என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு படத்திற்கு முன் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

    தற்போது நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஏனெனில், அரசியல் கூட்டங்களை வைத்து மாநாடு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய காட்சிகளுக்கு கூட்டம் தேவைப்படும். அதிக நபர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் இப்படத்தின் படப்பிடிப்பை தற்போது துவங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    சுசீந்திரன்

    எனவே அதற்கு முன்பாக சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளாராம். இப்படத்தை குறுகியகாலத்திற்குள் எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சிம்பு மாநாடு படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
    மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
    பாடகர் எஸ்பிபியின் இறுதி சடங்கில் ஒரு சில சினிமா துறை நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் நடிகர் விஜய்யும் ஒருவர். எஸ்பிபியின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு சென்ற பிறகு அங்கு விஜய் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு எஸ்பிபி சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். விஜய்க்கு எஸ்பிபி பாடல்கள் பாடியது மட்டுமின்றி அவருடன் சில படங்களில் இணைந்து நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எஸ்பிபி இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் காருக்கு திரும்பிய விஜய், பாதையில் கிடந்த ஒற்றை காலணியை எடுத்துக்கொடுத்தது, இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் இருந்து விஜயை காத்து, போலீசார் அழைத்து சென்று கொண்டிருந்தபோது, பாதையில் கிடந்த காலணியை எடுத்து, அருகாமையில் நின்றவரிடம் விஜய் அளித்தார்.

    விஜய்

    விஜய் நேரில் வந்தது பற்றி சினிமா துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது என இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

    மேலும் இது பற்றி ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் கூறியதாவது: “கொரோனா காரணமாக பிரபலங்கள் யாரும் வர வேண்டாம் என அரசு கூறியிருக்கிறதோ என தற்போது வரை நினைத்தேன். ஆனால் விஜய் சாரை பார்த்த உடன் தான் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என எனக்கு தெரிகிறது. தளபதி மீது அதிக மரியாதை இருக்கிறது” என கூறி இருக்கிறார்.

    இதுகுறித்து நடிகர் சவுந்தரராஜா கூறியுள்ளதாவது: “தளபதி.... தளபதி தான். விஜய் அண்ணா ஒரு சிறந்த மனிதன்” என குறிப்பிட்டு, நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
    மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது.
    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். அங்கிருந்த தனது பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் தான் காஞ்சி சங்கரமடத்துக்கு வேத பாடசாலை தொடங்க தானமாக கொடுத்தார் எஸ்.பி.பி. மேலும் அங்கு தனது தாய் சகுந்தலாம்மா, தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி ஆகியோரது சிலையை நிறுவ அவர் விரும்பினார்.

    இதற்காக ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் ஆர்டர் கொடுத்திருந்தார். அதன் பணிகள் நடந்துவந்த நிலையில், தன்னுடைய சிலையையும் வடிவமைத்து தருமாறு கடந்த ஜூன் மாதம் சிற்பி ராஜ்குமாரிடம் எஸ்.பி.பி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக, நேரில் சென்று சிலை செய்வதற்கு தேவையான போட்டோஷூட் நடத்த இயலாது என்பதால், அதற்கான புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.

    எஸ்.பி.பி.யின் உருவச்சிலை

    தற்போது, சிலை செய்து முடிக்கப்பட்டு, இறுதிகட்ட பணிகளை சிற்பி செய்து வரும் நிலையில், எஸ்.பி.பி.யின் உயிர்பிரிந்தது. தனது மரணத்தையும் முன்கூட்டியே உணர்ந்து, சிலை வடிவமைக்க ஆர்டர் கொடுத்திருந்தாரா எஸ்.பி.பி. என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் பிளேட்டுகளையும், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் இப்போதல்ல, எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன் சண்டை போடவும் போவதில்லை. இதன் பிறகு ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக வதந்திகளுடன் யாரும் வரமாட்டாங்கனு நம்புறேன்”.என லட்சுமி மேனன் தெரிவித்திருந்தார்.

    அவரின் இந்த காட்டமான பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை விமர்சித்தனர். பிளேட்டுகள், கழிப்பறையை கழுவுவது கேவலமான விஷயமா என்று கேள்வி எழுப்பி, அவரைப் கடுமையாக சாடினர்.


    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி லட்சுமி மேனன் வீடியோவை பதிவிட்டார். அதில் கூறியதாவது: “கொஞ்ச நேரத்துக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். உனக்கு பிளேட்டு கழுவுவது, கழிப்பறைகளைக் கழுவுவது கேவலமா இருக்கா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். என்னை கேள்வி கேட்க நீங்க யார்? அனைத்துமே என்னுடைய விருப்பம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சி சிலருக்கு  பிடிக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம்.

    லட்சுமி மேனனின் இன்ஸ்டாகிராம் பதிவு

    எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் அங்கு போகவில்லை. என் வீட்டில் நான் உபயோகிக்கிற பிளேட்டுகள், கழிப்பறைகளை நான்தான் சுத்தம் செய்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்குப் போய் அதைச் செய்ய நான் விரும்பவில்லை. கேமரா முன்பு மற்றவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு, பிளேட்டுகள், கழிப்பறைகளைக் கழுவுவது எல்லாம் எனக்கு தேவையில்லை. என்னிடம் பிக் பாஸ் போறீங்களானு கேட்கும்போது, கஷ்டமா இருக்கு. மற்றவர்களின் விருப்பத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்". என்று லட்சுமி மேனன் கூறியுள்ளார்.
    போலீசார் தன் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியா சக்ரவர்த்திக்கு சொந்தமானது என நடிகை ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் ரியாவின் உரையாடல் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகை ரியா, அவருடைய சகோதரர் ஷோவிக்சக்ரவர்த்தி உள்பட 15 பேரை கைது செய்தனர்.

