search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக் பச்சன்"

    • அபிஷேக் பச்சன் அரசியலில் களம் இறங்க உள்ளதாக தகவல் பரவியது.
    • தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சனின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அபிஷேக் பச்சன் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி வந்தது.


    அமிதாப்பச்சன் ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. பதவி வகித்தவர். அபிஷேக் பச்சனின் தாயாரும் நடிகையுமான ஜெயாபச்சனும் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார். எனவே அபிஷேக் பச்சனும் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து அமிதாப்பச்சன் போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக பேசப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அபிஷேக் பச்சன் கூறும்போது, "நான் அரசியலில் ஈடுபட இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கு அரசியல் ஆர்வம் கொஞ்சமும் இல்லை'' என்றார்.

    • தற்போது இணைய மோசடி குற்றங்கள் (சைபர் கிரைம்) அதிகரித்து வருகின்றன.
    • போலி கிரெடிட் கார்டுகளை பெற்று பல லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி :

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். இதன் எதிரொலியாக தற்போது இணைய மோசடி குற்றங்கள் (சைபர் கிரைம்) அதிகரித்து வருகின்றன.

    இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு கும்பல் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களின் பான்கார்டு விவரங்களை பயன்படுத்தி போலி கிரெடிட் கார்டுகளை பெற்று பல லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இணையதளத்தில் இருந்து பிரபலங்களின் ஜி.எஸ்.டி அடையாள எண்கள் மூலமாக அவர்களது பான்கார்டு விவரங்களை தெரிந்து கொண்ட கும்பல் அதன் மூலமாக பிரபலங்களின் பெயர்களிலேயே கிரெடிட் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது.

    இந்த கும்பல் பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, மாதுரி திக்ஷித், எம்ரான் ஹஷ்மி மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் பெயரை பயன்படுத்தி, புனேவை சேர்ந்த 'ஒன்கார்டு' என்ற நிறுவனத்திடம் இருந்து கிரெடிட் கார்டுகளை வாங்கியுள்ளது.

    கிரெடிட் கார்டுகளை வழங்கிய 'ஒன்கார்டு' நிறுவனம் இந்த மோசடியை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே அந்த கும்பல் சில கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.21.32 லட்சம் மதிப்பில் பொருட்களை வாங்கிவிட்டது.

    இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த நிறுவனம் உடனடியாக டெல்லி போலீசில் புகார் அளித்தது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். அதனை தொடர்ந்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மோசடி குறித்து போலீசார் கூறுகையில், "ஜி.எஸ்.டி அடையாள எண்களில் முதல் 2 இலக்கங்கள் மாநிலக் குறியீடு என்பதையும் அடுத்த 10 இலக்கங்கள் பான்கார்டு எண் என்பதையும் நன்கு அறிந்திருந்த அந்த கும்பல் இணையதளத்தில் இருந்து பிரபலங்களின் பான்கார்டு விவரங்களை பெற்றுள்ளனர்.

    அதே பாணியில் ஆதார்கார்டு விவரங்களையும் பெற்ற அந்த கும்பல் இரண்டையும் சேர்த்து பிரபலங்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றுடன் தங்கள் புகைப்படத்தை இணைத்து, கிரெடிட்கார்டுக்கு விண்ணபித்துள்ளனர். அதை நம்பி 'ஒன்கார்டு' நிறுவனமும் அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான கடன் வரம்பு கொண்ட கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என கூறினர்.

    • இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கே.டி என்கிற கருப்புதுரை’.
    • இப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு தேசிய விருது கிடைத்தது.

    2019-ஆம் ஆண்டு மதுமிதா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கே.டி என்கிற கருப்புதுரை'. மு.ராமசாமி , நாக விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து பல விருதுகளையும் வென்றது.


    கே.டி என்கிற கருப்புதுரை

    மேலும் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நாக விஷாலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 'கே.டி என்கிற கருப்புதுரை' படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மு.ராமசாமி நடித்த கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


    கே.டி என்கிற கருப்புதுரை

    இப்படத்தை நிகில் அத்வானி தயாரிப்பதாகவும் தமிழில் இயக்கிய மதுமிதாவே இந்தியிலும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதையில் மதுமிதா தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    ×