என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை அனுஷ்கா சர்மாவின் வெப் தொடரில் குறிப்பிட்ட இனத்தவரை இழிவுபடுத்தியதாக மனித உரிமை கமிஷனில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பிரபல இந்தி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா படங்களை தயாரித்தும் வருகிறார். என்.எச்.19, பில்லாயூரி, பாரி ஆகிய இந்தி படங்கள் அவரது தயாரிப்பில் வந்தன. தற்போது வெப் தொடர்கள் தயாரிக்க தொடங்கி உள்ளார்.

    அவர் தயாரித்துள்ள பாதல் லோக் என்ற வெப் தொடர் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் அருணாசல பிரதேச மாநிலத்தில் வாழும் குறிபிட்ட இன மக்களை அவதூறு செய்வதுபோன்ற காட்சிகள் இருப்பதாக அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளனர். 

    அனுஷ்கா சர்மா

    அந்த மனுவில், “வெப் தொடரில் எங்கள் இனத்தவரை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. இதனால் எங்கள் இனத்தவர்கள் வேதனையில் உள்ளனர். என்வே அந்த தொடரை தயாரித்துள்ள அனுஷ்கா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    இதுபோல் அந்த இனத்தை சேர்ந்த இளைஞர் அமைப்பினர் அனுஷ்கா சர்மாவுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே உத்தரபிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏ நந்தகிஷோர் குர்ஜார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி வெப் தொடரில் பயன்படுத்தி உள்ளதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் கள்ளக்காதலை ஊக்குவிப்பது போல் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்து 2010-ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்த படத்தின் தொடர்ச்சியாக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் புதிய குறும்படத்தை ஐபோனில் படமாக்கி கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். 

    கொரொனா ஊரடங்கினால் சிம்புவும், திரிஷாவும் அவரவர் வீட்டில் இருந்து செல்போனில் உரையாடுவதுபோல காட்சிகள் உள்ளன. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்தியாக நடித்த சிம்புவும் ஜெஸியாக வந்த திரிஷாவும் காதலிப்பது போன்றும் இறுதியில் காதல் கைகூடாமல் திரிஷா இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதுபோலவும் காட்சி இருந்தது. 

    சிம்பு, திரிஷா

    குறும்படத்தில் பலவருடங்களுக்கு பிறகு இருவரும் பேசிக்கொள்வதுபோல் இடம்பெற்றுள்ள வசனங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. திரிஷாவிடம் சிம்பு போனில் ‘இப்போதும் உன்னை காதலிக்கிறேன்’ என்கிறார். அதற்கு திரிஷா, ‘எனக்கு 2 குழந்தைகள்’ உள்ளனர் என்கிறார். 

    திருமணமான பெண்ணிடம் பழைய காதலன் எனக்கு நீ வேண்டும் என்று சொல்வது கள்ளக்காதலை ஊக்குவிப்பதுபோல் உள்ளது என்றும், அடுத்து கவுதம் மேனன் இயக்க உள்ள விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் கள்ளக்காதல் கதைதானா? என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கண்டித்து வருகின்றனர். கேலி செய்து மீம்ஸ்களும் வருகின்றன.

    திரவுபதி பட இயக்குனர் மோகனும் கவுதம் மேனனை விமர்சித்து, தனது டுவிட்டர் பக்கத்தில், “நிறைய இளைஞர்கள் உங்கள் படங்களை பின்பற்றுகின்றனர். அவர்கள் மனதில் விஷத்தை கலக்க முயற்சி செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார். கவுதம் மேனனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
    சென்னையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் டிரஸ்டில் தங்கி இருக்கும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இவர் அறிவித்தார். 

    இந்நிலையில், அசோக் நகரில் அவர் நடத்தி வரும் டிரஸ்ட்டை சார்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து விசாரித்த போது, 10- மாணவிகள், 5- மாணவர்கள், 3 - பணியாளர்கள், 2 - சமல்காரர்கள் என 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இவர்கள் அனைவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிகேட் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போயிருக்கிறது. 

     இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிக்கேட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக இருந்தது. 

    மாஸ்டர் சர்டிபிகேட்

     இது குறித்து விசாரித்த போது, அது முற்றிலும் பொய்யான ஒரு புகைப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டில் இருந்து அதுபோன்ற எந்த விஷயமும் வெளியாகவில்லை என்பது உறுதியாக கூறப்படுகிறது. 
    கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபல பெண் இயக்குனர் தன் காதலனை கரம்பிடித்து இருக்கிறார்.
    கன்னட திரைப்பட உலகில் பிரபல இயக்குனராக இருப்பவர், சுமனா கித்தூர். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா கித்தூர் ஆகும். இவர் சிவமொக்காவை சேர்ந்த என்ஜினீயரான சீனிவாசை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வைத்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். 

     இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இருவரும் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்றிருந்தனர். கொரோனா ஊரடங்கால் கர்நாடகம் திரும்ப முடியாமல் அவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். இதனால் சுமனா கித்தூரும், சீனிவாசும் புதுச்சேரியில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்டனர். 

