என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகை பிரியாமணி தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
    தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

    தமிழில் ‘கொட்டேஷன் கேங்க்’ படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். அதற்கு நிறைய வரவேற்பும், விமர்சனங்களும் கிளம்பின. 

    பிரியாமணியின் இன்ஸ்டா பதிவு

    இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றார். இதனால் கோபமான பிரியாமணி முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன் என்று சாடினார். பிரியாமணியின் பதில் வைரலாகி பரபரப்பானது. சரியான பதிலடி கொடுத்ததாக பிரியாமணியை வலைத்தளத்தில் பலர் பாராட்டியும் வருகிறார்கள்.
    வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய சினிமாத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு, மத்திய அரசால் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. 

    அந்த வகையில், 51வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

    ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
    ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    சென்னை:

    இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் “தாதா சாகேப் பால்கே” விருது வழங்கப்படுகிறது.

    இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969-ம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பல்வேறு திரை பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட டைரக்டர் பாலச்சந்தர் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த விருதை பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-


    ரஜினிகாந்துக்கு 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரை எழுத்தாளராகவும் அவரது பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

    இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் தமிழகத்தில் இருந்து இந்த உயரிய விருதை பெறும் 2-வது நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

    திரைத்துறையில் இந்திய அளவில் சாதனைப் புரிந்த நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். வங்க மொழி படத்திலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

    சாதாரண பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கை தொடங்கிய ரஜினிகாந்த் 1973-ம் ஆண்டு சென்னைக்கு வந்து திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றார்.

    பின்னர் 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தபோதிலும் ரஜினி நடிப்பு வரவேற்பு பெற்றது.

    இதன் பின்னர் 1976-ம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் பெண் ஆசை பிடித்தவராக ரஜினிகாந்த் நடித்து இருந்தார். இது சிறந்த நடிகராக அவரை அடையாளம் காட்டியது.

    16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த் வில்லன் வேடத்தில் கவர்ந்து இருப்பார்.

    இதன் தொடர்ச்சியாக வெளிவந்த “புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை” போன்ற படங்களில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றார்.

    ‘பில்லா’, ‘போக்கிரி ராஜா’, ‘முரட்டுக்காளை’ போன்ற திரைப்படங்கள் ரஜினிகாந்தை அதிரடி நாயகனாக வெளிகாட்டியது. ‘தில்லுமுல்லு’ படம் மூலம் தனது சிறந்த நகைச்சுவை உணர்வையும் ரஜினிகாந்த் வெளிப்படுத்தினார்.

    தனது 100-வது படமாக ‘ராகவேந்திரா’ படம் வெளியானது.

    1980-ம் ஆண்டுகளில் வெளிவந்த ‘வேலைக்காரன்’, ‘தர்மத்தின் தலைவன்’ போன்ற சிறந்த பொழுதுபோக்கு நிறைந்த படங்களாக அமைந்திருந்தது.

    1990-ம் ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 1995-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

    அந்த படத்தில் ரஜினி பேசிய ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ வசனம் இப்போதும் பிரபலம். அந்த வகையில் தமிழக மக்கள் மனதில் பிரபலமான வசனமாகவே அது மாறியுள்ளது.

    இதன் பின்னர் 2002-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘பாபா’ படம் தோல்வியை தழுவி இருந்தது.

    இதன் பின் 2005-ம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’, 2007-ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’, 2010-ம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

    இதன் பின்னர் லிங்கா, கபாலி, காலா, 2.0, பேட்ட, தர்பார் உள்ளிட்ட படங்களும் வெளியானது. ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 168-வது படமாகும்.

    ரஜினிகாந்த் 1983-ம் ஆண்டு பாலிவுட்டிலும் புகுந்து கலக்கினார். இந்தியில் அவர் நடித்த முதல் படம் ‘அந்தகானூன்’ அமிதாப்பச்சனோடு இணைந்து ரஜினிகாந்த் நடித்த இந்த படம் 74 தியேட்டர்களில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

    1984-ம் ஆண்டு இந்தியில் அவர் மூன்று வேடங்களில் நடித்த ‘ஜான் ஜானி ஜார்த்தனன்’ படமும் பெரும் வெற்றியை பெற்றது. இதே போன்று ரஜினிகாந்த் நடித்த மற்ற மொழி படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன.

    ரஜினிகாந்த் இதுவரை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 6 முறை தமிழக அரசின் விருது ரஜினிக்கு கிடைத்துள்ளது. இதில் 4 முறை சிறந்த நடிகருக்கான விருதும், 2 முறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. பிலிம்பேர் விருதையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

    2014-ம் ஆண்டு பத்மபூ‌ஷண், 2016-ம் ஆண்டு பத்மவிபூ‌ஷண் ஆகிய விருதுகளையும் மத்திய அரசு ரஜினிகாந்துக்கு வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.

