என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் குறித்து இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது: “நான் ஐந்தாவது வயதில் எனது தந்தையுடன் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்று புரூஸ்லி நடித்த எண்டர் தி டிராகன் படத்தை பார்த்தேன். 

    சிறுவனாக அந்த தியேட்டரில் பல படங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன். இப்போது அடுத்த படத்தின் லொகேஷனுக்காக திண்டுக்கல் சென்றபோது அந்த தியேட்டரை பார்க்க சென்றேன். தியேட்டர் உரிமையாளர் இங்கு படம் ஏதும் ஓடவில்லை என்றார். என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டர் என்றேன். தியேட்டரில் ஐந்து வயது சிறுவனாக நுழைந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்து திரையை அண்ணாந்து பார்த்தேன். 

    மிஷ்கின்

    சிறுவயதில் பார்த்த தூண்கள் அப்படியே இருந்தன. ஏன் தியேட்டரில் படம் ஓடல என்று கேட்டேன். காலம் மாறிவிட்டது. டி.வி. பைரசி, நெட் வந்ததால் படம் ஓட்டுறத நிப்பாட்டிட்டோம். அடுத்த வாரம் இந்த தியேட்டரை இடிக்கப்போகிறோம் என்றார். நெஞ்சில் வலியுடன் காரில் ஏறி வந்து விட்டேன். அந்த தியேட்டரின் வாசலில் அண்ணாந்து பார்த்தவாறு ஒரு ஐந்து வயது சிறுவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறான்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

    அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    அயலான் படக்குழு வெளியிட்ட டுவிட்டர் பதிவு

    நீண்ட நாட்களாக இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அயலான் பட அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும், சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு ஆகியோர் படப்பிடிப்பில் இணைந்திருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. 

    படக்குழு வெளியிட்ட இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் விரைவில் அயலான் படத்தின் சிங்கிள் டிராக் வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், வலிமை படத்திற்காக பைக் ஸ்டண்ட் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
    நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினர்.

    அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராத விதமாக அஜித்தின் பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியானது.

    அஜித்

    இந்நிலையில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அஜித் முன்பக்க வீலை தூக்கி பைக் ஓட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
    பிரபல நடிகராக இருக்கும் ராஜ்கிரண் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் “ராசாவே உன்ன நம்பி” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் ராஜ்கிரண். அதைத்தொடர்ந்து ” என் ராசாவின் மனசிலே” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறார். 

    ராஜ் கிரண்

    தற்போது இவர் நீண்ட தாடியுடன் வித்தியாசமான லுக்கில் பார்க்க ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார். இவரின் வித்தியாசமான லேட்டஸ்ட் லுக் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக கொண்டு வருகிறது.
    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிக்கும் எனிமி படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

    இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

    பிரகாஷ்ராஜ்

    நேற்று இப்படத்திற்கு எனிமி என்று பெயர் வைத்து டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இப்படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
    தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலை அடுத்து சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதும் இந்த ஸ்டூடியோ முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்துவிட்டதாகவும், பிக்பாஸ் வீட்டில் கூட தண்ணீர் புகுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் போட்டியாளர்கள் அனைவரையும் பாதுகாப்பாக பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மழை நின்று விட்டதை அடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பிக்பாஸ் போட்டியாளர்கள்

     இன்று இரவுக்குள் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தண்ணீரை வெளியேற்ற கால தாமதம் ஆனால் நாளைய நிகழ்ச்சியில் பழைய காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் இளம் தம்பதிகளாக இருக்கும் சாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் இளம் தம்பதிகளாக இருப்பவர்கள் சாந்தனு-கீர்த்தி. நடிகர் சாந்தனு பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கீர்த்தி பணியாற்றியிருக்கிறார்.