     இந்த நிலையில் சுமனா கித்தூர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது காதலனை கரம்பிடித்த புகைப்படங்களை வெளியிட்டார். அதில் அவர், எங்களது திருமணம் புதுச்சேரியில் எளிமையாக நடந்தது. இதில் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர் என்று தெரிவித்துள்ளார். தற்போது சுமனா கித்தூர்- சீனிவாசின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னட திரைப்பட பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
    தற்காலிகமானது தான்... அதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரபல நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியிட முன்வந்துள்ளனர். இதனை தியேட்டர் அதிபர்கள் எதிர்க்கின்றனர். இதுகுறித்து வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “கொரோனா ஊரடங்கால் படங்களை தியேட்டர்களில் திரையிட முடியாமல் 2 மாதங்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர். இதனால் புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட சிலர் முன் வந்துள்ளனர். இப்போதுள்ள நிலைமையில் சினிமா படங்களை தியேட்டர்களில் வெளியிட வாய்ப்பே இல்லை. வேறு வழி இல்லாமல்தான் இணையதளத்தில் வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

    வித்யா பாலன்


    இந்த நிலைமையை தியேட்டர் உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தியேட்டர்கள் திறந்ததும் எப்போதும் போலவே நிலைமை மாறி விடும். அப்போது படங்களெல்லாம் தியேட்டர்களுக்கு வரும். தியேட்டர்களில் படங்கள் பார்ப்பதைத்தான் எல்லோரும் விரும்பவும் செய்வார்கள். ஆனால் வேறு வழி இல்லாமல் தற்போது நிலவும் விசித்திரமான சூழ்நிலையில் ஓ.டி.டி. மாதிரி ஒரு சாதனம் படங்கள் ரிலீசுக்கு பயன்பட்டு இருப்பது ஒரு நல்ல விஷயம்.

    ஓ.டி.டி.யில் சினிமா படங்கள் வெளியாவது தற்காலிகமானதுதான். அதை தியேட்டர் உரிமையாளர்கள் உணர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்”.

    இவ்வாறு வித்யாபாலன் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் யோகிபாபு. இந்த புதிய படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரிக்க இருக்கிறார். ஷான் என்பவர் இப்படத்தை இயக்கயிருக்கிறார்.

    இயக்குனர் பா ரஞ்சித்


    இது குழந்தைகள் சம்பந்தப்பட்ட படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

    பா ரஞ்சித் இதற்கு முன் நீலம் புரோடக்சன் மூலமாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இந்தியாவில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரசின் தாக்கமும் அதன் காரணமாக நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை ரொம்பவும் பாதித்துள்ளன. இந்தநிலையில் தற்போதுதான் ஊரடங்கு விதிகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு மக்கள் வெளியில் நடமாட ஆரம்பித்துள்ளார்கள்.

    மகேஷ் பாபு


    அவ்வாறு விதிமுறைகள் ஓரளவு தளர்த்தப்பட்டாலும் மாஸ்க் அணிவதை மறக்கவே கூடாது என வலியுறுத்தியுள்ளார் நடிகர் மகேஷ்பாபு.

    அவர் கூறியதாவது ’இப்போது தான் மெதுவாக வெளிவர தொடங்கியுள்ளோம். ஆனால் நிச்சயமாக இந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமான ஒன்று. ஒவ்வொரு முறை வெளியே போகும் போதும் மாஸ்க் அணிய மறக்காதீர்கள்’ இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டு குணமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா. சுதா கொங்காரா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சூரரைப்போற்று படம் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ரிலீசாகவிருக்கிறது.

    சூர்யா


    இதற்கிடையே ஒரு சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும், அதிலிருந்து அவர் மீண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் #GetWellSoonSuriyaAnna என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு ஆர்கே.செல்வமணி பதிலளித்துள்ளார்.
    ஊரடங்கினால் சினிமா தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திரைத்துறையில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர், தவிக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக சமூகவலைதளங்களில் அறிவித்தனர்.

    ஆர்.கே செல்வமணி


    இந்நிலையில், சென்னை வடபழனியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தொழில்துறைக்கு கிடைக்கக் கூடிய எந்தவித உதவிகளும் தயாரிப்பாளர்களுக்கோ தொழிலாளர்களுக்கோ கிடைப்பதில்லை என்றார். சினிமாவை தொழில்துறை என்று அரசு கூறுவதால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கக் கூடிய வீடு உள்ளிட்ட சலுகைகளும் கிடைப்பதில்லை என தெரிவித்தார். இதற்கு மத்திய மாநில அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    ரஜினி, விஜய், அஜித் சம்பளம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் வணிகத்திற்கு ஏற்ப சம்பளம் குறைக்க வேண்டிய நிலை என்பது கட்டாயம் வரும் என கூறினார்.
    பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் என்று நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். ஓய்வு நேரத்தை செல்லப்பிராணிகளை கொஞ்சுதல், உடற்பயிற்சி, சமையல் செய்தல், புத்தகம் படித்தல், நடனம் கற்றல், ஓவியம் வரைதல் என்று கழிக்கின்றனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க சமூக விலகலை கடைபிடிக்கும்படி பேசி வீடியோவும் வெளியிடுகின்றனர்.

    அமலாபால்


    இந்த நிலையில் அமலாபால் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    “கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இந்த ஊரடங்கில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம்.

    வாழ்க்கை என்றாலே போட்டி பந்தயம் என்று நினைக்கும் மனோபாவத்தில் இருந்து மாற வேண்டும். பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள். இந்த ஊரடங்கு காலத்தில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றோ, புத்தகங்கள் படிக்கவில்லை என்றோ வருத்தப்பட வேண்டாம். இது கற்றுக்கொள்வதற்கான நேரமோ அல்லது உற்பத்தியை பெருக்குவதற்கான நேரமோ இல்லை. அமைதியாக இருங்கள். ஒருவர் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று அவர் பின்னால் ஓட வேண்டிய தேவை இல்லை.”

    இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.
    சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் திர்த்தபதி இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்த டுவிட் செய்துள்ளார்.
    இந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் திர்த்தபதி (89). உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜமீன்தார் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் “சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா.  அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

    “சீமராஜா” என்னும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் “சிங்கம்பட்டி சீமராஜா” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×