என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், முன்னணி நடிகையான திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நடிகை மீராமிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தற்போது நடிகை திரிஷாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

    இது குறித்து டுவீட் செய்துள்ள மீரா மிதுன், இது தான் எனது கடைசி வார்னிங் என திரிஷாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இனி என்னை போல ஹேர் ஸ்டைல், என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக நடவடிக்கை எடுக்கப்படும் டுவீட் செய்துள்ளார்.



    இதைப் பார்த்த திரிஷாவின் ரசிகர்கள் மீரா மிதுனுக்கு எதிராக பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
    கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் முன்னோட்டம்.
    செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

    அமலா பால்

    இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.
    விஜய முருகன் இயக்கத்தில் யோகிபாபு, ராஷ்மி கோபிநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் காக்டெய்ல் படத்தின் முன்னோட்டம்.
    சோழர் காலத்து ஐம்பொன் முருகன் சிலை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போகிறது. மைம் கோபி இந்த சிலையை திருடி வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு பிறகு போலீஸ் அதை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையான சிலை கிடையாது. இவ்வாறு செய்தி வெளியிட்டால், காணாமல் போன சிலை ஏதாவது ஒரு வகையில் கிடைக்கும் என திட்டமிட்டு போலீஸ் இவ்வாறு செய்கின்றனர்.  

    இது ஒருபுறம் இருக்க, சென்னையில் சலூன் கடை வைத்திருக்கும் யோகிபாபுவுக்கு மூன்று நண்பர்கள் உள்ளனர். அதில் அன்பு என்பவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. இதற்காக யோகிபாபு உள்ளிட்ட நண்பர்களுக்கு, அன்பு, வீட்டில் பார்ட்டி கொடுக்கிறார். அப்போது, அவர்கள் அனைவரும் என்ன நடந்தது என தெரியாத அளவுக்கு குடிக்கின்றனர். மறுநாள் எழுந்து பார்த்தால் அங்கு ஒரு பெண் இறந்த நிலையில் கிடக்கிறார்.  

    காக்டெய்ல்

    இதைப்பார்த்து ஷாக்கான யோகிபாபுவும் அவரது நண்பர்களும், அந்த பிணத்தை மறைக்க திட்டமிடுகின்றனர். பின்னர் அந்த பெண் யார்?, அவர் எப்படி இங்கே வந்தார்?, அவரை யார் கொன்றது?, முருகன் சிலை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    காமெடி வேடங்களில் கலக்கி வந்த யோகிபாபு, இந்த படத்தில் கொஞ்சம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். இவரது டைமிங் காமெடி ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் மொக்கை காமெடி எடுபடவில்லை. நாயகி ராஷ்மி கோபிநாத் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார்கள். 

    காக்டெய்ல்

    கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலங்களை பயன்படுத்தியது நல்ல ஐடியா. இவர்கள் இருப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பது போன்று உணர்வு வராமல் இருப்பதற்காக இயக்குனர் மெனக்கெட்டிருக்கிறார். 

    காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் விஜய முருகன், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கதாபாத்திர தேர்வு, அவர்களை கையாண்ட விதம் ஆகியவற்றை பாராட்டலாம். சாய் பாஸ்கரின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ரவீனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது. 

    மொத்தத்தில் 'காக்டெய்ல்' மைல்டான போதை.
    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து டுவிட்டரில் ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டு வந்த நடிகையின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
    பிரபல இந்தி நடிகை பாயல் ரோஹாட்கி. இவர் டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மறைந்த அரசியல் தலைவர் பற்றி தவறாக பேசி போலீசாரின் கைது நடவடிக்கையில் சிக்கி பின்னர் ஜாமீனில் வந்தார்.

    கடந்த சில நாட்களாக இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து டுவிட்டரில் ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாயல் ரோஹாட்கியின் பதிவுகள் குறித்து டுவிட்டர் இந்தியாவுக்கும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது கணக்கை டுவிட்டர் தற்காலிகமாக முடக்கியது.

    பாயல் ரோஹாட்கி

    இது பாயல் ரோஹாட்கிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. டுவிட்டரை சாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “எனது டுவிட்டர் கணக்கை முடக்கி உள்ளனர். அதற்கான காரணத்தை எனக்கு தெரிவிக்கவில்லை. டுவிட்டர் இந்தியா யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரியவில்லை. நான் உண்மையை பேசினேன். சமூகத்துக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
    ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துவந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    'பாகுபலி' திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், 'சாஹோ' படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும்  படத்தில் நடித்து வருகிறார். 

    அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு "ராதே ஷ்யாம்" என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் உதவி செய்துள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே சென்று  அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார். 

     அதே போல் தற்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு கிளம்பினர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை இன்று நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்.

    வரலட்சுமி சரத்குமார்

    நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களின் தாய் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுடன் துரிதமாக செயல்பட்டு இந்த பொருட்களை அனைவருக்கும் வழங்க உதவி செய்தனர். இந்த உதவிகள் நல்லபடியாக நடைபெற உதவியாக இருந்த சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, திரு.கவுதம் சந்தர் (Sankalp Beautiful World), மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துக் கொண்டார்.
    விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
    விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அவரது நெருங்கிய உறவினரான பிரிட்டோ தயாரித்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தையும் பிரிட்டோ தான் தயாரிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரிட்டோ விளக்கம் அளித்து உள்ளார்.

     விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குனராக தான் அதிக ஆர்வம் உள்ளது. அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. தற்போது அவர் கனடாவில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு அவர் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை அதன் பின் தான் முடிவு செய்ய முடியும்.

    விஜயுடன் தயாரிப்பாளர் பிரிட்டோ

    சஞ்சய் படத்தை நான் தயாரிக்கவிருப்பதாக் வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. இதுகுறித்து நான் விஜய்யிடம் பேசினதே இல்லை’ என்று கூறினார்.
    உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு கமல் உதவி செய்து வருகிறார்.
    ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும்  குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது சிகிச்சைக்கு  கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு  நலம் விசாரித்து வருகிறார்.

    பொன்னம்பலம்

    இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார். பொன்னம்பலம் அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும்.
    திருமணத்திற்குப் பின் நாங்கள் நாயகிகளாக நடிக்க கூடாதா? என்று அஜித் பட நாயகி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
    அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தற்போது விஷாலின் ‘சக்ரா’, ‘மாதவன் நடித்து வரும் ‘மாறா’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

     இந்த நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். ஒரு நடிகை தன்னுடைய திருமணத்திற்கு பின் சினிமாவில் நாயகியாக நடிக்கும் ஆசையை விட்டுவிட வேண்டுமா? பெரிய நட்சத்திரங்கள் மட்டுமல்ல சாதாரண சிறு நடிகைகளின் பதிலையும் எதிர்பார்க்கிறேன். இது குறித்து விவாதம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும் தன்னுடைய தோழி விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் திருமணத்துக்கு பின் நான் நடிக்கலாமா? என தன்னிடம் கேட்டதாகவும் ஒரு நடிகையிடம் இருந்து இப்படி கேள்வி எழுந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

    ஷ்ரத்தா ஸ்ரீநாத்
    ஒரு நடிகர் திருமணத்திற்குப் பின்னர் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யும் போது, நடிகைகள் மட்டும் திருமணத்திற்கு பின்னர் கதாநாயகியாக நடிக்க கூடாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் இந்த கேள்விக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.
    திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா என்று நடிகை வேதிகா வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்.
    தமிழில் மதராஸி படம் மூலம் அறிமுகமான வேதிகா, முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- 

    “இந்தி நடிகர் சுஷாந் சிங்குக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் அவர் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா என்று வேதனைப்பட்டேன். அவருக்கு என்ன நடந்தது. எதற்காக சாக துணிந்தார் என்பது தெரியவில்லை. எங்களையும் அவரின் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்த முடிந்தது. காரணம் நாங்களும் போராட்டங்களோடுதான் இருக்கிறோம்.

     எங்களுக்கும் அவருக்கு வந்த மாதிரியான சிந்தனை வந்து இருக்கும். நாங்களும் அந்த உணர்வை கடந்து இருப்போம். ஆனாலும் போராட்டமும் மன அழுத்தங்களும் நிரந்தரம் இல்லை. அதற்காக உயிரை விடக்கூடாது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர வேண்டும். ஒவ்வொருவர் நடிப்பை பற்றியும் கருத்து சொல்ல பல இடங்களில் ஆட்கள் இருக்கிறார்கள்.

    சுஷாந்த் சிங்

     எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அவரை பற்றி கொஞ்சம் யோசித்து பேசுங்கள். கிசுகிசுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஹாலிவுட் படமான மேட்ரிக்ஸின் நான்காம் பாகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
    தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் பட வாய்ப்புகள் தேடி வந்தார். தற்போது மேட்ரிக்ஸ் படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்க தேர்வாகி உள்ளார். 

    மேட்ரிக்ஸ் ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1999-ல் லானா வக்காவ்ஸ்கி, லில்லி வக்காவ்ஸ்கி ஆகியோர் இயக்கத்தில் த மேட்ரிக்ஸ் திகில் படம் வெளியானது. படத்தில் இடம்பெற்ற அதிரடி சண்டை காட்சிகளும் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. உலகம் முழுவதும் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. 

    பிரியங்கா சோப்ரா

    மேட்ரிக்ஸ் படத்தின் மூன்று பாகங்கள் இதுவரை வந்துள்ளன. இவற்றில் கதாநாயகனாக கினு ரீவ்ஸ் நடித்து இருந்தார். த மேட்ரிக்ஸ் 4-ம் பாகத்திலும் அவரே நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்தபோது பிரியங்கா சோப்ராவும் சென்று இருந்தார். 

    தற்போது அவரை ஒப்பந்தம் செய்து இருப்பது உறுதியாகி உள்ளது. கினு ரீவ்சுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெர்லினில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
    மண்டியா அருகே நடிகர் சு‌ஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சு‌ஷில்குமார்(வயது 32). இவர் கன்னடத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவர் சலகா என்ற கன்னட படத்தில் நடித்து உள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் பெங்களூருவில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சு‌ஷில்குமார் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் மண்டியா டவுனில் உள்ள தனது வீட்டில் சு‌ஷில்குமார், குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று மண்டியா புறநகர் இந்துவாலு பகுதியில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டிற்கு சு‌ஷில்குமார் சென்று இருந்தார். அங்கு ஒரு அறையில் திடீரென சு‌ஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக மண்டியா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

    சு‌ஷில்குமார்

    கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் வருமானம் குறைந்து சு‌ஷில்குமார் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் அவர் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மண்டியா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், வளர்ந்து வரும் கன்னட நடிகரான சு‌ஷில்குமார் தற்கொலை செய்து கொண்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    ×