என் மலர்tooltip icon

    சினிமா

    நயன்தாரா
    X
    நயன்தாரா

    ரேடியோ பெட்டி இயக்குனர் படத்தில் நயன்தாரா பட வில்லன்

    ரேடியோ பெட்டி இயக்குனர் இயக்கும் பாலிவுட் படத்தில் நயன்தாரா பட வில்லன் கதாநாயகனாக நடிக்கிறார்.
    விஷன் 3 கிளோபல் தயாரிக்க, அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிக்க, ‘பன்சூரி’ திரைப்படத்தை எழுதி, இயக்குவதன் மூலம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார்.

    ஒரு 8 வயது சிறுவன் தன்னில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதுவாகவே மாற நினைக்கிறான். அந்த பெருமுயற்சியின் காரணமாக அவனது வாழ்க்கை பயணத்தில் அவன் சந்திக்கும் வெற்றி-தோல்விகள், மகிழ்வுகளும்-இகழ்வுகளும், அவனை எப்படி புடம் போடுகின்றன, இறுதியில் அவன் இலக்கை அடைந்தானா இல்லையா என்பதை பல்வேறு சுவராஸ்யங்களுடனும், எதிர்பாராத  திருப்பங்களுடனும், ஜனரஞ்சகமான ஒரு புதிய பரிமாணத்தில் கதைகளத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், ரிதுபர்னா சென்குப்தா, அங்கன் மாலிக் முன்னணி வேடங்களில் நடிக்க, அவர்களோடு இணைந்து உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், டேனிஷ் ஹுசைன், மேஹெர் மிஸ்திரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.   
    அனுராக் காஷயப்
    ‘பன்சூரி’ படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

    பிரபல பாலிவுட் நடிகரான அனுராக் காஷ்யப் தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×