குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்... வைரலாகும் சாக்ஷியின் புகைப்படம்
Byமாலை மலர்10 July 2020 7:37 PM IST (Updated: 10 July 2020 7:37 PM IST)
பிரபல நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால், என்னை குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஸ்கூல் படிக்கும் போது எடுத்த தனது புகைப்படத்தையும், தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள அவர், ''ஸ்கூல் படிக்கும் போது என்னை குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள். அப்போது நான் படிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினேன். இப்போது இதை நான் எனக்காக மட்டுமே செய்துள்ளேன். நம்மை கிண்டல் செய்பவர்களை கண்டுகொள்ளவே கூடாது. அதைதானே விஜய்யும் சொல்லி இருக்கார்'' என்று பதிவிட்டுள்ளார்.