என் மலர்
சினிமா செய்திகள்
மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, விஜயசாந்தி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை படத்தின் விமர்சனம்.
மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன் இராணுவத்தில் நாயகன் மகேஷ் பாபு குழுவில் பணிபுரிந்து வருகிறார். மகள் திருமணத்திற்காக இரண்டாவது மகனை அழைக்கிறார் விஜயசாந்தி.



இந்நிலையில் எதிர்பாராத விதமாக இரண்டாவது மகனும் இறந்து விடுகிறார். மகன் இறந்த செய்தி அறிந்தால் திருமணம் நின்று விடும் என்பதால், திருமணம் நடந்து முடிந்த பிறகு விஜயசாந்தியிடம் சொல்லலாம் என்று அந்த ஊருக்கு செல்கிறார் மகேஷ் பாபு.

சென்ற இடத்தில் விஜய சாந்திக்கும் அந்த ஊரில் இருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் பிரச்சனை இருப்பதை மகேஷ்பாபு அறிகிறார்.
இறுதியில் விஜய சாந்திக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையேயான பிரச்சனையை மகேஷ்பாபு தீர்த்து வைத்தாரா? மகன் இறந்த செய்தியை விஜயசாந்திடம் சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேஷ் பாபு தனக்கே உரிய பாணியில் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா துறுதுறு நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பேராசிரியராக வரும் விஜயசாந்தி கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
ஆக்ஷன் கலந்து குடும்பபாங்கான படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி. பரபரப்பாக தொடங்கும் திரைக்கதை போகப்போக அடங்கிவிடுகிறது. மகேஷ் பாபு ரயிலில் ஊருக்கு வரும் காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம். காமெடி என்ற பெயரில் ரசிகர்களை கடுப்பேத்துகிறார் இயக்குனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் 'இவனுக்கு சரியான ஆள் இல்லை' சுவாரசியம் குறைவு.
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக ஜல்லிக்கட்டு என்ற மலையாள திரைப்படம் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு திரைப்படத்தை, லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘கல்லி பாய்’ என்ற இந்திப் படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இறுதிப்பட்டியல் வரை இந்தப் படம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உருவாகியிருக்கும் நிவர் புயல் காற்றால் பிரபல இயக்குனர் ஒருவரின் கார் மீது மரம் விழுந்து சேதம் அடைந்துள்ளது.
தற்போது உருவாகி இருக்கும் நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

சாலைகளில் அதிக அளவில் தேங்கியிருக்கும் தண்ணீர் ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. ஒருபுறம் காற்று வேகமாக வீசுவதால் மரங்களும் சாய்ந்து வருகின்றன. இதனால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் கண்டேன் காதலை, வந்தான் வென்றான், பிஸ்கோத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கண்ணன், வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் மீது மரம் விழுந்ததில் காரின் முன் பக்கம் சேதமடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் தற்போது எதிரிகளாக மாறி இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்திற்கு Enemy என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். மேலும் இதன் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் கதாநாயகியாக மிருணாளினி நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரை ஒருவராக இருக்கும் விவேக், ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா... என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ந்துள்ளார். விவேக் காமெடியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் அடிக்கடி சோசியல் மீடியாவில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நிவர் புயலை மையமாக வைத்து மீம்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

புதுசா வர்ற புயலுக்கு கேதர் யாதவ் என்று பேர் வச்சிருந்தா அடிக்காமலே போயிரும். ஐடியா இல்லாத பசங்க.. என்ற புகைப்படத்தை பார்த்த விவேக் அந்த மீம்ஷை பகிர்ந்து, எப்பவோ நடிச்ச ஒரு காமெடி சீனின் ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா!! ஐடியா உள்ள பசங்க!! என்று கூறியிருக்கிறார்.
மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் `மரகதக்காடு' படத்தின் முன்னோட்டம்.
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஜெயப்பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கி உள்ள மோகன் ராஜா அடுத்ததாக தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.
தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், வேலைக்காரன், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.வாசு இயக்கத்தில் 1990-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற நடிகன் படத்தின் ரீமேக்கில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவி வருகிறது.
வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ஜெமினி கணேசன் நடித்த நான் அவனில்லை, ரஜினிகாந்தின் மாப்பிள்ளை, பில்லா, தில்லுமுல்லு ஆகிய படங்கள் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன.
இந்த வரிசையில் பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ், கவுண்டமனி, மனோரமா ஆகியோர் நடித்து 1990-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற நடிகன் படத்தை ரீமேக் செய்யும் முயற்சி நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நடிகன் ரீமேக்கையும் பி.வாசுவே இயக்க இருப்பதாகவும், சிறிய மாற்றங்களுடன் இதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

நடிகன் படத்தின் ரீமேக்கில் விஜய்யை நடிக்க வைக்க பி.வாசு விரும்பினார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாகி இருப்பதாகவும், விஜய்யுடன் இதுகுறித்து பேசி சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2-ம் பாகம் படத்தை பி.வாசு இயக்க உள்ளார். கொரோனாவால் இதன் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கி பிரபலமான ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
இவர் அடுத்ததாக விஜய்யின் 65-வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ‘தி லயன் கிங்’ போன்று முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் அமித் சாத், 2 வருடத்தில் 4 முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை உலுக்கியது. இந்த நிலையில் இன்னொரு நடிகரும் 4 தடவை தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். அவரது பெயர் அமித் சாத். இவர் சல்மான்கானின் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமானார். சூப்பர், கோல்டு, அகிரா, யாரா, சகுந்தலா தேவி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

அமித் சாத் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு சில காரணங்களால் தற்கொலை உணர்வு ஏற்பட்டது. 16-வது வயதில் இருந்து 18-வது வயது வரை 4 தடவை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். திடீரென்று எனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தற்கொலை செய்து கொள்வது சரியான முடிவு அல்ல என்று உணர்ந்தேன். பயத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்தேன். தற்கொலை உணர்வில் இருந்து வெளியே வருவதில்தான் உண்மையான வலிமை இருக்கிறது. வாழ்க்கை நமக்கு கிடைத்துள்ள பரிசு” என்றார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவு சென்றுள்ள சமந்தா, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நேற்று பிகினி உடையில் போஸ் கொடுத்தவாறு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா இந்தியாவின் பெருமை என்று சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களிலேயே சிறந்த படம் என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் பெருமை சூர்யா என்றும் 2020ம் ஆண்டின் சிறந்த படம் சூரரைப் போற்று என்றும் சூர்யா ரசிகர்கள் #PrideOfIndianCinemaSURIYA என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சூர்யாவின் சூரரைப் போற்று தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படியொரு ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.






