ஐஸ்வர்யா ராயை பிரிகிறாரா?- விவாகரத்து வதந்திக்கு அபிஷேக் பச்சன் பதில்

அம்பானி இல்ல திருமணத்திலும் இருவரும் தனித்தனியாகவே வந்து இருந்தனர்.விவாகரத்து யாருக்கும் எளிதானது அல்ல.
ஐஸ்வர்யா ராயை பிரிகிறாரா?- விவாகரத்து வதந்திக்கு அபிஷேக் பச்சன் பதில்
Published on

நடிகை ஐஸ்வர்யாராயும், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் நடந்த அம்பானி இல்ல திருமணத்திலும் இருவரும் தனித்தனியாகவே வந்து இருந்தனர். 

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் விவாகரத்து குறித்து வெளியிட்ட பதிவுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.

அந்த பதிவில், ''விவாகரத்து யாருக்கும் எளிதானது அல்ல. இறுதிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்ற கனவு இல்லாதவர் யாரும் இல்லை. கையை பிடித்துக்கொண்டு சாலையை கடக்கும் வயதான தம்பதி வீடியோக்களை பார்க்கும்போது அதுபோன்று நாமும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் வரும். ஆனால் சில நேரம் வாழ்கையில் நாம் விரும்புவது நடக்காது. பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிரிவதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த பதிவை அபிஷேக் பச்சன் 'லைக்' செய்து இருப்பதால் நிஜமாகவே விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டார்களா? அதைத்தான் மறைமுகமாக சொல்லி இருக்கிறாரோ என்று பலரும் பேசத்தொடங்கி உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com