என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதி, அனிருத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
    பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன், தனது இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியானார். மாஸ்டர் பட வெளியீட்டுக்காக காத்திருக்கும் அவர் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

    பல்வேறு விஷயங்களை சோஷியல் மீடியா மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து வரும் மாளவிகா மோகனன், மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, “நிகழ்ச்சிகளில் முகத்தை எப்போதும் நேராக வைத்திருக்க முடிவதில்லை. விஜய்சேதுபதி, அனிருத்திடமிருந்து அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

    அந்தப் புகைப்படத்தில் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் மேடையைக் கவனித்தபடி அமர்ந்திருக்க மாளவிகா மட்டும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான் பாடி நடித்து அசத்திய பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். ரம்ஜான் தினத்தில் அவரது படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த படமும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக அவரது ரசிகர்களுக்கு 'பாய் பாய்' என்ற பாடலை வெளியிட்டு உள்ளார். இந்தப் பாடலை சல்மான் கானே பாடி நடித்தும் உள்ளார்.

     "இந்த ரம்ஜானுக்கு எந்த படமும் வெளியிட முடியவில்லை. அதற்கு பதிலாக எனது அற்புதமான ரசிகர்களுக்காக சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டுளேன். 'பாய் பாய் என்ற இந்த பாடல் சகோதரத்துவத்தையும்
    ஒற்றுமையையும் கொண்டாடும் ஒரு பாடல். இந்தப் பாடலை உருவாக்கும் போது நான் எப்படி ரசித்தேனோ அதைப் போல் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்", என சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

    இரண்டு வாரங்களுக்கு முன்பு சல்மான் கான் வெளியிட்ட 'தேரே பினா' பாடல் யூடியூபில் 3 கோடி பார்வைகளைத் தொட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா வைரஸ் பயமும், ஊரடங்கும் தேவை இல்லாதது என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.
    நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கையில், “தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தை பருவத்திலேயே எதிர்கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவு பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது.

    கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை, என்பது தான் என் கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சலி, இருமல் போன்றவைகள் வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சலி காணாமல் போய்விடுகிறது. மேலும், தூதுவலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது.

    இப்படி சலி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே போட்டிருக்க கூடாது என்பது தான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் கேள்விக்குறியாகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறது.

    பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவு விட வேண்டும், என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களையும் திறக்க வேண்டும், என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
    நடிகை ராசி கண்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ராசி கண்ணா, ஒரு சில தெலுங்கு படங்களில் பாடியுள்ளார். 

    இந்நிலையில், லாக்டவுனால் வீட்டிலேயே இருக்கும் ராசி கண்ணா, கிட்டார் இசைத்துக்கொண்டே பாடல் பாடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: "இசை - இதயத்தின் மொழி. கிட்டார் இசைக்க கற்று வருகிறேன். எனக்கு பிடித்த பாடலை வாசிக்கிறேன். எனது இந்த முயற்சி உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஒருவரை தனிமையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    திருவனந்தபுரத்தை அடுத்த வெஞ்ஞாரமூட்டில் கள்ளச்சாராய வழக்கில் ஒரு வாலிபரை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே அந்த கைதிக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    சுராஜ்

    இதற்கிடையே இன்ஸ்பெக்டர், மலையாள நடிகர் சுராஜ், எம்.எல்.ஏ. முரளி ஆகியோருடன் ஒரு விழாவில் பங்கேற்றுள்ளது தெரியவந்தது. பின்னர், நடிகர் சுராஜ், எம்.எல்.ஏவையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சுராஜ் 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் அக்னிச்சிறகுகள் படத்தின் முன்னோட்டம்.
    விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’.  ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.ஏ.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். 

    அக்னிச்சிறகுகள் படக்குழு

    மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி சீனு எனும் கதாபாத்திரத்திலும், அருண் விஜய் ரஞ்ஜித் எனும் கதாபாத்திரத்திலும், அக்‌ஷரா ஹாசன் விஜி எனும் கதாபாத்திரத்திலும், சென்ராயன் டாக்ஸி தல எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
    நரைத்த முடி, தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, பிரபல நடிகர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்தில் சலூன்கள் மூடப்பட்டதால், தங்களை அழகு படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் நடிகர், நடிகைகள்  சிகை அலங்காரம் செய்துகொள்ள முடியாமல் தவித்து வந்தனர். சிலரோ வீட்டிலேயே முடி வெட்டிக்கொள்கின்றனர்.

