என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், கணவர் பற்றிய ரகசியத்தை பேட்டியளித்துள்ளார்.
    காஜல் அகர்வாலும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றார்கள்.
    தன்னுடைய காதல் பற்றி முதல்முறையாக காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, 
     
    லன்ச்சுக்கு சென்றது தான் எங்களின் முதல் டேட். அங்கு அவர் கிட்டத்தட்ட என்னை பேட்டி எடுத்தார் எனலாம். ஆனால் அதுவும் ஜாலியாக இருந்தது. என்னிடம் ப்ரொபோஸ் செய்வதற்கு முன்பு என் தந்தையிடம் பேசி அனுமதி வாங்கியிருக்கிறார் கவுதம். அவர் கண்டிப்பாக ப்ரொபோஸ் செய்வார் என்று தெரியும். அதனால் அவர் ப்ரொபோஸ் செய்தபோது ஆச்சரியமாக இல்லை. என் தந்தையிடம் முன்பே பேசினாலும் ப்ரொபோஸ் செய்யாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன்.

    நானாக பிடித்து அவரை உட்கார வைத்து பார்க்க வைத்தால் தான் படம் பார்ப்பார். இல்லை என்றால் கவுதமுக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை. எங்கள் இருவரில் கவுதம் தான் ரொமான்டிக். கவுதமுக்கு அவரின் செல்போன் மீது காதல். தற்போது புது போன் வேறு கிடைத்திருக்கிறது. அந்த காதலை கைவிட்டால் நன்றாக இருக்கும். 

    கணவருடன் காஜல் அகர்வால்

    எங்களுக்கு இடையே சண்டை வந்தால் கவுதம் தான் முதலில் விட்டுக் கொடுப்பார். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே திருமண ஏற்பாடுகள் செய்தது கடினமாக இருந்தது. திருமணத்திற்கு வந்த வேலையாட்கள், விருந்தாளிகள் என்று அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திருமணம் நடந்த இடம் சானிடைஸ் செய்யப்பட்டது.

    திருமணம் முடிந்த கையோடு புது வீட்டில் குடியேறியது வித்தியாசமான அனுபவம். இப்படி தனி வீட்டில் வசிப்பது புது அனுபவம். வீட்டையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் செல்லும் பெண்கள் மீது எனக்கு எப்பொழுதுமே தனி மரியாதை உண்டு. தற்போது அந்த மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. கவுதம் என் மீது அதிக அக்கறை வைத்துள்ளார். அவர் சரியான நேரத்திற்கு சாப்பிட்டாரா, தூங்கினாரா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் எங்காவது சென்றால் பத்திரமாக சென்றேனா, என் நாள் நல்லபடியாக இருந்ததா என்று கவுதம் கேட்பார். திருமணத்திற்கு முன்பு இப்படி எல்லாம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், நடிகர் தனுஷின் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.

    தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் ‘ரகிட ரகிட’ பாடல் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

    தனுஷ் - செல்வராகவன்

    யூடியூபில் 34 மில்லியனுக்கும் அதிக பார்வைகளைப் பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரும் நடனமாடி அதை சமூகவலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என் ரகிட ரகிட நடனம்’ எனக் கூறி வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் காருக்குள் அமர்ந்தபடி பாடலை ஒலிக்கவிட்டு அதை வீடியோ பதிவாக செய்திருக்கிறார் செல்வராகவன்.
    ஆனந்த் ராஜன் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிருசா குரூப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யுத்த காண்டம்’ படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமா, புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது இங்கே புதுமைகள் மலர்ந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் அமைந்த புதிய படம், ‘யுத்த காண்டம்.’ இது, ஒரே ஷாட்டில் படமாகி இருக்கிறது. ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாகவும், ‘கோலி சோடா-2’ படத்தில் நடித்த கிருசா குரூப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சுரேஷ்மேனன், யோக் ஜேபி, போஸ் வெங்கட் மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். ஆனந்த் ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார். இவர், டைரக்டர் சமுத்திரக்கனியிடம் உதவி டைரக்டராக இருந்தவர். பத்மாவதி, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.