    சாந்தனுவும் கீர்த்தியும் இணைந்து புதிய மியூசிக் ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறார்கள். பிரபல நடன இயக்குனர் பிருந்தா இதை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இதற்கு எங்க போற டீ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    ஆல்பத்தின் தலைப்பு

    இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆர் ஜே விஜய் பாடல் எழுத, சாந்தனு பாட்டு பாட, தரண் குமார் இந்த ஆல்பத்திற்கு இசையமைக்கிறார்.
    நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இரண்டு பிரபல நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
    நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டார்கள். மீதம் இருப்பவர்களை வைத்து நடக்கும் பிக்பாஸ் போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக பார்வையாளர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் நடிகர் பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள், அவர்களால் ஒரு பிரயோஜனும் இல்லை என்று கூறியுள்ளார்.

    பரத் - பிரேம்ஜி

    இதற்கு ரிப்ளை செய்துள்ள நடிகர் பிரேம்ஜி அமரன், ‘நாம் இரண்டு பேரும் உள்ளே செல்வோமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பரத், நீங்க போக ஆசைப்படுகிறீர்களா என்று பிரேம்ஜி கிட்ட கேட்க, அதற்கு பிரேம்ஜி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... என்று கூறியிருக்கிறார்.
    எஸ்.சுரேஷ்குமார் இயக்கத்தில் சித்தார்த், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் அகடு படத்தின் முன்னோட்டம்.
    “இந்தியாவில் பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக சமூகத்தில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் பாலியல் வன்முறைகள் குறையவில்லை. இந்த கருவை அடிப்படையாக வைத்து, ‘அகடு’ படத்தை உருவாக்கி வருகிறோம்” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் எஸ்.சுரேஷ்குமார்.

    படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இவர் மேலும் சொல்கிறார்: “பாலியல் குற்றங்களுக்கு எதிராக ‘அகடு’ படம் தயாராகி இருக்கிறது. பதற்றத்தை தூண்டும் திரைக்கதை. கொடைக்கானலுக்கு 4 இளைஞர்கள் சுற்றுலா வருகிறார்கள். காமவெறி கொண்ட அவர்கள் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்.

    அகடு பட நடிகை

    ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை விடியல் ராஜூ தயாரிக்கிறார். ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது. படத்தின் இணை தயாரிப்பு: யுவராஜ் சிங்காரவேலு.”
    ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ள ஜல்லிக்கட்டு என்கிற மலையாள படம் விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
    இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு மலையாள படமான ஜல்லிக்கட்டு தேர்வாகி உள்ளது. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். 

    ஒரு மலை கிராமத்தில் இருந்து கசாப்பு கடைக்கு கொண்டு வரப்பட்ட எருமை மாடு வெட்டப்படுவதற்கு முன்னால் தப்பித்து விடுகிறது. அந்த மாட்டை பிடித்தே தீர வேண்டும் என்று கிராமத்தினர் வெறிகொண்டு அலைவதுதான் படத்தின் கரு. ஜல்லிக்கட்டு படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இப்படம் ஆஸ்காருக்கு தேர்வாகி உள்ளதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் 'ஜல்லிக்கட்டு' படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

    செல்வராகவனின் டுவிட்டர் பதிவு

    அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "லிஜோவின் 'ஜல்லிக்கட்டு' திரைப்படத்தைப் பார்த்தேன், மிகவும் பிடித்தது. இந்தப் படம் இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த அழகான படத்தால் நாம் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்". இவ்வாறு செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.
    மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி உள்பட 10 இயக்குனர்கள் நடித்திருந்தனர். 

    கவுதம் கார்த்திக்

    இந்நிலையில், ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தை ‘ஒரு கல்லூரியின் கதை’ படத்தை இயக்கி பிரபலமான நந்தா பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை சுவாதி, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.
    தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது. 

    தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். 2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். 

    சுவாதி

    திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். தற்போது ஐதராபாத்துக்கு திரும்பி பெற்றோருடன் வசிக்கிறார். சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வந்துள்ளன.
    ×