என் மலர்
சினிமா

சந்தோஷ் நாராயணன்
தனுஷின் ‘கர்ணன்’ படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன் - சந்தோஷ் நாராயணன் டுவிட்
கர்ணன் படத்தை பார்த்து திகைத்துப் போனதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டுள்ளனர். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தைப் பற்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கர்ணன் படம் பார்த்தேன், திகைத்துப் போனேன். இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, தனுஷ் மற்றும் படக்குழுவினரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கர்ணன், அனைத்தும் கொடுப்பான்” எனப் பாராட்டியுள்ளார்.
Next Story






