என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் 5000 ஏழை குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்கி உதவி செய்திருக்கிறார்.
    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கொரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கி வருகிறார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 5000 ஏழை குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அளித்துள்ளார்.

    சல்மான் கான்


    ரம்ஜான் பண்டிகைக்காகச் செய்யப்படும் ஷீர் குருமாவுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் அடங்கிய பையை 5000 ஏழைக் குடும்பங்களுக்கு அவர் வழங்கியுள்ளார். பீயிங் ஹேங்ரி என்கிற திட்டத்தின் மூலமாக இந்த உதவிகளை செய்துள்ளார்.

    மேலும் மும்பை நகரில் யார் யாருக்கெல்லாம் உணவுப் பொருள்கள் தேவைப்படுகிறதோ அனைவருக்கும் வழங்க வேண்டும் என உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிரக்கின் ஓட்டுநர்களுக்கு சல்மான் அறிவுறித்தியுள்ளார்.  
    ஜீவா நடிப்பில் உருவாகவிருக்கும் பேய் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    `ஸ்ட்ராபெரி', `ஆருத்ரா' ஆகிய படங்களின் மூலம் இயக்குநர் ஆனவர் பாடலாசிரியர் பா.விஜய். தற்போது நடிகர் அர்ஜூன் மற்றும் ஜீவா இருவரையும் இணைத்து 'மேதாவி' எனும் படத்தை இயக்க இருக்கிறார்.

    ராசி கண்ணா


    படம் பற்றி அவர் கூறியதாவது:  ஊரடங்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே படத்தோட கதையை அர்ஜூன், ஜீவாகிட்ட சொல்லிட்டேன். ரெண்டு பேருக்கும் கதை பிடிச்சிருச்சு. ஹாரர் - த்ரில்லர் ஜானர்ல படத்தோட கதை தயாராகியிருக்கு. அர்ஜூன் சாருக்கு இதுதான் முதல் பேய் படமா இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் இருக்காங்க. ராசி கண்ணா மட்டும்தான் ஜீவாவுக்கு ஹீரோயினா கமிட்டாகியிருக்காங்க. இன்னும் அர்ஜூன் சாருக்கு முடிவாகலை. தேடிட்டே இருக்கோம். கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.

    இசையமைப்பாளரா யுவன் கமிட்டாகியிருக்கார். பெரிய பட்ஜெட்ல இந்தப் படம் உருவாகும். என்னோட டைரக்‌ஷன் வேலையை ரொம்ப நேர்த்தியா பண்ணணும்னு வேலை பார்த்திட்டிருக்கேன். கண்டிப்பா அடுத்த வருஷம் படம் ரிலீசாகி விடும்'' இவ்வாறு அவர் கூறினார்.
    சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். 

    சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்தனர். அதன்படி வெளியான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க... என்று பிரபல நடிகர் தனுஷ் படம் பற்றி டுவிட் செய்துள்ளார்.
    பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் கர்ணன். தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, லால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகிறது. 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு துவங்கவிருக்கிறது.

    இந்த நிலையில், நடிகர் நட்டி நட்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், மாரி செல்வராஜ்..  ஆக சிறந்த இயக்குனர்.... படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க... என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 
    எனக்கு அதில் அதிகாரமில்லை என்று விஜய் சேதுபதியை வைத்து படத்தை இயக்கி இருக்கும் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
    சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாமனிதன். யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. ஆனால் சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் இந்த படம் குறித்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: மாமனிதன் திரைப்படத்தின் நான்கு பாடல்களும் & RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார். திரு, யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு arrangements செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை’ என்று கூறியுள்ளார்.



    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் பெஸ்ட் குணம் பற்றி பிரபல தொகுப்பாளினி கூறியிருக்கிறார்.
    நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிப்பையும் தாண்டி அவர் படக்குழுவினர்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பு, சக மனிதர்களிடம் காட்டும் அன்பு, உண்மையாக நட்பை நேசிப்பது ஆகியவையே அவர் இன்னும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கான காரணம் என்று கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

    நயன்தாரா, டிடி


    இந்த நிலையில் நயன்தாராவின் பெஸ்ட் குணம் என்ற ஒன்றை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி, ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே கூறியுள்ளார். நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு யார் மீதாவது கோபம் என்றால் அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார். உடனே சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து, ‘இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்று அவரது கோபத்தை சம்பந்தப்பட்டவரிடமே காட்டி விடுவார்.

