என் மலர்
சினிமா செய்திகள்
பாடகர் எஸ்பிபி மறைவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது பாடலுக்கு ரசிகராக இல்லாதவர்களே இல்லை என கூறலாம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அவர்கள் எஸ்பிபி மறைவு குறித்து கூறியதாவது:

’எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகர் திரைப்படத்தில் இடம்பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் நான் எப்போதும் வைத்திருக்கும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டது.
12.30 மணியளவில் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் எஸ்பிபி அவர்களின் மகன் சரணிடம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவுக்கு பாடகி ஜானகி விவரிக்க முடியாத துயரம் என்று கூறியிருக்கிறார்.
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
எஸ்.பி..பி. மறைவு குறித்து பாடகி எஸ்.ஜானகி கூறியதாவது : ஆந்திராவில் நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.யை முதலில் சந்தித்தேன். சிறுவனாக இருந்த அவர் திறமையாக பாடினார். பெரிய பாடகராக உயர்வாய் என வாழ்த்தினேன். பின்னாளில் சிறந்த பாடகாராக உயர்ந்தார்.
1980,1990-களில் ஒரே நாளில் பல பாடல்களை பாடினோம். அக்காலத்தில் நாங்கள் சந்திக்காத நாட்கள் குறைவு. காமெடி செய்து ரிக்கார்டிங் மையத்தை கலகலப்பாக வைத்திருப்பார். அதெல்லாம் பசுமையான நினைவுகள். என்மீது அதிக அன்பு கொண்டவர். நான் நடுவராக கலந்த கொண்ட அந்த இசை நிகழ்ச்சி குறித்து மறக்காமல் சொல்வார். அவரது மறைவு தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை. மனம் விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்றார்.
பாடகர் எஸ்.பி.பி. சினிமாவில் பாட வரும்போது, சங்கீதத்தை முறையாக கற்கவில்லை. அவர் பாடிய பாடல்கள் முறையான சங்கீதம் கற்றவர்களை விட சிறப்பாக இருந்ததாக இசையமைப்பாளர்கள் வியப்பு தெரிவித்தனர்.
பாடகர் எஸ்.பி.பி. சினிமாவில் பாட வரும்போது, சங்கீதத்தை முறையாக கற்கவில்லை. ஆனால் அவர் பாடிய பாடல்கள் முறையான சங்கீதம் கற்றவர்களை விட சிறப்பாக இருந்ததாக இசையமைப்பாளர்கள் வியப்பு தெரிவித்தனர்.
சங்காரபரணம் படத்தில் எஸ்.பி.பி. பாடிய பாடல்களே இதற்கு உதாரணம். அந்த படத்தில் ஒவ்வொரு பாடலையும் முறையான சங்கீதம் கற்றவர்களை விட எஸ்.பி.பி. சிறப்பாக பாடி இருப்பார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி பாடல்களையும் சுருதி மாறாமல் பாடி அசத்தியவர்.
தமிழிலில் வல்லினம், மெல்லினம் வார்த்தைகளை அதன் அர்த்தம் மாறாமல் உச்சரிக்க தெரிந்தவர். எஸ்.பி.பி. பாட வைத்த இசையமைப்பாளர்கள் இதை பாராட்டி உள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் அவரது பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் மரியாதை செலுத்தினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.
காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்தார்.
சென்னை:
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்த் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டு காலம் தாலாட்டிக் கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீளா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
விலைமதிப்பில்லாத அந்த இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும். இதனை உணர்ந்து அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதலமைச்சருக்கு கலை உலகின் சார்பிலும், இசை ரசிகர்களின் சார்பிலும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமரும், தமிழக முதலமைச்சரும் கலைத்துறையினர் மீது எந்த அளவுக்கு அன்பும், பாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும். அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு என தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத், எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் கூறியுள்ளதாவது: ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திவிட்டு தேசத்தின் குரல் மறைந்துவிட்டது. அவர் உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை. மிஸ் யூ, லவ் யூ சார் என பதிவிட்டு உள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், அனிருத் இசையில் பேட்ட படத்தில் இடம்பெற்ற ‘மரண மாஸ்’ மற்றும் தர்பார் படத்தில் இடம்பெற்ற ‘சும்மா கிழி’ போன்ற பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: எத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன். சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ் பி பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க, காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள, உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்.
என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார். குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள். என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது.
அதைப்போல... "காதல் அழிவதில்லை" படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் "இவன்தான் நாயகன்" என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார். முதன் முதலில் "இவன் தான் நாயகன்" என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.
யாரையும் காயப்படுத்தாத அந்த குணம். தவறிப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர். விடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே. லவ் யூ” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு. இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இளையராஜா நடத்தி வந்த கச்சேரிகளில் முதன்மை பாடகர் எஸ்.பி.பி. தான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி. இருவரும் இணைந்து 80-களில் நடத்திய இசை ராஜாங்கம் இன்றளவும் பேசப்படுகின்றன.
பாடல் உரிமம் விவகாரத்தில் எஸ்.பி.பி., இளையராஜா இருவருக்கும் கருத்துவேறுபாடு வந்தபோதும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பை குறைத்து கொண்டதில்லை. சில மாதங்களிலேயே கசப்பு மறந்து அந்த இசைக்கூட்டணி மீண்டும் மலர்ந்தது.
இதனிடையே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சீக்கிரம் எழுந்து வா பாலு என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இளையராஜா.
இந்நிலையில், எஸ்.பி.பி. இன்று மரணமடைந்த நிலையில், அவருக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது: “சீக்கிரம் எழுந்துவா, உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்றேன், நீ கேக்கல. கந்தர்வர்களுக்காக பாட சென்றுவிட்டாயா பாலு, உலகம் சூனியமாகிவிட்டது. பேசுவதற்கு பேச்சு வரல. சொல்வதற்கு வார்த்தை இல்லை. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு உண்டு, இந்த துக்கத்திற்கு அளவில்லை” என உருக்கமாக பேசியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.பி.பி. குறித்து கூறியதாவது: "இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது. உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும். கண்ணீருடன் விடை தருகிறோம். எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்" என பதிவிட்டுள்ளார்.
இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்...இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் 🙏🙏 #RIPSPBSirpic.twitter.com/FZuDkKzuLo
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 25, 2020
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நகைச்சுவை நடிகர் சூரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல நகைச்சுவை நடிகர் சூரி எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில், “கும்பிட்ட சாமி அத்தனையும் இப்படி கூண்டோட கைவிட்ருச்சே. ஆழ்ந்த இரங்கல்கள் சார்” என பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் எஸ்.பி.பி குணமடைய வேண்டி திரைப்பிரபலங்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.