என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் அருண்விஜய் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.

    மிஷ்கின், அருண்விஜய்

    இந்நிலையில் மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மிஷ்கினின் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அருண்விஜய் கைவசம் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள் போன்ற படங்கள் உள்ளது. இதுதவிர வல்லினம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இதையடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
    இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் நிலையத்துக்கு நேற்று கோபி பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். 

    அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். அதன்பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் கோபி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் டாப்சி, அவர்கள் சம்மதித்தால் தான் காதலரை மணப்பேன் என தெரிவித்துள்ளார்.
    சமீபகால கதாநாயகிகளில் கவர்ச்சியையும், நடிப்பு திறனையும் சேர்த்து வழங்குபவர், டாப்சி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களின் ரசனை அறிந்து படங்களில் நடித்து வருவதாக டாப்சி கூறுகிறார். இவருக்கும், பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இரண்டு பேரின் காதலுக்கும் பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியிருக்கிறது. 

    டாப்சி

    இதுபற்றி டாப்சியிடம் கேட்டபோது: “எனக்கும், பேட்மிண்டன் வீரர் மத்யாசுக்கும் காதல் இருந்து வருவது உண்மைதான். என் குடும்பத்தினர் அனைவரும் சம்மதித்தால்தான், காதலரை மணப்பேன். ஒருவேளை பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காவிட்டால், எங்கள் திருமணம் ரத்தாகி இருக்கும். திருமணத்துக்குப்பின், இருவருமே அவரவர் வேலைகளை செய்வது என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்த முடிவில் இரண்டு பேரும் உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் டாப்சி.
    விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜிடம் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
    நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும்,  விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பின்னணி பணிகள் தாமதமானது.

    லோகேஷ் கனகராஜ்


    இந்நிலையில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்‌‌ஷன் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுத்ததை தொடர்ந்து பின்னணி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புகைப்படம் ஒன்று பதிவு செய்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதை கூறினார். இதற்கு ரசிகர்கள் பலரும் அந்த டிரைலரை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்றும் படத்தின் அப்டேட் ஏதாவது சொல்லுங்கள் என்றும் பதிவு செய்து வருகிறார்கள்.
    தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அருண் விஜய் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்து இருக்கிறார்.
    மாஃபியா படத்திற்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் 'அக்னி சிறகுகள்', 'சினம்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன.

    இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுகிறார்.

    பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ''எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள்.  உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மிஷினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    நான் கிழே விழுந்த சமயத்தில் இருந்து சரியாக ஒரு வாரத்திற்கு காலில் வீக்கம் இருந்தது. நல்லவேளை என் தலையில் அடிபடவில்லை. கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்'' என்று ரசிகர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
    மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் மேதாவி படத்தின் முன்னோட்டம்.
    மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் மூன்றாவது படம் இது.

    பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.

    நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார். தயாரிப்பு மேற்பார்வை – கணேஷ்

    இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குனர் பா.விஜய் கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது கணவருடன் பைக்கில் ஊர் சுற்றி இருக்கிறார்.
    சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருந்த சமந்தா, அவரது கணவர் நாகசைதன்யாவுடன் பைக்கில் வெளியில் சென்றதை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை 15 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்திருப்பது ஆச்சரியம்.

    எப்படி பிரித்து கொடுக்க போகிறேன் என்று தெரியவில்லை என்று தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-

    வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் முக்கியம். சந்தோஷம் இல்லாமல் பணம், புகழ் இருந்தும் பயன் இல்லை. நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. உண்மையாக இருப்பதுபோல் போலியாக நடிப்பவர்களையும் பிடிக்காது. எனது எண்ணங்களில் ஆன்மீக தாக்கம் இருக்கும். வெற்றி, தோல்வி இரண்டும் என்னை பாதிக்காது. நீங்கள் உங்களை மாதிரி இருங்கள். மற்றவர்களுக்காக தன்னை மாற்ற கூடாது.

    முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை. அப்படி வந்தால் அது கவர்ச்சிதான். பழகி ஒருவரை ஒருவர் புரிந்து அதன்பிறகு காதலிப்பதுதான் உண்மையானது. எனக்கு இன்னும் காதல் வரவில்லை. ஒரு உறவில் மோசம் என்பது இருக்கவே கூடாது. ஒருவேளை நான் காதலிக்கும் நபர் மோசம் செய்தால் அவரை விட்டு விடுவேன். கவர்ச்சி என்பது அழகில் இல்லை. அவர்களுக்குள் இருக்கிற தன்னம்பிக்கையில் வரும்.