    எனக்கு தெரிந்து இது மிகவும் சிறந்த பெஸ்ட் குணம் என்று நினைக்கிறேன். டிடியின் இந்த பதிலால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கேரளாவில் சினிமா படப்பிடிப்புக்காக போடப்பட்ட பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலய செட்டை சிலர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். கொரோனா பாதிப்பு தொடங்கும் முன்பே டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் மின்னல் முரளி என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதற்காக கேரளாவின் காலடி பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் கிறிஸ்தவ தேவாலயம் செட் போடப்பட்டது. 

    அதில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால் அந்த செட்டும் அகற்றப்படாமல் அங்கேயே இருந்தது. காலடி கோவில் அருகே இந்த செட் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி இந்து அமைப்பினர் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். 

    அடித்து நொறுக்கப்பட்ட தேவாலய செட்

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலய செட்டை யாரோ மர்ம நபர்கள் இடித்து சேதப்படுத்தினர். இதை அறிந்து படத்தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஊரடங்கால் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலையில் இப்போது படப்பிடிப்பு செட்டும் சேதப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.

    இந்நிலையில் சினிமா படப்பிடிப்பு செட்டை சேதப்படுத்தியது தாங்கள் தான் என்று ஒரு அமைப்பினர் பொறுப்பேற்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி பினராய் விஜயன் அறிவித்து இருந்தார். அதன்படி, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல், ரதீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சந்தானம், ஹர்பஜன் சிங் கூட்டணியில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது.
    சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். 

    சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல் அடுத்தடுத்த நாட்களில் மேலும் இரண்டு தோற்றங்களை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விவேக் இயக்கத்தில் அருண் விஜய், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் பாக்ஸர் படத்தின் முன்னோட்டம்.
    அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாக்ஸர்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்காக சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானியிடம் அருண் விஜய் பாக்சிங் பயிற்சி எடுத்து நடித்துள்ளார்.

    அருண் விஜய் பாக்ஸராக நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மார்குஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மதன் படத்தொகுப்பையும், பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எலெக்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
    லாக்டவுன் காலகட்டத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார்.
    நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

    வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

    கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு மாதத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் கார்த்திகேயா சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். தான் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர் "லாக்டவுனால் எங்களது திட்டங்கள் மாறலாம். ஆனால் எங்களது இலக்கு மாறாது" என குறிப்பிட்டுள்ளார்.

    ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தில் சிம்பு கையில் வைத்திருந்தது சூர்யா படத்திற்கான ஸ்கிரிப்ட் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்து 2010-ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்த படத்தின் தொடர்ச்சியாக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் புதிய குறும்படத்தை ஐபோனில் படமாக்கி கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த குறும்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    இந்நிலையில், அந்த குறும்படத்தில் சிம்பு எழுதும் "கமல், காதம்பரி" கதை, சூர்யாவுக்காக தான் எழுதிய ஸ்கிரிப்ட் என இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கதையை சூர்யாவுக்கு சொன்னதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறிய கவுதம் மேனன், இன்னும் எதுவும் உறுதிப்படுத்தவில்லை என கூறியுள்ளார். 

    குறும்படத்தில் இடம்பெற்ற ஸ்கிரிப்டின் ஸ்கிரீன்ஷாட்

    கதைப்படி வெளிநாட்டில் தான் பெரும்பாலான காட்சிகளை படமாக்க வேண்டியிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைக்கு அது சாத்தியமில்லை, அதற்கு நேரம் ஆகும் என கவுதம் மேனன் தெரிவித்தார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஏற்கனவே காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது இந்த கூட்டணி 3-வது முறையாக இணைந்து ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வரும் வடிவேலு, அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

    இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்கினர். இதனால் வடிவேலு கடந்த 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

    வடிவேலு

    இந்த நிலையில், அவரை வெப் தொடரில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக முன்னணி ஓடிடி  நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், வடிவேலுவுக்கு பெரிய தொகையை சம்பளமாக தர அந்நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அது முழுக்க முழுக்க காமெடி தொடராக உருவாக இருக்கிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×