    இந்நிலையில், நகைச்சுவை நடிகர் பால சரவணன் தான் நரைத்த முடி, தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் கெட்-அப்பில் இருக்கும் அவரின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் இந்த கெட்-அப்பில் விஜய் மல்லையா போல இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். சிலரோ அவர் பார்க்க ஹாலிவுட் நடிகர் போல இருப்பதாக கூறுகின்றனர்.

    சசிகுமாரின் குட்டிப்புலி படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் பால சரவணன். பின்னர் பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், வேதாளம், ராஜா மந்திரி, டார்லிங், ஒருநாள் கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.
    திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது? என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளார்.
    கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சினிமா துறைக்கு மத்திய அரசிடம் என்ன உதவிகள் தேவைப்படுகிறதோ, அதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலமாக மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும். நடிகர்களின் சம்பள விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

    கடம்பூர் ராஜூ

    இதுகுறித்து தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர் சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தால், அதற்கு அரசு உதவும். கொரோனா வைரஸ் பரவுதலை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் திரையரங்குகளை மீண்டும் திறப்பது பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
    விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஒருவர் திடீரென சமூக வலைதளத்தில் இருந்து விலகி உள்ளார்.
    பிரபல தொகுப்பாளினியான ரம்யா, மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஆடை, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, தற்போது திடீரென அதிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். 

    விஜே ரம்யா

    இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: "சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளப்போகிறேன். எல்லாம் நன்மைக்கே. இந்த லாக்டவுனின் கடைசி வாரத்தை மெதுவாக கழிக்க விரும்புகிறேன். கவலைப்பட வேண்டாம், நான் முற்றிலும் நலமுடன் இருக்கிறேன். ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
    இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
    திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

    இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் விஜய் ஆண்டனி புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்த ஊரடங்கு நாட்களில் அவர் ஒரு படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார். அது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டாம். மேலும் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை சசி இயக்க மாட்டார் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் பெயரிடப்படாத படம் மற்றும் விஜய் மில்டன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.
    வெப் தொடர் இயக்கும் வாய்ப்புகளை நிராகரித்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
    வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் பிரபல நடிகர் நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். குயின் வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்து இருந்தனர். பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். 

    சத்யராஜ், சீதா, சுகன்யா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். பிரபல இயக்குனர்களும் வெப் தொடர்கள் இயக்க தயாராகிறார்கள். ஏற்கனவே கவுதம் மேனன் குயின் வெப் தொடரை இயக்கினார். 

    கே.எஸ்.ரவிக்குமார்

    இந்நிலையில், வெப் தொடர் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது: நல்ல வாய்ப்பு அமைந்தால் வெப் தொடர் இயக்குவேன். ஏற்கனவே ஒரு வெப் தொடர் இயக்க என்னை கேட்டனர். ஆனால் அவர்கள் சொன்ன சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு ஏற்படாததால் இயக்கவில்லை. 

    இன்னொருவரும் வெப் தொடர் இயக்க பேசினார். அதுவும் சரியாக வரவில்லை அனைத்தும் சரியாக அமையும்போது வெப் தொடர் இயக்குவேன். பணத்துக்காக மட்டும் என்றால் எதையும் செய்யலாம். எனக்கு அது தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக வந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகா உடலுக்குள் புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதை அமைத்து இருந்தனர். 

    சந்திரமுகி 2-ம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும் சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி. வாசு தெரிவித்துள்ளார். இதில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடிப்பாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து ஜோதிகாவிடம் கேட்டபோது சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. அந்த படத்தில் நடிக்கும்படி யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை என்றார். சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஜோதிகா, சிம்ரன்

    இந்த நிலையில் சந்திரமுகி-2 படத்தில் சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் சிம்ரன்தான் கதாநாயகியாக நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பிலும் பங்கேற்றார். ஆனால் திடீரென்று அவர் கர்ப்பமாகி படத்தில் இருந்து விலகியதால் ஜோதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×