    உலகம் முழுவதும் சுற்ற வேண்டும். பல நாட்டு உணவுகளை ருசித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏனெனில் நான் பெரிய சாப்பாட்டு பிரியை. கொரோனா ஊரடங்கினால் நான் நடித்த படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. அந்த படங்களுக்கு கால்ஷீட்டை எப்படி பிரித்து கொடுக்க போகிறேன்? என்று தெரியவில்லை.

    இவ்வாறு கூறினார்.
    காமெடி நடிகராக இருக்கும் வடிவேலுவின் கிண்டலுக்கு ரஜினிகாந்த் போனில் பாராட்டி இருக்கிறார்.
    நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த மாதம் திருச்செந்தூரில் அளித்த பேட்டி பரபரப்பானது. அந்த பேட்டி பற்றி வடிவேலு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் திருச்செந்தூர்ல சாமி கும்பிட்டுட்டு வெளியே வரும்போது என்கிட்ட மைக்கை நீட்டி `ரஜினி அரசியலுக்கு வந்தா நான் கட்சியைப் பார்த்துப்பேன். முதலமைச்சரா வேறு ஒருத்தரை வைக்க போறேன்று சொல்றாரே’னு கேள்வியை கேட்டுப்புட்டாங்க.

    அப்போ `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும்.

    பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன்’னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு மதுரைக்கு வந்துட்டேன். திடீர்னு ஒரு நாள் போன். `என்ன வடிவேலு எப்படி இருக்கீங்க?’ன்னு ரஜினி சார் பேசுனார். `

    ரொம்ப நல்லா பேசுனீங்க’னு பாராட்டுனார். அதுக்கப்புறம் ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசிட்டு இருந்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகிவரும் தலைவி படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். விஜய் டைரக்டு செய்கிறார். கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீயும் ‘தலைவி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கங்கனா அறிவித்து உள்ளார். இவர் இந்தியில் சல்மான்கானுடன் ‘மைனே பியார் கியா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘தலைவி’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

    பாக்யஸ்ரீ, கங்கனா ரணாவத்


    இந்த படத்தில் நடிப்பது குறித்து பாக்யஸ்ரீ கூறும்போது, “தலைவி படத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் என்னால்தான் திருப்பம் ஏற்படுவது போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கங்கனா ரணாவத்துக்கும், எனக்கும் அதிகமான காட்சிகள் உள்ளன. படத்தில் எனது தோற்றம் வித்தியாசமாக இருக்கும்” என்றார்.
    ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று பிரபல நடிகர் வெளியிட்டிருக்கிறார்.
    இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடிக்கு சென்ற மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஜி.வி.பிரகாஷ் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    குழந்தைக்கு என்ன பெயர் சூட்டியுள்ளனர் என தற்போது வரை ஜி.வி.பிரகாஷ் அறிவிக்கவில்லை. அதனால் அதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருந்தனர்.

    நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும்  சைந்தவி


    இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மகளுக்கு 'அன்வி' என பெயரிடப்பட்டிருப்பதாக பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இது பற்றி கமெண்டில் கேட்ட நிலையில், குழந்தையின் பெயரை அந்த பதிவில் இருந்து நீக்கிவிட்டார்.
    கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதாரத்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க பொது மக்கள் முன்வரவேண்டும் நடிகர் ஷாருக்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
    நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

    நாம் அனைவரும் கண்ணால் பார்க்க முடியாத கொரோனா வைரசால் நெருக்கடியை அனுபவித்து வருகிறோம்.

    இந்த வைரசை எதிர்த்து போராடும் நம் நாட்டின் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவத் துறை வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு நிகரானவர்கள். இத்தகைய பணியை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கையுறைகள், முக கவசங்கள், பாதுகாப்பு உடை போன்ற உபகரணங்கள் தேவைப்படும்.

    எனவே நமது சுகாதார வீரர்களை பாதுகாக்க உதவும் வகையில் எனது மீர் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கலாம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தும் துணிச்சலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுக்களை ஆதரிப்போம்.

    அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஒரு சிறிய உதவி நீண்ட தூரம் பயணிக்க நமக்கு தேவையானதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×