என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, அடுத்ததாக காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான காளி வெங்கட் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க, நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக டி.ராஜேந்தர், பொதுச்செயலாளர்களாக சுபாஷ் சந்திரபோஸ், ஜே.சதீஷ் குமார், துணை தலைவர்களாக சிங்காரவடிவேலன், பிடி.செல்வகுமார், பொருளாளராக கே.ராஜன் பொறுப்பேற்றனர்.
வினியோகஸ்தர் சங்கத்தில் டி.ராஜேந்தர் தலைவராக இருப்பதால் இந்த சங்கத்தில் தலைவர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார். இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தரும் கவுரவ ஆலோசகராக டி.ராஜேந்தரும் சங்க உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி வெளியிடப்படும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டது. அதில் ராம் சரண் குதிரையில் செல்வது போலவும், ஜூனியர் என்.டி.ஆர் புல்லட்டில் செல்வது போலவும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், அந்த போஸ்டர் ஹாலிவுட்டில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த கோஸ்ட் ரைடர் பட போஸ்டரின் காப்பி போல் இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அண்மையில் வெளிவந்த தனுஷின் ஆயிரத்தில் ஒருவன் 2, கமலின் விக்ரம் பட போஸ்டர்கள் இதேபோல் காப்பி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
கர்ணன் படத்தை பார்த்து திகைத்துப் போனதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டுள்ளனர். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தைப் பற்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கர்ணன் படம் பார்த்தேன், திகைத்துப் போனேன். இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, தனுஷ் மற்றும் படக்குழுவினரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கர்ணன், அனைத்தும் கொடுப்பான்” எனப் பாராட்டியுள்ளார்.
தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை சரவ் சண்முகம் இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக நடிக்க, அவரது தந்தை அருண் விஜய் ஒப்பந்தமாகி உள்ளார்.
இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது: “இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார். நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஒப்பந்தமாவதற்கு முன் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டார். தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. அர்னவ் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது” என கூறினார்.
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான புதிய படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க./பெ. ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத்தே உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன.
இந்தியில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்துள்ள திரிஷ்யம் 2 படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடுவதை தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் வரவேற்று உள்ளார்.

வித்யாபாலன் கூறும்போது, “ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும். புதிய படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காதவர்களுக்கு ஓ.டி.டி. தளங்கள் கைகொடுக்கும். நான் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். உரிய நேரத்தில் அதை செய்வேன்'' என்றார்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.
துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் 2-வது ஹீரோயினாக நடித்த நிரஞ்சனியை திருமணம் செய்ய உள்ளாராம். இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார்.

இது காதல் திருமணம் இல்லையாம், முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாம். இவர்கள் திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 25-ந் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது. பின்னர் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் விதமாக சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2009-ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமான யோகிபாபு, தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், யோகிபாபு, ஒவ்வொரு பந்தையும் நேர்த்தியான கிரிக்கெட் வீரர் போல் ஆடுவதாக பாராட்டி வருகின்றனர். மா.கா.பா.ஆனந்த் பதிவிட்டுள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் நெருங்கிப் பழகுவதை பார்த்த ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த், தமிழில் கம்பீரம் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். நடிகை ராக்கி சாவந்துக்கு ரித்தேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ராக்கி சாவந்துக்கும், சக போட்டியாளரான அபிநவ் சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ராக்கி சாவந்த் தன் காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். திருமணமான அபிநவும் அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். சமீபத்திய எபிசோடில் நடிகை ராக்கி சாவந்த் ‘ஐ லவ் யூ அபிநவ்’ என உடல் முழுக்க எழுதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ளக்காதலை சல்மான் கான் ஏன் கண்டிக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். டி.ஆர்.பி.க்காக கள்ளக்காதலை ஊக்குவிப்பதா என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
பிரபல இந்தி நடிகர் வருண் தவான், தனது பள்ளிப்பருவ காதலியான நடாஷாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் வருண் தவான். இவர் பிரபல இந்தி பட இயக்குனர் டேவிட் தவானின் மகன். வருண் தவானும் ஆடை வடிவமைப்பாளர் நடாஷா தலாலும் காதலித்தனர். வருண் தவான் 6-வது வகுப்பு படித்தபோது முதல் முறை நடாஷாவை பார்த்தார். பள்ளியில் படித்தபோது நண்பர்களாக பழகினார்கள். அதன்பிறகு காதலிக்க தொடங்கினர்.
இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வருண் தவான், நடாஷா திருமணம் கடந்த ஆண்டு மே மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனாவால் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் வருண் தவான், நடாஷா தலால் திருமணம் மராட்டிய மாநிலம் அலிபாக்கில் நடந்தது.

திருமணத்தில் இந்தி திரையுலகினர் பங்கேற்று வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினர். முன்னதாக திருமணம் நடந்த இடத்துக்கு வருண்தவான் வந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கி சேதமடைந்தது. வருண் தவானுக்கு காயம் ஏற்படவில்லை.
பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.
"மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.
"அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!
படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவில்லை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.
ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.
இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.
அவர்கள் எண்ணியது போலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.
பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.
பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''
பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.
படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''
கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.
அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.
இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!
பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.
"மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.
இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.
"மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.
"மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-
"மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.
வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.
வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.
"ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.
அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.
கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.
சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றம் புகழ் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
பத்ம விபூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:-
1. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே
2. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
3. பெல்லே மொனப்பா ஹெக்டே
4. மறைந்த நரிந்தர் சிங் கபானி
5. மவுலானா வஹிதுதீன் கான்
6. பி.பி. பால்
7. சுதர்ஷன் சாஹூ
பத்ம பூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:-
1. கிருஷண்ன் நாயர் சாந்த குமாரி சித்ரா
2. மறைந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய்
3. சந்திரசேகர் கம்பரா
4. சுமித்ரா மகாஜன்
5. நிபேந்த்ரா மிஸ்ரா
6. மறைந்த முன்னாள் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்
7. மறைந்த கேசுபாய் பட்டேல்
8. மறைந்த கல்பே சாதிக்
9. ரஜ்னிகாந்த் தேவிதாஸ் ஷ்ரோஃப்
10. தர்லோசான் சிங்
பத்ம ஸ்ரீ விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்:-
1. ஸ்ரீதர் வேம்பு
2. மறைந்த திருவேங்கடம் வீரராகவன்
3. மறைந்த பி. சுப்ரமணியன்
4. மராச்சி சுப்ரமண்
5. மறைந்த கே.சி. சிவசங்கர்
6. பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்
7. பாப்பம்மாள்
8. சாலமன் பாப்பையா
இவர்களுடன் மொத்தம் 102 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.