search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்நாத் கோவிந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மோடி
    X
    ராம்நாத் கோவிந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மோடி

    இந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என  பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது. குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், “இந்திய இசை உலகம், அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×