    இது தவிர போதை கும்பலுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்த நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா, அலிகான், சிரத்தாகபூர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியது. முன்னதாக ரகுல்பிரீத்சிங் வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    ரகுல் பிரீத் சிங், ரியா சக்ரவர்த்தி

    இதையடுத்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ரகுல்பிரீத்சிங் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அதிகாரிகள் கூறியதாவது: விசாரணையின் போது, நடிகை ரியாவுக்கும், ரகுல் பிரீத்சிங்குக்கும் இடையே போதைப் பொருள் பரிமாற்றம் பற்றி நடந்த உரையாடல் பதிவை காண்பித்து விசாரித்தோம். அப்போது இருவரும் உரையாடியதை அவர் ஒப்புக் கொண்டார்

    மேலும் தனது வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நடிகை ரியா சக்ரவர்த்திக்கு சொந்தமானது. அவர் அதை தனது வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள இருந்தார் என்பதையும் ரகுல் பிரீத்சிங் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நகைச்சுவை நடிகர் விவேக், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த 50 ஆண்டுகளாக இந்திய திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இதுதவிர, பல ஆயிரம் பக்தி பாடல்களை பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார்.

    விவேக்

    72 படங்களில் நடித்து இருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சிறந்த இந்திய குடிமகனாக திகழ்ந்து இருக்கிறார். இத்தனை சிறந்த இசை கலைஞருக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தமிழ் திரையுலகம் சார்பாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு விவேக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது அடுத்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் ஒருவர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் வெளியான வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது.


    இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    பாண்டிராஜ், சூர்யா

    முன்னதாக செல்வராகவனின் ‛என்ஜிகே’ படத்தில் சற்று வில்லத்தனம் கலந்த அரசியல்வாதியாக சூர்யா நடித்திருந்தாலும், இப்படத்தில் பாண்டிராஜ் வேறுவிதமான அரசியலை கையாள இருக்கிறாராம். நடிகர் சூர்யா ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க 2’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தியடைய இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார்.
    இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு. இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இளையராஜா நடத்தி வந்த கச்சேரிகளில் முதன்மை பாடகர் எஸ்.பி.பி. தான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி. இருவரும் இணைந்து 80-களில் நடத்திய இசை ராஜாங்கம் இன்றளவும் பேசப்படுகின்றன.

    பாடல் உரிமம் விவகாரத்தில் எஸ்.பி.பி., இளையராஜா இருவருக்கும் கருத்துவேறுபாடு வந்தபோதும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பை குறைத்து கொண்டதில்லை. சில மாதங்களிலேயே கசப்பு மறந்து அந்த இசைக்கூட்டணி மீண்டும் மலர்ந்தது.

    தீபம் ஏற்றிய இளையராஜா

    இதனிடையே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சீக்கிரம் எழுந்து வா பாலு என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இளையராஜா.

    எஸ்.பி.பி. இன்று மரணமடைந்த நிலையில், எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு உண்டு, இந்த துக்கத்திற்கு அளவில்லை” என உருக்கமாக இளையராஜா வீடியோ வெளியிட்டார். தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்று முன் மோட்ச தீபம் ஏற்றியுள்ளார்.
    தனுஷ், சிவகார்த்திகேயன் பட இயக்குனர் துரை செந்தில்குமார் வீட்டில் பெரிய சோகம் நடந்துள்ளது.
    தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த படம் 'எதிர்நீச்சல்'. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் துரை செந்தில்குமார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து 'காக்கிச்சட்டை' படத்தை இயக்கினார். மேலும் தனுசை வைத்து கொடி', 'பட்டாஸ்' போன்ற படங்களை இயக்கினார்.

    இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமாரின் தந்தை செல்வகுமார் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 67. இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான கரூரில் நடைபெறவுள்ளது.

    துரை செந்தில் குமார்

    தந்தையை இழந்து வாடும் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
    பாடகர் எஸ்பிபி மறைவிற்கு முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நெஞ்சம் பதறுகிறது... நம்ப மறுக்கிறது... என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். இன்று மதியம் எஸ்பிபி-யின் உடல் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா எஸ்.பி.பிக்காக உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ''தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களுக்கும் பொருந்தி இருக்கும்.

    எஸ் பி பாலசுப்ரமணியம்

    நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது.'' இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதி அஞ்சலியில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய், பலரையும் நெகிழ வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
    உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். இவருக்கு உலக மக்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய், பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் விஜய் திரும்பி செல்லும் போது., ரசிகர்களின் கூட்டத்தினால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ரசிகர் ஒருவரின் காலணிகள் கீழே விழ, அதை நடிகர் விஜய் உடனடியாக எடுத்து கொடுத்தார். காலணியை விஜய் எடுத்த கொடுத்தது பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


    ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் 72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இயக்குனர்கள் பாரதிராஜா, பாடகர் மனோ, நடிகர்கள் விஜய், மயில்சாமி, சௌந்தரராஜா, அப்புக்குட்டி, ரகுமான் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ஜெய்ப்பூரில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    படக்குழுவினருடன் விஜய் சேதுபதி

    ஜெய்ப்பூரில் ‘அனபெல் சுப்ரமணியம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், விஜய் சேதுபதி, டாப்சி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
    ×