என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 பட பூஜையில் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

    இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்துக் கொள்ளவில்லை. 

    பூஜா ஹெக்டே - விஜய்

    இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், தளபதி 65 பட பூஜையில் இன்று என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தேன். அதனால் தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். இருப்பினும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார்.
    பா.பாண்டியன் இயக்கத்தில், சந்தோஷ் சரவணன், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கால் டாக்ஸி’ படத்தின் முன்னோட்டம்.
    கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில், தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”.

    இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்" , "மரகத காடு" ,“டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

    கால் டாக்ஸி படக்குழு

    தொழில்நுட்ப கலைஞர்கள்: நடனம்- இராபர்ட், இருசன்; ஸ்டண்ட்- எஸ்.ஆர்.ஹரிமுருகன், எடிட்டிங்- டேவிட் அஜய், ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை, பாடல்கள், இசை- பாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். 
    விஜய் நடிப்பில் உருவாக உள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இப்படத்தில் மற்றுமொரு ஹீரோயின் நடிக்க உள்ளதாகவும், அது ராஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வந்தது.

    அபர்ணா தாஸ்

    இந்நிலையில், மலையாள நடிகையான அபர்ணா தாஸ், தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தளபதி 65 படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். ‘தளபதி 65’ எனும் மிகப்பெரிய படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 


    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவின், அடுத்ததாக விஜய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
    சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் கவினும் கலந்துகொண்டதால், அவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதுதவிர வி.டி.வி கணேஷும் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். 

    தளபதி 65 படக்குழு

    தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப் போற்று’
    சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    சூர்யா

    இந்நிலையில், இப்படத்தை தற்போது இந்தியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சூரரைப்போற்று படத்தை இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளனர். இப்படத்தை வருகிற ஏப்ரல் 4-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரரைப் போற்று படத்தின் தமிழ் பதிப்பும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது.

    விஜய்

    இந்நிலையில், தளபதி 65 படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை பூஜா ஹெக்டே, “வேறு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளதால், தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    தளபதி 65 படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டாலும், படப்பிடிப்பு தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே தொடங்கும் என கூறப்படுகிறது.
    31 வயதே ஆகும் இளம் பாடகர், கார் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜான். இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சொந்த ஊரான கார்தார்பூருக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். ஜாந்தியாலா குரு என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் நின்ற சரக்கு லாரி மீது தில்ஜானின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் தில்ஜான் படுகாயம் அடைந்தார். 

    தில்ஜான்

    உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து போனார். அவருக்கு வயது 31. தில்ஜானின் மனைவி மற்றும் குழந்தைகள் கனடாவில் உள்ளனர். தில்ஜான் மரணம் பஞ்சாப் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
    மாஸ்டர் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.
    விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய்சேதுபதி வில்லனாக வந்தார். மாஸ்டர் படத்துக்கு பிறகு நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை இயக்கி பிரபலமான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது விஜய்க்கு 65-வது படம். கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை தேர்வு செய்துள்ளனர். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

    விஜய், நெல்சன்

    இந்நிலையில் அடுத்த மாதம் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும், விஜய் அதில் பங்கேற்று நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். 

    ஆனால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் சில காட்சிகளை மட்டும் ரஷ்யாவில் எடுத்துவிட்டு மீதி காட்சிகளை சென்னையில், ரஷ்ய அரங்கு அமைத்து படமாக்க முடிவு செய்துள்ளனர். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.
    இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்து வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    வெற்றிமாறன், இளையராஜா, சூரி

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு விடுதலை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே பெயரில் கடந்த 1986ம் ஆண்டு சிவாஜி, ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியானது. ஆதலால் அத்தலைப்பை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் இயக்குனர் வெற்றிமாறன் பேசி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.  
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் மோகன்லால், ‘பரோஸ்’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
    மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழில் இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘பரோஸ்’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இது 3டி தொழில்நுட்பத்தில், குழந்தைகளுக்கான படமாக தயாராகிறது. இப்படத்தில் பிருத்விராஜ், பிரதாப் போத்தன், பாஸ்வேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. 

    மோகன்லால், அஜித்

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. மோகன்லால் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அஜித் நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இதனை பரோஸ் படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதன்மூலம் அது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
    பழனி அருகே நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நேற்று நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை பார்வையிட அந்த மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் காலை முதலே அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

    இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. 

    சுகாதாரத்துறையினர்

    குறிப்பாக, படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை, முகக்கவசம் அணியவில்லை என்பன போன்ற புகார் எழுந்தன. அப்போது, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத காரணத்தால் படக்குழுவினருக்கு ரூ.1,500 அபராதம் விதித்தனர்.

    கடந்த மாதம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் இயக்குனர் ஹரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ், தற்போது ரூ.6 கோடி மதிப்பிலான சொகுசு கார் வாங்கி உள்ளார்.
    ‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

    தற்போது ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், அடுத்ததாக ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். இதையடுத்து கே.ஜி.எப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்திலும் பிரபாஸ் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன.

    பிரபாஸ் வாங்கியுள்ள சொகுசு கார்

    இந்நிலையில், நடிகர் பிரபாஸ், ரூ. 6 கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு காரை வாங்கியிருக்கிறார். ஆரஞ்சு நிறத்தில் அவர் வாங்கியிருக்கும் அந்த காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைலராகி வருகின்றன.  அவர் சாலைகளில் அந்த காரில் செல்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இந்த ரக சொகுசு காரை வெகு சில திரைப்பிரபலங்கள் மட்டுமே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×