என் மலர்
சினிமா செய்திகள்
பெங்களுருவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அஜித் பட நடிகையை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் பாவனா. ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ‘தீபாவளி’, ‘ஜெயம்கொண்டான்’, ‘அசல்’ உள்பட பலபடங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலிலும் இடம் பிடித்தார். பின்னர் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா கன்னட பட தயாரிப்பாளரான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

பெங்களுருவில் தனது கணவருடன் வசித்து வந்த பாவனா, கொரோனா ஊரடங்கால் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், பாவனா அரசிடம் முறையாக பெற்று பெங்களுருவில் இருந்து கார் மூலம் கேரளாவிற்கு சென்றுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் அவரை வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாக இளம்நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக சிலர் தற்கொலை செய்துகொண்ட அவலமும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் இந்தி சீரியல்களில் நடித்துவந்த இளம் நடிகை பிரேக்ஷா மெஹ்தா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அக்ஷய் குமாரின் பேடுமேன் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

நடிகை பிரேக்ஷா மெஹ்தா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் ஊரடங்கால் ஏற்பட்ட நிதிநெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 25 வயதே ஆன இளம் நடிகை ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா, குட்டி ஸ்டோரி சொல்லி அரசை கடுமையாக சாடி உள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையை தேனீக்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நான் தூங்கி விழித்தபோது ஜன்னலுக்கு வெளியே சில தேனீக்களை கண்டேன். எனது வீட்டின் பால்கனி அருகில் மாமரத்தில் ஒரு பெரிய தேன்கூடு இருந்தது. அவை என்னை கடிக்காமல் இருக்க வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த சிலரை அழைத்தேன்.
அவற்றை பூச்சிக்கொல்லி மருந்து அடித்து சாகடிப்பது அல்லது அவற்றோடு வாழ பழகிக்கொள்வது என்ற இரண்டு வாய்ப்புகள் எனக்கு இருந்தன. எனக்கு பூச்சிகளை பார்த்தால் பயம். ஆனாலும் ஆயிரக்கணக்கான தேனீக்களை கொல்வதை கற்பனை செய்ய முடியவில்லை. தேனீக்கள் மீது எனக்கு பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். சுற்றுப்புற சூழலை காப்பதில் அவற்றின் பங்கு முக்கியமானது. தேனீக்கள் அழிந்தால் மனித இனமும் அழிந்து விடும்.