    "சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.

    நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.

    இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.

    அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

    "சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.

    திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.

    சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை

    விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.

    அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.

    பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.

    நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.

    டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர்,  "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.

    மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.

    பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்

    னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.

    "கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''

    "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.

    பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தியின் ரசிகர்கள் செயலால் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
    கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சுல்தான்’. ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கார்த்திக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அவ்வப்போது பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.

    கார்த்தியின் ரசிகர்கள்

    இந்நிலையில், கார்த்தி ரசிகர்கள் 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கிறார்கள். இதை சாப்பிட்ட பொதுமக்கள், 10 ரூபாய்க்கு யாரும் உணவு கொடுப்பதில்லை. கார்த்தி ரசிகர்கள் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உணவு டெலிவரி செய்யும் ஆண்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கார்த்திக்கும் அவரது ரசிகர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் கங்கனா பிறந்தநாளில் வெளியானது. இது ரசிகர்ளிடையே அதிக வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மழை மழை என்னும் முதல் பாடலை ஏப்ரல் 2 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

    தலைவி

    தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    சில வருடங்களுக்கு முன்பு நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ராதாரவி, மீண்டும் அவரைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
    நடிகரும், அரசியல் பிரமுகருமான ராதாரவி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விழாவில், நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசினார்.

    இது மிகவும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை எதிரொலியாக திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பிஜேபி கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, நயன்தாரா பற்றி நான் பேசியதால் என்னை திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியது. நான் முழுவதுமாக கட்சியை விட்டு வெளியேறினேன். 

    ராதாரவி - நயன்தாரா

    நயன்தாரா யாரு? திமுக கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரா? திமுகவிற்கும் நயன்தாராவிற்கும் என்ன உறவு? உதயநிதிக்கும் நயன்தாராவிற்கும் உறவு என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்’ என்று பேசியிருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாகி வருகிறது.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கபாலி பட நடிகர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ’கபாலி’ படத்தை தொடர்ந்து ’அண்ணாத்த’ படம் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடித்து வருகிறார் விஸ்வாந்த். இவர் தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ படக்குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கபாலி விஸ்வாந்த்

    ‘வெளுத்து கட்டு’, ‘தோனி’, ’தடையற தாக்க’ என பல படங்களில் நடித்து வந்த விஸ்வாந்த், ‘கபாலி’ படத்தில் பலரால் பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ஆரம்ப பணிகளில் இந்த அளவிற்கு பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

    செல்வராகவன் - தனுஷ்

    தற்போது, இந்த அளவிற்கு ஆரம்ப பணிகளில் ஒருபோதும் பணியாற்றவில்லை என்றும் நானே வருவேன் திரைப்படம் படப்பிடிப்புக்கு தயாராகிறது என்றும் இயக்குனர் செல்வராகவன் கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார்.
    ராதிகா ஆப்தே நடிப்பில் ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களை தவறாக சித்தரித்து ஒளிபரப்பான இந்த தொடரை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். 

    இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிசை உடனடியாக நீக்க வலியுறுத்தி நடிகை கங்கணா உள்ளிட்ட பல பிரபலங்கள் போர்கொடி உயர்த்தினர். இதை பார்த்த மத்திய அரசு, ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் சட்ட விதிமுறைகளை வகுத்தது. 

    ராதிகா ஆப்தே

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளதாவது, ’ஒரு விஷயத்திற்கு எதிராக மாற்று கருத்து உருவாகும்போது சுதந்திரத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் இடம் கொடுக்க வேண்டும். நமது வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது. ஓடிடி தளங்களால் ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும் கூட ஐந்து ஆண்டுகள் பொருத்திருந்து பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இயக்குனர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து கண்கலங்கி இருக்கிறார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும்போது, கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார். கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள். பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான். 

    மாரி செல்வராஜ் - தனுஷ்

    என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார். என்றார்.
    நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஆரி, வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
    தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார்.

    இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு வீடியோ அமைந்துள்ளது.

    பிக்பாஸ் ஆரி

    நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க எனும் வாசகத்தோடு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஓட்டு போடுவது எப்படி நமது கடமையோ, அதேபோல் சமூக இடைவெளி யோடு மாஸ்க் அணிந்து ஓட்டு போடுவது நமது கடமையாகும் என்கிறார் நடிகரும், சமூக ஆர்வலரும் ஆன ஆரி அர்ஜுனன்.
    ×