என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை பிரியாமணி, பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் என்று கூறியிருக்கிறார்.
    பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். 

    பிரியாமணி 2005 ஆம் ஆண்டில் ‘நவ வசந்தம்’ என்ற படத்தில் தருண் என்ற நடிகருடன் நடித்தார். அப்போது பிரியாமணிக்கும் தருணுக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவியது. தருண் தமிழில் புன்னகை தேசம், உனக்கு 20 எனக்கு 18 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    தருண் பிரியாமணி

    இதுகுறித்து பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், “ஒரு நாள், தருண் அம்மா ரோஜா ரமணி வந்து என்னிடம் சிறிது நேரம் பேசினார். நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீ விரும்பினால், என் மகன் தருணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர் அப்படி கேட்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் பின்னர் தருண் அவரது அம்மாவிடம் எங்கள் இருவருக்கும் இடையே நட்பு தான் காதல் அல்ல என்று கூறி புரிய வைத்தார். என்றார்.

    பிரியாமணி 2017 ஆம் ஆண்டில் முஸ்தாஃப் ராஜ் என்பவரைத் திருமணம் செய்தார். தற்போது ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘நாரப்பா’வில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
    நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, திடீர் திருமணம் செய்து கொண்டதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
    தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, சிலம்பாட்டம், தலைவன், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனா கான். சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துள்ளார். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்த சனா கான் சமீபத்தில் தான் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் அவர் கடந்த 20ம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் முப்தி அனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் தன் திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சனா கான் கூறியிருப்பதாவது,

    சனா கான்

    அல்லாவுக்காக ஒருவரையொருவர் காதலித்தோம். அல்லாவுக்காக திருமணம் செய்து கொண்டுள்ளோம். இந்த வாழ்க்கையில் அல்லா எங்களை ஒன்றாக வைத்திருந்து மறுமையிலும் ஒன்று சேர்க்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
    ஆர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான சாயிஷா, முன்னணி நடிகர் படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
    போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. கோரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. நாயகியை ஒப்பந்தம் செய்யாமலேயே முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

    இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. முதலில் 'பிசாசு' படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா ஒப்பந்தமானார். ஆனால், தேதிகள் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து அவர் விலகவே, சாயிஷா சைகல் ஒப்பந்தமானார். இதனை போயபடி சீனு தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

    சாயிஷா - பாலகிருஷ்ணா

    இந்நிலையில், தற்போது சாயிஷா சைகலும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரயகா ஜெய்ஷ்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு நாயகியாக பூர்ணா நடிக்கவுள்ளார்.
    ஆர்.டி.எம். இயக்கத்தில் சுரேஷ், ரவீனா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ’காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் முன்னோட்டம்.
    பி.ஆர்.டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். 

    காவல்துறை உங்கள் நண்பன் படக்குழு

    பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. 
    சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
    ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபரை காதலித்து வந்த ராணா கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில், சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “வாழ்க்கை மிக வேகமாகப் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு சிக்கல் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்கு சில உடல் உபாதைகள் இருந்தன. 

    ராணா டகுபதி

    ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் சேர்ந்திருந்தது. சிறுநீரகங்கள் செயல் இழந்தது. இதனால் ரத்தக் கசிவு, பக்கவாதம் வருவதற்கான 70 சதவீதம் வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன” எனக்கூறி கண்கலங்கினார் ராணா. 
    ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வந்த சூர்யா, ஒரே வாரத்தில் நடித்து முடித்துவிட்டாராம்.
    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், ஹலீதா ஷமீம், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர். 

    கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர். இதில் கவுதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். கடந்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 

    நவரசா படப்பிடிப்பு தளத்தில் சூர்யா, கவுதம் மேனன்

    இந்நிலையில், இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு ஒரே வாரத்தில் நடத்தி முடித்துள்ளனர். இந்த குறும்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை ஒருவர், தயாரிப்பாளர் மீது புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல இந்தி நடிகை மந்தனா கரிமி ராய். இவர் ஆரம்பத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பின்னர் கதாநாயகி ஆனார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். மந்தனா கரிமி ராய் தற்போது கோகோ கோலா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் சன்னிலியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். 

    படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர தாரிலால் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மந்தனா கரிமி ராய் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

    மந்தனா கரிமி ராய், மகேந்திர தாரிலால்

    அவர் கூறும்போது, “இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே தயாரிப்பாளர் எனக்கு தொல்லை கொடுத்தார். படப்பிடிப்பின் கடைசி நாளில் எனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டு கிளம்ப தயாரானேன். அப்போது நான் இருந்த வேனுக்குள் வந்து கிளம்ப விடாமல் தடுத்தார். உனக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன். எனவே இங்கேயே இருக்க வேண்டும் என்று சொல்லி தவறாக நடக்க முயன்றார்” என்றார். 

    இந்த புகாரை மறுத்து தாரிலால் கூறும்போது, “கூடுதல் நேரம் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அதிகமாக ரூ.2 லட்சம் கேட்டார். அதை கொடுத்து விட்டேன். வேறு எதுவும் நடக்கவில்லை” என்றார்.
    ‘மாநாடு’ படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்துள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி வருகிறது.

    சமீபத்தில் மாநாடு படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதில் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு இடம்பெற்றிருந்தார். இதனால் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின. 

    சிம்பு

    இந்நிலையில், இதுகுறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.  அதில் அவர் கூறியதாவது: ‘மாநாடு’ படத்தில் சிம்பு ஒரே வேடத்தில்தான் நடித்து வருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. ‘மங்காத்தா’ படத்தை அடுத்து மாபெரும் வெற்றிப்படமாக வெங்கட்பிரபுவுக்கு ’மாநாடு’ படம் இருக்கும்” என அவர் கூறியுள்ளார். 
    சூர்யா 40 படம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என இயக்குனர் பாண்டிராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யாவின் 40-வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனிடையே இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன. 

    இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் பாண்டிராஜ், “சூர்யா 40 படம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என பாண்டிராஜ் கூறியுள்ளார்.

    ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.

    நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர். 

    சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
    வாமனன் படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியா ஆனந்த் பண மழையில் நனையும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த்.

    தமிழில் கடந்த ஆண்டு பிரியா ஆனந்த் நடித்திருந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

    திரைப்படங்கள் மட்டுமல்லாது தற்போது இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார் பிரியா ஆனந்த்.

    ப்ரியா ஆனந்த்

    ‘சிம்பிள் மர்டர்’ என்ற டைட்டிலில் பிளாக் காமெடி வெப் சீரிஸாக உருவாகியுள்ள இத்தொடரின் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியா ஆனந்த். அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா தற்போது பிளாஷ் பேக் என்னும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி 1 உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, சமீபத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடித்த "சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தயாரித்து இருந்தார்.

    தற்போது மகாபலிபுரம், கொரில்லா வெற்றிப்படத்தை தொடர்ந்து டான் சேண்டி கதை, திரைக்கதை வசனத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் ரமேஷ் பி பிள்ளை.

    பிளாஷ்பேக் படக்குழுவினர்

    ரெஜினா கசென்டிரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது..

    அழகிய காதல் கதையினை முற்றிலும் அழகான பின்னனியில் அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. ரெஜினாவுடன் இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன், 96 பட புகழ் சூர்யா, மெர்சல் படபுகழ் அக்‌ஷன்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 
    ×