என் மலர்
சினிமா

இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதி
எனக்கு அதில் அதிகாரமில்லை... விஜய் சேதுபதி படம் குறித்து சீனு ராமசாமி
எனக்கு அதில் அதிகாரமில்லை என்று விஜய் சேதுபதியை வைத்து படத்தை இயக்கி இருக்கும் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாமனிதன். யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. ஆனால் சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இந்த படம் குறித்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: மாமனிதன் திரைப்படத்தின் நான்கு பாடல்களும் & RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார். திரு, யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு arrangements செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை’ என்று கூறியுள்ளார்.
மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் & RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார்,திரு,யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு arrangements
— Seenu Ramasamy (@seenuramasamy) May 26, 2020
செய்துகொண்டிருக்கிறார் மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும்.
எனக்கு அதில் அதிகாரமில்லை. @thisisysr
Next Story






