என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ஷிவானி, அது நானில்லை... யாரும் நம்பாதீங்க என்று கூறியிருக்கிறார்.
    சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள். 

    ஷிவானி

    தற்போது கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ள இருக்கிறார். இதற்காக இவர் ஹோட்டலில் தனிமைப்படுத்த பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் நான் இல்லை... என் பெயரில் போலி கணக்கை யாரோ வைத்திருக்கிறார்கள். அதை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் காவல்துறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இந்நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்திருக்கிறார்.

    சூர்யா

    இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்ட போது அந்த இடத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை சூர்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பாகவே காலி செய்து விட்டு அடையாறுக்கு மாற்றி விட்டார் என தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஹரிஷ் கல்யாண், புற்று நோயால் கை விடப்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
    "பியார் பிரேமா காதல்", "இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்", “தாராள பிரபு” போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.

    இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களை இறுதி நிமிடங்கள் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரின் 8 ஆண்டுகால சேவைக்கு என் சிறிய பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.

    ஹரிஷ் கல்யாண்

    ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீயிடம் ஹரிஷ் கல்யாண், ரூபாய் 3,70,000 நன்கொடையாக கொடுத்திருக்கிறார்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மறைவிற்கு அஜித் அஞ்சலி செலுத்தினாரா என்ற கேள்விக்கு சரண் விளக்கம் அளித்துள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 25ம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். இயக்குனர் பாரதிராஜா, அமீர், நடிகர்கள் விஜய், அர்ஜுன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அஜித் - எஸ்.பி.பி

    முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அஞ்சலி செலுத்தினாரா என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரணிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரண், அப்பாவின் மீது அன்பு கொண்டவர் அஜித். என்னுடைய நண்பர். அவர், வந்தாரா? வரவில்லையா? என்பது பிரச்னை இல்லை. அவர், எனக்கு போன் செய்து பேசினாரா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. இந்த மாதிரி சூழலில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை, இப்போது இதை பற்றி பேச வேண்டியதுமில்லை. தற்போது, எனக்கு என் அப்பா இல்லை’ என்று தெரிவித்தார்.
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஓவியா, தனது ரசிகை ஒருவர் மரணத்திற்கு துடி துடித்து போயிருக்கிறார்.
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது. 

    ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே அவரும் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இந்த நிலையில் ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணம் அடைந்தார். 

    ஓவியாவின் பதிவு

    இதுகுறித்து தகவலறிந்த ஓவியா உடனடியாக தன்னுடைய தீவிர ரசிகையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், சான்வியின் பெற்றோர்களை தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்.
    அஞ்சனா அலிகான் இயக்கத்தில் முகின் ராவ், அஞ்சனா கீர்த்தி நடிப்பில் உருவாக உள்ள ‘வெற்றி’ படத்தின் முன்னோட்டம்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகின் ராவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது. பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். 

    மேலும் அனுபமா குமார், கிஷோர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார். பாடத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்கிறார். ஷீர்டி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முழுக்க முழுக்க சென்னையில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். 
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகின் ராவ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    மலேசியாவை சேர்ந்த முகின் ராவ், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். அந்த சீசனின் வெற்றியாளரும் இவர்தான். இவர் ஹீரோவாக நடிக்க உள்ள முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது. பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார். 

    வெற்றி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். மேலும் அனுபமா குமார், கிஷோர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார். இப்படத்தை முழுக்க முழுக்க சென்னையில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

    இந்தியில் ரீமேக்காகும் லோகேஷ் கனகராஜின் சூப்பர்ஹிட் படத்தை, பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மாநகரம்’. இந்தப் படத்தில், சந்தீப் கி‌ஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடித்திருந்தனர். ஆக்‌‌ஷன் திரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரமும் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். விஜய்யின் ‘புலி’, விக்ரம் நடித்த ‘சாமி 2’ போன்ற படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    மாநகரம் பட போஸ்டர், லோகேஷ் கனகராஜ்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன. இவர் அடுத்ததாக இயக்கி உள்ள மாஸ்டர் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதை தொடர்ந்து கமலின் 232-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    எஸ்.பி.பி. சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் குறித்து வதந்தி பரவிவந்த நிலையில், சரண் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனைக் கட்டுவதற்கு எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 

    பின்பு ,எஸ்பிபியின் மகன் குடியரசுத் துணைத் தலைவரை அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபியின் உடலைக் கொடுத்தது என்று செய்திகளைப் பரப்பினார்கள். இது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அதில் அவர் கூறியிருப்பதாவது: அப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி பரவி இருக்கிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் ஒரு செய்தி உலவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும்  பொய்.

    சரண்

    இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும், மருத்துவமனைத் தரப்பும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கையைத் தரப்போகிறோம். இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தத்தைத் தருகிறது. எம்ஜிஎம் ஹெல்த்கேர் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும், எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனைக்குச் செல்வது போலவே இல்லை. வீட்டுக்குச் சென்றுவருவது போலத்தான் இருந்தது. மருத்துவமனைக்குச் சென்றது, மருத்துவர்களைச் சந்தித்தது, அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களைச் சந்தித்தது என அத்தனையையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.

    ஆனால், அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அப்பாவுக்கான சிகிச்சைக்கு ஒரு கருவி தேவைப்பட்டபோது எம்ஜிஎம் தரப்பு அப்போலோ மருத்துவமனையைக் கேட்டது. அவர்கள் உடனடியாகத் தந்து உதவினார்கள் என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
    ஜெயம் ரவியின் 25-வது படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார்.

    ஜெயம் ரவி

    பூமி படத்தை கடந்த மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை. திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால், இப்படத்தை நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    கும்கி படத்தில் இணைந்து நடித்திருந்த விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் ஜோடி, பிரபல இயக்குனரின் படம் மூலம் மீண்டும் இணைய உள்ளனர்.
    சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின், படிப்பில் கவனம் செலுத்திய லட்சுமி மேனன் நடிப்பிற்கு சில ஆண்டுகள் முழுக்கு போட்டார். 

    முத்தையா

    இந்நிலையில் அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இவர் அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கும்கி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். கொம்பன், குட்டிப்புலி போன்ற படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்க உள்ளார். ‘பேச்சி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
    ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அக்‌ஷரா ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தின் முன்னோட்டம்.
    கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முதல்முறையாக ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் முதன்மை நாயகியாக நடித்துள்ளார். பிரபல பாடகி உஷா உதூப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள். 

    ராஜா ராமமூர்த்தி இயக்கி இருக்கிறார். ஷ்ரேயா தேவ் டூபே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கீர்த்தனா முரளி மேற்கொண்டுள்ளார். 

    படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: சமூகத்தை பொருத்தவரை, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற 4 பண்புகளும் ஒரு நல்ல பெண்ணின் தகுதியாக கருதப்படுகிறது. அப்படி நான்கு பண்புகளும் அமையப்பெற்ற ஒரு நல்ல பெண்ணை பற்றிய கதை இது. என கூறி உள்ளார்.
    ×