இது தேனீக்கள் பற்றிய கதையாக இருந்தாலும் தற்போது நாட்டில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையும் இதில் இருக்கிறது. பால்கனியில் இருக்கும் தேனீக்களை பாதுகாப்பதில் எனக்கு பொறுப்பு இருக்கிறது என்றால் நாடு முழுவதும் ஆதரவின்றி தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பு அல்லவா? தேனீக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதிகம் உள்ளது”. இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
திரைப்படங்களில் வில்லத்தனமாக வரும் கதாபாத்திரங்களை பாராட்டுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக கதாநாயகனை வில்லனாக சித்தரிக்கும் கதையம்சத்தில் பல படங்கள் வருகின்றன. அந்த கதாநாயகன் செய்யும் கொலை, கொள்ளைகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இத்தகைய படங்கள் நல்ல வசூலும் குவிக்கின்றன.
தெலுங்கில் அதிக வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டாவும் அளவுக்கு மீறி கோபப்படுவது, மது குடிப்பது, புகைப்பிடிப்பது, பெண்களுடன் தகாத உறவு வைத்து இருப்பது, கதாநாயகியை காதலிக்க வைக்க இம்சிப்பது என்றெல்லாம் நடித்து இருந்தார். இந்த படத்தை இந்தியில் ஷாகித் கபூர் நடிக்க கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டபோது பெண்கள் நல அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். நடிகை டாப்சியும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கில் சமூக வலைத்தள நேரலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த படம் பற்றி கூறியதாவது: “ஆணும் பெண்ணும் சமத்துவமாக வாழ்வதை நான் ஆதரிக்கிறேன். அதே நேரம் திரைப்படங்களில் வில்லத்தனமாக வரும் கதாபாத்திரங்களை பாராட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நானும் பத்லா படத்தில் வில்லியாக நடித்து இருக்கிறேன்.
அந்த வில்லி கதாபாத்திரத்தை உயர்வாக கொண்டாட கூடாது. அதே மாதிரிதான் கபீர் சிங் படமும். அதில் கெட்ட பழக்கம் உள்ளவராக நடித்துள்ள ஆணின் குணங்களை கொண்டாடுவது எனக்கு பிடிக்கவில்லை. எனக்குபிடிக்காத படங்களை நான் பார்ப்பது இல்லை. மற்றவர்கள் பார்ப்பதையும் தடுக்க மாட்டேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.
சசி-விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனான விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாத்துரை, காளி, திமிரு பிடிச்சவன், கொலைகாரன் போன்ற படங்கள் வந்துள்ளன. இதில் 2016-ல் வெளியான பிச்சைக்காரன் படம் பெரிய வெற்றி பெற்றது. நாயகியாக சட்னா டைட்டஸ் நடித்து இருந்தார். சசி இயக்கினார்.
இந்த படத்தின் வெற்றியால் விஜய் ஆண்டனியின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. தெலுங்கில் பிச்சக்காடு என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வசூல் குவித்தது. இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்துக்கான 2-ம் பாகத்தையும் எடுக்க உள்ளனர். இதற்கான கதையை விஜய் ஆண்டனியே எழுதி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் கொரோனா ஊரடங்கில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வருகிறேன். முதல் பாகத்தை இயக்கிய சசி வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை. மேலும் ஊரடங்கில் புதிய எடிட்டிங் மென்பொருளை பயன்படுத்தும் முறை மற்றும் சினிமா சம்பந்தமான தொழில்நுட்பங்களை கற்று வருகிறேன். ஊரடங்கினால் சம்பளத்தை 25 சதவீதம் குறைத்து இருக்கிறேன். என்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு உதவவே இந்த முடிவை எடுத்தேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, திருமணம் குறித்து அறிந்ததும் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.
அஜித்குமாருடன் ஆரம்பம் மற்றும் பெங்களூரு நாட்கள் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் ராணா. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் படத்தில் நடித்து வருகிறார். இவரையும் திரிஷா உள்ளிட்ட சில நடிகைகளையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன.
இந்த நிலையில் ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. மிஹீகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து ராணா கூறியதாவது: மிஹீகாவை எனக்கு பல வருடங்களாக தெரியும். எனது வீட்டின் பக்கத்தில்தான் அவரது வீடும் இருந்தது. அவருடன் அதிக நாட்கள் பழகி இருக்கிறேன். அவரது குணம் எனக்கு பிடித்தது.

