search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adho Andha Paravai Pola"

    • இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அதோ அந்த பறவை போல'.
    • இந்த படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அதோ அந்த பறவை போல'. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அமலா பால்

    இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.


    அதோ அந்த பறவை போல போஸ்டர்

    பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் 'அதோ அந்த பறவை போல' படம் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    தமிழ், மலையாள மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், என்னால் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். #Amalapaul
    அமலா பால் திருமணமாகி விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். பொதுவாக இப்படி நடிக்க வருபவர்களுக்கு கதாநாயகி வேடங்கள் கிடைக்காது. ஆனால் அமலாபால் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். சில படங்களில் அம்மா வேடத்திலும் நடித்தார். 

    இதுபற்றி அவர் கூறும்போது, ‘நடிகை என்றால் கவர்ச்சியாக மட்டும் இல்லாமல் எல்லா விதமான பாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஊடகங்கள்தான் தான் அதைப் பெரிது படுத்துகின்றன. கொச்சி, சென்னை இரண்டுமே எனக்கு தாய் வீடு மாதிரி. கொச்சி நான் பிறந்த ஊர். சென்னை நான் வேலை பார்க்கும் ஊர். கொச்சிக்கு போய் விட்டால் அம்மா செல்லமாகி விடுவேன். நன்றாக தூங்குவேன். சாப்பிடுவேன். உடற்பயிற்சி, யோகா எல்லாம் இருக்காது. 

    ஆனால் சென்னைக்கு வந்தால் ‘ஏனோ தானோ’ என்று இருக்க முடியாது. இது வாழ்வு கொடுக்கும் இடம். அதனால் கொஞ்சம் பயபக்தியுடன் இருக்க வேண்டியிருக்கிறது. ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. முதல் முறையாக ஏதாவது தொழில் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆயுர் வேத ஆரோக்கியம் தொடர்பான தொழிலில் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்து இருக்கிறேன். 



    இதைத் தவிர்த்து நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சமூக அமைப்பை துவக்கியுள்ளளேன். அதன் மூலம் 100 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு உதவிட திட்டம் ஒன்றும் இருக்கிறது. மற்றபடி தற்போது மனதில் தோன்றுவதை எல்லாம் கதையாக எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த அமலா பாலினால் எல்லோரையும் போல ஒரு சாதாரண பெண்ணாக மட்டும் இருக்கவே முடியாது’ என்று கூறி இருக்கிறார்.
    அமலாபால் நடித்து வரும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் பிரபல ஐபிஎல் வர்ணனையாளர் சமீர் கோச்சார் நடித்து வருகிறார். #SamirKochhar #Amalapaul
    இந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களில் சமீர் கோச்சாரை அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக “ஐ.பி.எல்” போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார்.

    தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஹாத் சே ஹாத் மிலா” என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது நெட் பிலிக்ஸ் வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் “சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    மேலும் “ஜனத்”, “ஹவுஸ்ஃபுல் 3 போன்ற பாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.



    இந்நிலையில், செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் “அதோ அந்த பறவை போல” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் சமீர் கோச்சார். இப்படத்தின் கதையில் அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு, தனது நடிப்பின் மூலம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமீர் கோச்சார். அதுமட்டுமல்லாமல் தற்போது, “தும்சே பியார் கித்னா” என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
    ×