என் மலர்
சினிமா செய்திகள்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பொன்னம்பலத்திற்கு, ரஜினிகாந்த் உதவி உள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் பொன்னம்பலம். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனிலும் பங்கேற்றார்.
பொன்னம்பலத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நடிகர்கள் சரத்குமார், கமல்ஹாசன் ஆகியோர் பொன்னம்பலத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்துள்ளனர். இதுதவிர, பொன்னம்பலத்தின் 2 குழந்தைகளின் கல்வி செலவை கமல்ஹாசன் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவ முன்வந்துள்ளார். இதுபற்றி பொன்னம்பலம் தரப்பில் கூறியதாவது: எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்பு செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தியளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்காக டுவிட்டரில் பல்வேறு ஹாஷ்டேக்குகளை ரசிகர்கள் உருவாக்கி தங்களின் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியான செய்தி அறிந்த நடிகர் தனுஷ், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் பால்கி இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சனுடன், தனுஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Get well soon sir, my sincere prayers for your speedy recovery
— Dhanush (@dhanushkraja) July 11, 2020
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று பரவிய செய்தி அறிந்தவுடனே, தனது டுவிட்டர் பக்கத்தில், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.
Get well soon sir
— Mammootty (@mammukka) July 11, 2020
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, வெகு விரைவாக குணம் அடைந்து, முழு ஆரோக்கியத்துடன் நடிகர் அமிதாப் பச்சன் வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Get well soon sir ! Wishing you a speedy recovery...
— Mahesh Babu (@urstrulyMahesh) July 11, 2020
மீண்டும் உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வருவீர்கள் சாம்பியன் என நடிகை டாப்சி, அமிதாப் குறித்து டுவிட் செய்துள்ளார். இவர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து பிங்க் மற்றும் பாட்லா போன்ற போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டும், அது அவரால் முடியும், 77 வயதாகும் அமிதாப் பச்சன், திரையுலகில் இன்னும் 23 ஆண்டுகள் சாதிக்க வேண்டியது நிறையவே உள்ளது என பதிவிட்டுள்ளார். எஸ்.ஜே. சூர்யா இயக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மோகன் லால், துல்கர் சல்மான், அனுபமா பரமேஸ்வரன், க்ரீத்தி சனோன், பரிணீத்தி சோப்ரா, ரகுல் ப்ரீத் சிங், ரந்தீப் ஹுடா, சோனம் கபூர் என இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேபச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
மும்பை:
இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியி, நான் கொரோனா பரிசோதனை செய்தேன் .. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாடகி சுசித்ரா தான் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டார்.
சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ், போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டி உலக அளவில் பேசப்பட்டது. பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதனிடையே சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் பின்னணி பாடகி சுசித்ரா. இதையடுத்து ஆங்கில ஊடகங்கள் இச்சம்பவம் குறித்து பேசத் தொடங்கின. சாத்தான்குளம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கிய சிபிசிஐடி போலீசார், 10 காவல்துறையினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் விடுத்திருக்கும் அறிக்கையில், “பாடகி சுசித்ரா, என்பவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது. இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் புலனாய்வை பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தது.
Correction: The CB-CID called. And threatened arrest for spreading fake news with intent to cause anarchy. Deleted the video under the advise of my lawyer who said they are definitely capable of doing it. Pls watch this case people - there’s a lot of foul play being employed. https://t.co/MeALn0o8RA
— Suchitra (@suchi_mirchi) July 11, 2020
இதையடுத்து தான் பதிவிட்ட வீடியோவை பாடகி சுசித்ரா நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, "சிபிசிஐடி போலீசார் அழைத்தார்கள். போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படி நான் வீடியோவை நீக்கியிருக்கிறேன். மக்கள் இந்த வழக்கை கவனிக்க வேண்டும். பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், நடித்துவந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.
'பாகுபலி' திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், 'சாஹோ' படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
#RadheShyam has set the new benchmark in twitter with 6.3M+ tweets in 24Hours💥.