    யுத்த காண்டம் படக்குழு

    படத்தை பற்றி டைரக்டர் ஆனந்த்ராஜன் கூறியதாவது: “இது, யதார்த்த சினிமா. நேர்த்தியான வர்த்தக படமாகவும் இருக்கும். 50 நாட்கள் ஒத்திகை பார்த்த பின்னரே படப்பிடிப்பை தொடங்கினோம். ஒரு விபத்தில் சிக்கிய கதாநாயகனும், கதாநாயகியும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் காவல் நிலையத்துக்கு ஏன் சென்றார்கள்? என்பது கதை. படம் ஆரம்பித்து 5-வது நிமிடத்தில், ‘சிங்கிள் ஷாட்’டில் உருவான படம் என்பதை ரசிகர்கள் மறந்து விடுவார்கள்”.
    மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த இந்தி நடிகர் இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
    பிரபல இந்தி இளம் நடிகர் இம்ரான்கான். இவர் நடிகர் அமீர்கானின் சகோதரி மகன் ஆவார். 2008-ல் வெளியான ஜானே து யா ஜானே நா என்ற இந்தி படம் மூலம் இம்ரான்கான் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார். படம் வெற்றி பெற்றது. 

    தொடர்ந்து ஹிட்நேப், லக், ஐ ஹேட் லவ் ஸ்டோரி, டெல்லி பெல்லி, ஹோரி தேரே பியார் மெய்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக அவரது நடிப்பில் கட்டி பட்டி படம் வந்தது. முதல் படத்துக்கு பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. 

    மனைவி, குழந்தையுடன் இம்ரான்கான்

    இம்ரான்கானை விட்டு அவரது மனைவி அவந்திக்காக மாலிக்கும் பிரிந்து சென்று விட்டார். மகள் இமராவும் தாயுடன் இருக்கிறார். இதனால் விரக்தியில் இருந்த இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகி விட்டார். மனைவி பிரிந்து விட்டார். சினிமா வாழ்க்கையும் போய்விட்டது என்று ரசிகர்கள் பலரும் அவர் மீது பரிதாபப்பட்டு வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
    ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ளதால், இனி வரும் வாரங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. இன்னும் 50 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், வீட்டினுள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். வழக்கமாக இறுதி வாரத்தில் நான்கு பேர் மட்டுமே வீட்டினுள் இருப்பர். 

    ஆனால் தற்போதுள்ள நிலையில் வாரத்துக்கு ஒருவரை வெளியேற்றினால் அந்த எண்ணிக்கையை அடைய முடியாது. நேற்றைய எபிசோடின் இறுதியில் இதுபற்றி பேசிய கமல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சூசகமாக கூறிவிட்டு சென்றார். 

    ஆதலால் இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்காக சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகிய 7 பேர் தேர்வாகி உள்ளனர்.  இவர்களில் குறைவான வாக்குகளை பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நடிகை அதுல்யா ரவி ஆர்வம் காட்டவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    வரும் நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியானது.  

    இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. இந்தப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக ஒப்பந்தமான போது, ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதற்கடுத்து வந்த காலகட்டத்தில் சுசீந்திரன், சமுத்திரக்கனி போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தான் மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக மாறிவிட்டோம் என்கிற உணர்வு ஏற்பட்டு விட்டது.

    எங்கள் படம் ஒவ்வொரு முறை சர்வதேச விருது பெற்ற போதெல்லாம் அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட கூட மறுத்துவிட்டார். மேலும் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் என படத்தின் எந்த ஒரு புரமோஷனிலும் அவர் தனது பங்களிப்பை தரவில்லை.