என் வாழ்க்கை துணையாக மிஹீகாதான் சரியானவர் என்று தோன்றியது. அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்புதான் ஏற்பட்டது. அவரை நேரில் அழைத்து எனது விருப்பத்தை சொன்னேன். அவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஒருவருக்கு நேர்மையாக இருப்பது முக்கியம்.
அப்படி இருக்க முடிவு செய்துள்ளேன். திரையுலகில் இருப்பவரை மணக்க நான் எப்போதுமே நினைத்தது இல்லை. நான் திருமணம் செய்து கொள்ளப்போவதை அறிந்து எனது முன்னாள் காதலிகள் வாழ்த்து தெரிவித்தனர்”. இவ்வாறு ராணா கூறினார்.
நெருக்கமான காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று நடிகை லாவண்யா திரிபாதி கூறியுள்ளார்.
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் இனிவரும் நாட்களில் கதாநாயகர்களுடன் மிக நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகளை தவிர்த்து விடுவேன் என கூறியுள்ளார்.
கொரோனா தாக்கம் முடிந்தபின்பு படப்பிடிப்புகள் துவங்கினாலும் நிச்சயம் பல மாற்றங்கள் அதில் காணப்படும் என கூறியுள்ள லாவண்யா திரிபாதி, கட்டாயம் அரசு விதிக்கும் விதிமுறைகளை பின்பற்றித்தான் படப்பிடிப்பு நடக்கும் என கூறியுள்ளார். அதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப் படத்தின் டிரைலரை ராம்கோபால் வர்மா வெளியிட்டிருக்கிறார்.
தெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் இவர் ஆபாச நடிகை மியா மல்கோவாவை வைத்து ‘கிளைமேக்ஸ்' எனும் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் டிரைலர் மற்றும் பாடல்கள் கடந்த வாரம் வெளியானது.
பலரும், இந்த கிளைமேக்ஸ் திரைப்படத்தினை ஆர்வமாக எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தான் ‘கொரோனா வைரஸ்' என்ற பெயரில் முழு நீள படத்தினை இயக்கியுள்ளதாகவும், அப்படம் முழுவதும் இந்த லாக்டவுனுக்கு இடையில் எடுக்கப்பட்டதாவும் கூறினார் ராம் கோபால் வர்மா.
மேலும் இப்படம் உலகிலேயே கொரோனா வைரஸ் பற்றி எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக இருக்கும் என்ற அவர், இப்படத்தின் டிரைலரை இன்று மாலை வெளியிட்டார். இப்படத்தின் திகிலான டிரைலர் செம வைரலாகி வருகிறது.
நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி வரும் ஆர்.ஜே.பாலாஜி, அவருடைய சீக்ரெட் பற்றி சொல்லியிருக்கிறார்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பங்கேற்ற கலந்துரையாடலில், அவரது அடுத்த படமான மூக்குத்தி அம்மன் படம் குறித்து மனம்திறந்துள்ளார். அதில், மூக்குத்தி அம்மன் படம் திரையரங்கில் வெளியான பின்னரே ஓடிடி இணையதளத்தில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். கெரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கும் பட்சத்தில் முதல் படமாக மூக்குத்தி அம்மன் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
நயன்தாரா பற்றிய கேள்விக்கு, தான் இதுவரை நடித்த நாயகிகளுள் மிகவும் ஒழுக்கமான நடிகை அவர், அதனாலேயே ஆண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த துறையில், அவர் தனித்து நிற்கிறார் என்று கூறியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி நடிக்க, சரவணன் - ஆர்.ஜே.பாலாஜி இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.
இந்த மாதிரி மீம்ஸ் வரும் என்று சிம்பு அப்பவே சொன்னார் என்று இயக்குனர் கவுதம் மேனன் கூறியுள்ளார்.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் மீண்டும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் சிம்பு, திரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டார்.
'கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுபற்றி இயக்குனர் கவுதம் மேனன் கூறும்போது "நீ எனக்கு மூன்றாவது குழந்தை என்ற டயலாக்கை சொல்லும் போதே சிம்பு சொல்லிவிட்டார். திரிஷா மடியில் நான் இருக்கும் புகைப்படம் போன்று மீம்ஸ்கள் வரும் என்று.
அதேபோல் இது கள்ளக்காதல்னு நெனச்சா, இது கள்ளக்காதல் தான். ஆனால் எனக்கு அப்படி இல்ல. இது அவங்க அவங்க பார்க்கிற பார்வையில் தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
'கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் இது கள்ளக்காதல்னு நெனச்சா, இது கள்ளக்காதல் தான். ஆனால் எனக்கு அப்படி இல்ல. இது அவங்க அவங்க பார்க்கிற பார்வையில் தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையை தேவி ஸ்ரீ பிரசாத் பாட வைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 4 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை ஸ்ரதா தாசை பாடவும் ஆடவும் வைத்துள்ளார்.

ஸ்ரதா தாஸ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
இதுகுறித்து தேவிஸ்ரீ பிரசாத் கூறியபோது, ‘இந்த பாடலின் ரிஹர்சலின்போதும், ஒரிஜினலை படமாக்கும்போது தான் எந்தவித வித்தியாசத்தையும் பார்க்கவில்லை என்றும் அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக ஸ்ரதா தாஸ் பாடி நடனமாடியுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த பாடலை தனது மியூசிக் குருவான தந்தை சத்தியமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், அவருடைய பிறந்த நாள் பரிசாக இதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தேவிஸ்ரீ பிரசாத் கூறியபோது, ‘இந்த பாடலின் ரிஹர்சலின்போதும், ஒரிஜினலை படமாக்கும்போது தான் எந்தவித வித்தியாசத்தையும் பார்க்கவில்லை என்றும் அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக ஸ்ரதா தாஸ் பாடி நடனமாடியுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த பாடலை தனது மியூசிக் குருவான தந்தை சத்தியமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், அவருடைய பிறந்த நாள் பரிசாக இதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் போனி கபூரை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற தமிழ் படம் மற்றும் பல பாலிவுட் திரைப்படங்களை தயாரித்தவர் போனிகபூர். இவருடைய வீட்டில் பணிபுரிந்த ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து போனி கபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மும்பை சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் பாலிவுட்டின் மற்றொரு பிரபல தயாரிப்பாளரான கரன் ஜோஹர் வீட்டில் பணிபுரிந்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரண்ஜோஹர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், அனைவருக்கும் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்த போதிலும் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதார ஊழியர்கள் அறிவுரை கூறியதாகவும், கரண்ஜோஹர் தனது சமூக வலை பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.






