “இந்தப்படத்தில் தமன்னா இல்லையா?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அவர்களை ராஜமவுலி ஏமாற்ற விரும்பவில்லை. ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில், தமன்னாவுக்காக ஒரு சண்டை காட்சியை வைத்து இருக்கிறார். “இந்த சண்டை காட்சி தமன்னாவுக்காக திணிக்கப்படவில்லை. திரைக்கதையில் இப்படி ஒரு காட்சி வருகிறது” என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.
    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு இணையாக தமிழ் நடிகை சாயிஷா நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
    ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது தீபிகா படுகோனே நடித்த பாஜிராவ் மஸ்தானி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
    நடிகை சாயிஷா
    ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த நடன வீடியோ வீட்டிலேயே படமாக்கப்பட்டதாக சாயிஷா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஒரு நிமிட வீடியோ ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தீபிகா படுகோனேவின் மிக அருமையான டான்ஸ் மூவ்மெண்ட்டுக்களை அப்படியே இந்த நடனத்தில் பதிவு செய்துள்ள சாயிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
    நடிகர் சிம்புவின் வருங்கால மனைவியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
    நடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில், சிம்பு, பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேஷிடம் கூறுகிறார்.

    இந்த வீடியோவைப் பதிவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை பிந்து மாதவி, சரியான கொள்கை சிம்பு, நாங்கள் எல்லோரும் அந்தப் பெண்ணை சந்திக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    நடிகை பிந்து மாதவி
    சிம்புவின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
    தனிமைப்படுத்தும் விதியை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து கடந்த வாரம் தேனிக்கு வந்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை சிவப்பு மண்டல பகுதியாக உள்ளது. அங்கிருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

     அந்த வகையில் சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவும் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். சுகாதாரத்துறையினர் வேண்டுகோளை ஏற்று அவரும் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். 

    இந்நிலையில் போடி அருகே முந்தல் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில், கொரோனா தடுப்பு பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கருத்தையும் பதிவிட்டுள்ளார். 

    இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனிமைப்படுத்தும் விதிமுறையை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா? என்ற சர்ச்சையை இந்த புகைப்படம் உருவாக்கி உள்ளது. இதுகுறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வத்திடம் கேட்டபோது, “இயக்குனர் பாரதிராஜா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், தனிமைப்படுத்திக் கொண்ட காலக்கட்டத்தில் குரங்கணிக்கு சென்றாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
    சினிமா படப்பிடிப்புகளுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
    கொரோனா பாதிப்பின் காரணமாக 22.3.2020 முதல் தற்போது வரை லாக்டவுன் தொடர்ந்து அமுலில் உள்ளது. தற்போது தமிழக முதல்வர் சில பணிகள் செய்து கொள்ள 11.5.2020 முதல் தளர்வுகள் அறிவித்தார். அதில் சினிமா சம்பந்தப்பட்ட அறிவிப்பாக போஸ்ட் புரோடக்ஷன் எனும் திரைப்படம் படப்பிடிப்புக்கு பின்னால் உள்ள ஸ்டுடியோ பணிகளை 5 பேர் கொண்ட டெக்னீஷியனுடன் சமூக இடைவெளி விட்டு பணிபுரிய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதிலிருந்து பல படங்களின் பின்னணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகளுக்கு அனுமதி எப்போது வழங்கப்படும் என்று சினிமா உலகினர் ஏதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிப்பது பற்றி மே.17 க்கு பின் முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை மட்டும் என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
    பாடகியாகவும் நடிகையாகவும் பல பரிமாணங்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவர் ஆண்ட்ரியா. தனக்கு கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே படங்களில் பணியாற்றும் வழக்கம் கொண்ட ஆண்ட்ரியா, மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. அவரது கதாபாத்திரம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், நடிகை ஆண்ட்ரியா மிகவும் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் படத்தில் தனது பங்கைப் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

    மாஸ்டர் படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டுக்கு ஆண்ட்ரியா வராத போதும் கூட, மேடையிலேயே விஜய், ‘ஆண்ட்ரியா தொடர்ந்து அதிக படங்களில் பணியாற்ற வேண்டும்‘ எனக் கூறியிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
     மாஸ்டர் படத்தின் கார் சேஸிங் காட்சி.
    இந்நிலையில், நேர்காணலில் தனது ரசிகர்களிடம் பேசிய இவர், மாஸ்டர் படப்பிடிப்பின் போது தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகையாகி விட்டதாக ஒப்புக்கொண்டார். மேலும், மாஸ்டர் படத்தில் ஒரு கார் சேஸிங் காட்சி சிறப்பு அம்சமாக இருக்கும் என்றும் அந்த காட்சி தனக்கு மறக்கமுடியாத ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
    சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பேசிய திரிஷா, இதுவரை காதலை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் திரிஷா. இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தனது 37 -வது பிறந்த நாளை கொண்டாடிய திரிஷாவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்தே திரிஷா பாடல்களுக்கு டப் மேஷ் செய்து வெளியிடுவது, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அப்படி ரசிகர்களுடனான ஒரு உரையாடலின் போது ரசிகர் ஒருவர் அவரின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த திரிஷா தனது வாழ்வில் இதுவரை அப்படியான காதலைச் சந்திக்க வில்லை” என்று கூறியுள்ளார்.
    நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் தற்போது இல்லை என்று இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் ஷங்கரிடம்  உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 4ஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    இயக்குனர் வெங்கட் பாக்கர்
    இவரது மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 'எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்... அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.. நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்' 

    இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
    மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் மேதாவி படத்தில் அர்ஜுன், ஜீவா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
    மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. இந்நிறுவனம் தயாரிக்கும் முன்றாவது படம் இது. 

    இன்று (மே 15) பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்காக 5kg அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 kgs) இன்று வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். 

    தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் நேர்த்தியான கதையுடன் சமூக கருத்தையும் பதிவிடும் பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். 

    ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் “ஆக்சன் கிங்” அர்ஜுன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார். 
    மேதாவி
    நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஓய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குனர் பா.விஜய் கூறியுள்ளார்.
    இந்தி மொழி பேச தெரியாததால் முன்னணி இயக்குனர் ஒருவரின் பட வாய்ப்பை இழந்ததாக இளம் நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.
    ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் கைவசம், நரகாசுரன், கண்ணை நம்பாதே, காட்டேரி போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தி பேச தெரியாததால் பாலிவுட் பட வாய்ப்பை இழந்ததாக ஆத்மிகா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

    ஆத்மிகா

    மேலும் அவர் கூறுகையில், பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு தமிழ், இந்தி என இரு மொழிகளும் பேச தெரிந்த நடிகை தான் வேண்டும் என கூறியதால், அப்பட வாய்ப்பு கைநழுவியது. தற்போது இந்தி கற்று வருகிறேன் என கூறியுள்ளார். ஆனந்த் எல் ராய், இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    1983-ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள 83 படத்தின் முன்னோட்டம்.
    விளையாட்டுப் போட்டிகளை கதைக்களமாக கொண்ட படங்கள், எப்போதுமே வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கருவாக வைத்து, ‘83’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகிறது. 1983-ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய அணி சிறப்பாக ஆடி, இறுதி சுற்று வரை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன், இந்திய அணி வீரர்களே அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இவற்றுக்கெல்லாம் மாறாக, இந்திய அணி மிக சிறப்பாக ஆடி கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த உண்மை சம்பவங்களுடன் சில சுவாரசியமான சம்பவங்களையும் சேர்த்து, 83 படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள்.

    தீபிகா படுகோன், விஷ்ணுவர்தன், இந்தூரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கபீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது.
    ×