    என் பெயர் ஆனந்தன் பட போஸ்டர்

    தமிழ் நடிகைகளுக்கு ஏன் வாய்ப்பு தர மறுக்கிறீர்கள் என பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.. ஆனால் தமிழ்ப்பெண் என்பதாலேயே எங்கள் படத்தில் அதுல்யா ரவியை நடிக்கவைத்து விட்டு, தற்போது புரமோஷன் நிகழ்ச்சிக்க்கு கூட அவரை கெஞ்ச வேண்டிய நிலைக்குத்தான் எங்களை தள்ளியுள்ளார்.

    இன்னும் சொல்லப்போனால் தான் நடித்த பெரிய இயக்குனர்களின் படங்கள் பெயரை மட்டுமே பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்பும் அதுல்யா, வாய்ப்பு இல்லாத காலத்தில் தனக்கு கிடைத்த சிறிய படங்களுக்கு பாராமுகம் காட்டுகிறார். 

    படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டே ஆகவேண்டும் என நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இதற்கான விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்” என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில்.
    சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
    சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

    அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார்

    சூரரைப்போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களான அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    காஜல் அகர்வால் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய நிலையில், வேறு சில நடிகைகளும் அங்கு சென்றுள்ளனர்.
    நடிகை காஜல் அகர்வால் மாலத்தீவில் தங்கி ஹனிமூனை கொண்டாடினார். மொத்தம் 4 நாட்கள் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய காஜல், இதற்காக அவர் ரூ.40 லட்சம் செலவு செய்ததாக கூறப்பட்டது. அவர் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    இந்நிலையில், காஜலை தொடர்ந்து வேதிகா, ரகுல் பிரீத் சிங், சமந்தா ஆகிய நடிகைகளும் தங்களது விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவிற்குச் சென்றுள்ளனர். தனது கணவரின் பிறந்தநாளைக் கொண்டாட அங்கு சென்றுள்ள சமந்தா, ஆழ்கடலில் நீச்சல் அடிக்கும் சாகச பயணத்தையும் மேற்கொண்டுள்ளார். 

    ரகுல் பிரீத் சிங், வேதிகா, சமந்தா

    இதேபோல் குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள ரகுல் பிரீத் சிங், பிகினி உடையில் போஸ், ஆழ்கடல் நீச்சல் என விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையிலான அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
    சென்னை:

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் டி.ராஜேந்தர் அணிக்கும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணிக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், முரளி அணியின் கை ஓங்கியது. 

    தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

    இதேபோல் துணைத்தலைவர் தேர்தலிலும் டி.ராஜேந்தர் அணி தோல்வி அடைந்தது. அவரது அணியைச் சேர்ந்த யாரும் தேர்ந்தெடுக்கப்பவில்லை. முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் 475 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசன் 425 வாக்குகளும் பெற்று துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார். இதுதவிர துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர்.

    இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி வளாகத்தில் இன்று காலையில் தொடங்கியது. இதில், தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார்.
    வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் முன்னோட்டம்.
    உண்மை சம்பவங்களின் தொகுப்பாக ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘என்றாவது ஒருநாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமி யின் மகன் வெற்றி துரைசாமி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். 

    தனது முதல் படம் பற்றி அவர் கூறியதாவது: “உண்மை சம்பவத்தை கருவாக வைத்து வரும் கதைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. நிஜ சம்பவங்களை திரைக்கதை என்னும் மாலையாக அழகாக கோர்த்து பல்வேறு இயக்குனர்கள் கதைகளை சொல்லும் விதம் அதிகமாகி வருகிறது.

    நாளிதழில் வரும் செய்திகளை படித்து விட்டு எளிதில் கடந்து விடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு மற்றும் உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை, இது.

    என்றாவது ஒருநாள் பட போஸ்டர்

    குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிய மக்களும், கால்நடைகளுடனான அவர்களின் உறவும் கதையில் முக்கிய பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

    நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விதார்த், வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிக்கும் ரம்யா நம்பீசன், ‘சேதுபதி’ படத்தில் நடித்த ராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தி தியேட்டர் பீப்பிள் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்”.
    தமிழில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் அவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சூர்யா, பாண்டிராஜ்

    இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×