என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என  பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது. குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், “இந்திய இசை உலகம், அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் சிவகுமார் எஸ்.பி.பி. குறித்து கூறியதாவது: “அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை
    எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக் கலைஞன். மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன். இமயத்தின் உச்சம் தொட்டும், என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான். போய் வா தம்பி” என கூறியுள்ளார்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:  “என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். நம்முடன் இனி எஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

    எஸ்.பி.பி. பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரைப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம்.
    ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று.

    40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனை ஒன்றையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    ஆரம்பத்தில் மோசமான தமிழ் உச்சரிப்புக்காக புறந்தள்ளப்பட்ட எஸ்.பி.பி, பின்னர் எம்எஸ்வி-யின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பின் கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து இன்றுவரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடும் பாடகர் என்ற சிறப்பைப் பெற்றார்.

    எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா இசையமைப்பாளராக வலம் வந்த நேரத்தில் உச்சத்தில் இருந்து வந்தார். பின்னர் ஏ.ஆர்.ரகுமான் தலைமுறையிலும் தன்னை தக்க வைத்துக்கொண்டு தற்போது இளம் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்தவர்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    பாடகராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்தபோது நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டியவர். கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

    இதுபோக பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய இந்திய அரசின் மிக உயரிய விருதுகள் எஸ்.பி.பி-யின் திரை பயணத்தை அலங்கரிக்கின்றன. அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழ்சினிமாவை ஆக்கிரமித்துள்ள எஸ்பிபியின் காந்தக் குரல் மீண்டும் நலமுடன் எழுந்து வந்து அதே வசீகரத்துடன் ஒலிக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகவும் இருந்தது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதில் இருந்து, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உலகெங்கும் இருக்கும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். அவரின் குரல் மீண்டும் ஒலிக்காதா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் இன்று (செப் 25) பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார். அவர் இறந்தாலும், அவர் பாடிய பாடல்கள் பல தலைமுறைகள் கேட்கும்... 
    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு, கமல், ஏ.ஆர்.ரகுமான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு

    கமல்ஹாசன்
    அன்னைய்யா எஸ்.பி.பி அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ஏர்.ரகுமான்
    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு பேரழிவு என ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ஆர்யா
    எஸ்.பி.பி காலமான செய்தி கேட்டு மனமுடைந்தேன். உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவோம் சார். நீங்கள் தந்த இசைக்கும், நினைவுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    விஷால்
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. மெல்லிசை குரலின் சகாப்தம் முடிந்தது. இருப்பினும் அவரது பாடல்கள் என்றும் நம் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    அக்‌ஷய் குமார்
    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு மெய்நிகர் இசை நிகழ்ச்சியின் போது நான் அவருடன் உரையாடினேன். அவர் மிகவும் அன்பானவர். வாழ்க்கை உண்மையிலேயே கணிக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
    உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    இந்நிலையில், கடந்த 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 1946-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அவரது நண்பரும், இயக்குனருமான பாரதிராஜா பேட்டி அளித்துள்ளார்.
    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை அறிந்து அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க நண்பரும், இயக்குனருமான பாரதிராஜா இன்று மருத்துவமனைக்கு வந்தார். 

    எஸ்.பி.பி உடல்நிலை குறித்து இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது: எஸ்.பி.பி எனது 50 ஆண்டு கால நண்பன். இன்னும் நம்பிக்கை இருக்கிறது. உலகம் முழுவதும் பலகோடி பேர் பிரார்த்தனை செய்தும் பயனில்லை. துக்கம், வருத்தத்தில் இருக்கும்போதோ, சில சூழ்நிலைகளிலோ வார்த்தைகள் வராது என அவர் கூறியபோது கண்கலங்கினார் 
    பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். தற்போது இந்த ஆலோசனையில் எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்ரி, மற்றும் அவரது மகன் சரண், மகள் பல்லவி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

    மேலும் எஸ்.பி.பி.யை காண இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் மருத்துவமனை வர உள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மருத்துவமனை தரப்பில் விரைவில் அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் இன்று ஆஜராகி உள்ள நிலையில், அவரிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்ரவர்த்தி கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் திரையுலகை சேர்ந்த சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரின் பெயரை நடிகை ரியா பகிரங்கப்படுத்தி உள்ளார்.

    ரகுல் பிரீத் சிங்

    இந்தநிலையில் நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினர். இதேபோல் மேலும் 39 பிரபலங்களிடமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகை ரகுல் பிரீத்சிங் நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அதன்படி அவர் வெளியூரில் இருந்ததால் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

    இந்நிலையில், இன்று ரகுல் பிரீத் சிங் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

    பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். 

    உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

    ஆனால், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ பாலசுப்ரமணியம் அவர்கள் அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல்நலம் பெற வேண்டும் என எனது 
    இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனக்காக நீங்கள் நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி.. லவ் யூ சார்...’ என பதிவிட்டுள்ளார்.  



    உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விஷால் கேட்டு அறிந்திருக்கிறார்.
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22-ம் தேதி உடலை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

    அதேவேளையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வழக்கமான மருத்துவமனை பரிசோதனை நடத்த மருத்துவமனை வந்ததாகவும், அப்போது லேசான கொரோனோ அறிகுறி இருந்ததாகவும், தற்போது பூரண குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    விஜயகாந்த் - விஷால்

    விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷை ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். 

    இந்நிலையில் நடிகர் விஷாலும் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்திருக்கிறார். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் நடித்துள்ள படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 8.29 கோடி (ரூ.8,29,57,468) ரூபாயை திருப்பித் தருவதாகக் கூறி ரவீந்திரன் உடன் உறுதி அளித்து விஷால் ஒப்பந்தம் செய்துள்ளார். 

    ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் ‘சக்ரா’ என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி அத்திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

    தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விசாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும், ரூ.8.29 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

    விஷாலின் சக்ரா

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, சக்ரா' திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் ‘சக்ரா’ பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
    ×