— Maalai Malar News (@maalaimalar) July 11, 2020
Huge thanks to all Darling fans❤️#Prabhas@hegdepooja@director_radhaa@UVKrishnamRaju garu @itsBhushanKumar@TSeries with #Vamshi#Pramod & @PraseedhaU@UV_Creations@AAFilmsIndia@onlynikil#NMpic.twitter.com/t1Vh3d4Lvq
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. "ராதே ஷ்யாம்" என பெயரிடப்பட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் #RadheShyam என்ற ஹாஸ்டேக்கில் 6.3 மில்லியன் டுவிட்டுகள் போடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா படங்களை தயாரித்தும் வருகிறார். என்.எச்.19, பில்லாயூரி, பாரி ஆகிய இந்தி படங்கள் அவரது தயாரிப்பில் வந்தன. தற்போது வெப் தொடர்கள் தயாரிக்க தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் இவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு போட்டோஷூட் எடுத்துள்ளார். இதன் புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். கவர்ச்சியான இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
நடிகை வனிதா, உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. முதல் மனைவி போலீசிலும் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெறாதவரை வனிதா எப்படி திருமணம் செய்தார் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்தார். நடிகை குட்டி பத்மினியும் குறை கூறினார். விமர்சனங்களுக்கு பதில் அளித்து வனிதா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள். முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவரை துன்புறுத்துவதும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் சட்டத்துக்கு எதிரானது. இணைய தளத்தில் துன்புறுத்துவது ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும். நீங்கள் செய்வதை நான் கடுமையாக எடுத்து இருந்தால் மன அழுத்தத்தில் விரக்தியாகி என்னையே துன்புறுத்தி இருக்கலாம். அது உங்களை கொலைகாரர்கள் ஆக்கி விடும். இதை யோசியுங்கள். நான் உண்மையில் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது. கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நான் கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும். நான் தவறு செய்யவில்லை.”
இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கில் சாதனை படைத்துள்ளது.
மலையாள ஹீரோவான துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப்படம் அழகான பெண்கள் ஆண்களை ஏமாற்றும் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வரவேற்பை பெற்றது.


இந்தநிலையில் இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தப்படத்திற்கு தெலுங்கு பார்வையாளர்களிடம் இருந்த வரவேற்பால் டிஆர்பி ரேட்டிங் 7.1ஐ தொட்டது. இதற்கு முன்பு வெளியான மற்ற டப்பிங் படங்கள் எல்லாம் 6 என்கிற அளவிலேயே டிஆர்பி ரேட்டிங் பெற்று வந்த நிலையில் முதல்முறையாக அவற்றைமுந்தி துல்கர் சல்மான் படம் சாதனை படைத்துள்ளது.
தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஓவியா எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் நடிகை ஓவியா. அதன்பின் சில படங்களில் நடித்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நடிகை ஓவியாவிற்கு இணையத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ஓவியா பதிலளிப்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில், ரசிகர் ஒருவர் ஏன் டுவிட்டரில் எவரை பின் தொடரவில்லை என்று கேட்டார். அதற்கு ஓவியா மற்றவர்களின் வாழ்க்கையில் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.
ரஜினியை வைத்து லிங்கா படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் சிம்பு நடித்த ‘தம்’, விக்ரம் நடித்த ‘மஜா’ ஆகிய தமிழ் படங்களையும் பல தெலுங்கு மற்றும் தென்னிந்திய படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதாவை இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்ததால் இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் ராக்லைன் வெங்கடேஷின் கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை என்பதும், பரிசோதனையின் முடிவுக்கு பின்னரே அவருக்கு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பிரபல நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால், என்னை குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஸ்கூல் படிக்கும் போது எடுத்த தனது புகைப்படத்தையும், தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள அவர், ''ஸ்கூல் படிக்கும் போது என்னை குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள். அப்போது நான் படிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினேன். இப்போது இதை நான் எனக்காக மட்டுமே செய்துள்ளேன். நம்மை கிண்டல் செய்பவர்களை கண்டுகொள்ளவே கூடாது. அதைதானே விஜய்யும் சொல்லி இருக்கார்'' என்று பதிவிட்டுள்ளார்.
தமிழில் பிரபல நட்சத்திரமாக இருக்கும் அமீர் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அரசியல் களத்தில் களமிறங்கி இருக்கிறார்கள்.
மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் அமீர். இவர் யோகி படம் மூலம் நடிகராக பெயர் பெற்றார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார்.
தற்போது இவர் நாற்காலி என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வி.இசட்.துரை இயக்கும் இப்படத்தில் அரசியல்வாதியாக அமீர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படம் வெளியாகி வைரலானது. இரண்டு பிரபலமான நட்சத்திரங்கள் அரசியல் படங்களில் நடிப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






