என் மலர்
சினிமா செய்திகள்
நரேன், விஷ்வா, சௌமியா நடிப்பில் வசந்த் நாகராஜன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ரூம் மேட்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் நரேனும், விஷ்வாவும் நெருங்கிய நண்பர்கள். விஷ்வா காதலித்த பெண்ணை, நரேன் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். இதனால் கோபமடையும் விஷ்வா, நரேனை பழிவாங்க முயற்சி செய்கிறார். சில தினங்களில் நரேனுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், ஆளில்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கு அவரை வரவழைக்கிறார் விஷ்வா.
ஒரு வீட்டில் நரேனை அடித்து, போனை உடைத்து விட்டு வீட்டையும் பூட்டு போட்டு செல்கிறார் விஷ்வா. அதே வீட்டில், ஒரு விபச்சார பெண் சௌமியாவும் இருக்கிறார். இறுதியில் அந்த வீட்டில் இருந்து விஷ்வா மற்றும் சௌமியா எப்படி வெளியேறினார்கள். அந்த வீட்டிற்கு சௌமியா வர காரணம் என்ன? சௌமியாவிற்கும், விஷ்வாவிற்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நரேன், வில்லன் விஷ்வா, விபச்சார பெண் சௌமியா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் இவர்கள் மூன்று பேர் மட்டுமே வருகிறார்கள். நரேன், சௌமியா இரண்டு பேர் அதிக காட்சிகளில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
பூட்டிய வீட்டிற்குள் இருப்பவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்ற கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்த் நாகராஜன். குறைந்த பட்ஜெட்டில் ஓரளவிற்கு ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார். இரண்டு பேரை அதிகளவிற்கு காண்பித்தாலும் பெரியதாக போரடிக்காமல் திரைக்கதை நகர்த்தி இருக்கிறார். லாஜிக் மீறல்கள், காமெடி காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

கரண் இசையில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவில் கவனிக்க வைத்திருக்கிறார் விஷ்ணு நந்தன்.
மொத்தத்தில் ‘ரூம் மேட்’ சுவாரஸ்யம் குறைவு.
ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகும் கார்பன் படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விதார்த் நடிப்பில் 25 வது திரைப்படமாக உருவாகும் படத்திற்கு “கார்பன்” என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கதையை சரியாக பிரதிபலிக்கும் பொருட்டே, இத்தலைப்பை வைத்ததாக இயக்குநர் ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார். படத்தில் விதார்த் கதாப்பாத்திரம், கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப்பிசகாமல் அடி பேப்பரில் பதிவது போல் இந்த சம்பவம் நடைபெறுவதால் படத்திற்கு ‘கார்பன்’ தலைப்பு பொருத்தமாக இருக்குமென இத்தலைப்பை வைத்ததாக கூறியுள்ளார் இயக்குநர்.
இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி, டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயச்சந்திரன் BFA கலை இயக்கம் செய்ய, பிரவீன் K L எடிட்டிங் செய்துள்ளார். கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளது. பென்ச்மார்க் பிலிம்ஸ் சார்பில் ஜோதி முருகன் மற்றும் ஶ்ரீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள் பலரும் சமையல் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தோசை சுடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் எனக்கு ஸ்பெஷல் தோசை செய்து கொடுங்கள், முட்டை தோசை செய்து கொடுங்கள் என்று ஆர்டர் செய்து வருகிறார்கள்.
பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் பட நிறுவனத்திடம் ரூ.30 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை விசாரித்த நீதிபதி புது உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை சாக்ஷி மாலிக் சில வருடங்களுக்கு முன்பு போட்டோ ஷூட் நடத்தி அதில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களை சாக்ஷியிடம் அனுமதி பெறாமல் நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான ‘வி' படத்தில் பயன்படுத்தி இருந்தனர்.
இந்த புகைப்படத்தை திரையில் காட்டும்போது பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனமும் பேசப்பட்டு இருந்தது. இதையடுத்து சாக்ஷி மாலிக் மும்பை கோர்ட்டில் ரூ.30 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். படத்தில் இருந்து சாக்ஷி மாலிக் புகைப்படம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நீக்கப்பட்டது. படக்குழுவினர் மன்னிப்பும் கேட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.படேல் பட நிறுவனம் சாக்ஷி கேட்கும் தொகையை நஷ்ட ஈடாக வழங்குமா? இதில் முடிவு எடுக்கவில்லை என்றால் வழக்கை கோர்ட்டு விசாரித்து வழக்கில் சாக்ஷி வெற்றி பெற்றால் அவர் கேட்கும் தொகையை வழங்க வேண்டும். இதுகுறித்து பேசி முடிவு எடுத்து ஏப்ரல் 1-ந் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த வைபவி ஷாண்டில்யா தனது குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழில் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வைபவி ஷாண்டில்யா தனக்கும் தனது தாய், தந்தையரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீயின் புதிய மாற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார்.
இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அட்லீ புதிய ஹேர்ஸ்டைல் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. புதிய ஸ்டைலில் அட்லீயின் மாற்றத்திற்கு பலர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது பெற்றோர்கள் பற்றி பதிவு செய்திருக்கிறார்.
நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்தி பட உலகில் போதை மருந்து புழக்கம் உள்ளது என்றார். மராட்டிய அரசை சாடினார். இதனால் அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம், விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது பெற்றோரின் ஆண் குழந்தை, நான் பிறந்தபோது இறந்துபோனதால் நான் அவர்களுக்கு பிடிக்காத குழந்தையாகவே வளர்ந்தேன். என்மீது அவர்கள் வெறுப்பு காட்டியே வளர்த்தார்கள். ஆனால் இப்போது என்னை சிறந்த நடிகை என்று பாராட்டுகிறார்கள்.

நான் பணம் சம்பாதிக்கவும், புகழுக்காகவும் சினிமாவில் நடிக்க வரவில்லை. குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் என்னால்தான் நடிக்க முடியும் என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நம்புகின்றனர். அது பெருமையாக உள்ளது. குழந்தையாக இருந்தபோது நான் வெறுக்கப்படும் நிலையில் இருந்தாலும் இப்போது உலகம் போற்றும் நடிகையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.
நடிகையும், ஆந்திரா மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரோஜாவிற்கு ஆபரேசன் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. இவர் சூரியன், உழைப்பாளி, வீரா, ராஜமுத்திரை, என் ஆசை ராஜாவே, ராசையா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சின்ன ராஜா, ஹவுஸ்புல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். பின்னர் ஆந்திர அரசியலில் ஈடுபட்டு தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
நடிகை ரோஜாவுக்கு கர்ப்ப பையில் பிரச்சினை இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கர்ப்பப்பை கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது கர்ப்பப்பை ஆபரேசன் செய்து கட்டி அகற்றப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரோஜாவின் கணவரும், டைரக்டருமான ஆர்.கே.செல்வமணி கூறும்போது, “ரோஜாவுக்கு இரண்டு ஆபரேசன்கள் நடந்துள்ளன. கடந்த வருடமே இந்த ஆபரேசன் நடக்க வேண்டி இருந்தது. தாமதம் செய்ததால் பாதிப்பு தீவிரமாகி விட்டது. இப்போது பெரிய அளவில் ஆபரேசன் நடந்தது. எல்லோரது பிரார்த்தனையாலும், கடவுள் அருளாலும் நல்லபடியாக ஆபரேசன் முடிந்துள்ளது. இன்னும் 2 வாரங்கள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். தயவு செய்து ஆஸ்பத்திரிக்கு யாரும் வரவேண்டாம்'' என்றார்.
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் சுல்தான் பட நடிகர் ஒருவரை கட்டப்பா என்று அழைப்பதாக அவரே கூறியிருக்கிறார்.
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.

பல படங்களில் வில்லனாக மிரட்டிய லால் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லால் பற்றி நடிகர் கார்த்தி கூறும்போது, ‘லால் சார் படம் முழுக்க என்னுடன் இருப்பார். என்னுடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் கூடவே இருந்து பங்கேற்கும் கதாபாத்திரம். அவரை நான் கட்டப்பா என்று தான் அழைப்பேன். உணர்வு, சண்டை, நடனம் எல்லாவற்றிலும் சிக்ஸர் அடிக்கிறார்’ என்றார்.
மிருகங்களை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துக் குவித்தவர், சாண்டோ சின்னப்பத்தேவர். அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட "தாயில்லாக் குழந்தை'' படத்தில் நிஜமாகவே முரட்டுக்காளைகளுடன் மோதினார், விஜயகுமார்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த காளைச் சண்டையில் உயிரைப் பணயம் வைத்து காளைகளை அடக்கினார்.
இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"சிங்கம், புலி, கரடி, யானை போன்ற மிருகங்களை வைத்து மட்டுமல்ல, சாதுவான ஆட்டைக்கூட வைத்துக்கூட படம் எடுத்தவர் சின்னப்பத் தேவர். இந்தப் பின்னணியில் அமைந்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களே.
இவரது "தாயில்லாக் குழந்தை'' படத்தில் என்னை ஹீரோவாக `புக்' பண்ணும்போதே, "விஜயகுமார்! நீங்க பெரிய வீரர்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்துல 2 காளை மாடுகளோட நீங்க மோத வேண்டியிருக்கும். அதுக்கு இப்பவே உங்களை தயார்படுத்திக்குங்க, என்றார்.
நான் கிராமத்தில் வளர்ந்தவன். எனவே, தேவர் இப்படிச்சொன்னபோது எனக்குள் ஒரு துளி பயம் கூட ஏற்படவில்லை.
"தாயில்லாக் குழந்தை'' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில்தான், காளைகளை அடக்கும் காட்சியை படமாக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். 2 காளைகள் வந்தன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகளைப்போல திடகாத்திரமாக, பெரிய திமிலுடன் பார்க்கவே கம்பீரத்துடன் காணப்பட்டன.
காளையுடன் நான் மோதுகிற இடத்தைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது.
முதலில் ஒரு மாட்டுடன் மோதவேண்டும். அந்த மாடும் வந்தது. நான் நின்றிருந்த பகுதியில் விடப்பட்டது. என்னிடம் வந்த தேவர், "விஜயகுமார்! 2 இடத்தில் 2 கேமரா இருக்கு. டைரக்டர் சொன்னதும் கேமரா ஓடத்தொடங்கும். `நீயா... மாடா...'ன்னு பார்த்துக்க'' என்றார், தேவர்.
ஏற்கனவே கிராமத்து காளைகளுடன் கொஞ்சம் விளையாடிய அனுபவம் இருந்ததால், கேமரா ஓடத்தொடங்கியதும் நான் எந்தவித பதட்டமும் இல்லாமல் காளையை நெருங்கினேன்.
என்னிடம் பிடிகொடுக்காத அந்த காளை, ஒரு கட்டத்தில் நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில் தனது கொம்பால் எனது தொடையில் குத்தித் தள்ளியது. தொடையில் இருந்து ரத்தம் வரத்தொடங்க, காளையை அடக்கியே தீரவேண்டிய வேகம் எனக்குள். இப்போது இந்த வீரத்தை அதிகப்படுத்துவது போல, "விஜயகுமார்! விடாதே! காளையை அடக்கு'' என்று கத்தினார், தேவர்.
தேவரின் அந்த வார்த்தைக்கும் பலம் இருந்திருக்க வேண்டும். ரத்தம் சொட்டச்சொட்ட, காளையின் கொம்பை பிடித்த நான், அடுத்த சில நிமிட போராட்டத்தில் அந்தக் காளையை மண்டியிட வைத்தேன். அன்று மதியமே இன்னொரு மாட்டையும் அடக்கியாக வேண்டும். ஏற்கனவே ஒரு வீரக்காளையை அடக்க முடிந்த தெம்புடன் இதை அணுகியதால் மிக சுலபமாய் அந்தக் காளையையும் மடக்கிவிட்டேன்.
பொதுமக்கள் ஆரவாரம் செய்தார்கள். விசில், கரகோஷ சத்தம் காதைத் துளைத்தது.
காளைகளை அடக்கும் காட்சி முடிந்ததும் சந்தோஷ மிகுதியால் ஓடிவந்து என்னை ஆரத் தழுவிக் கொண்டு வாழ்த்து சொன்னார், தேவர். "நான் எதிர்பார்த்ததை விடவும் காட்சி நல்லா வந்திருக்கு'' என்றார்.
சில நாட்களில் வாகினி ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவர், படத்தில் நான் வீரத்துடன் காளைகளுடன் மோதியதை சொன்னார். அதோடு நில்லாமல், "எனக்குத் தெரிந்து சண்டைக் காட்சியில் `டூப்' போடாமல் செய்பவர்கள் இரண்டே இரண்டு நடிகர்கள்தான். வடநாட்டில் தர்மேந்திரா, தென்னாட்டில் விஜயகுமார்'' என்றார். தேவரின் இந்த வெளிப்படையான பாராட்டில் காளை குத்தியதில் ஏற்பட்டிருந்த வலி கூட மறந்து போயிற்று.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
"குற்றப்பத்திரிகை'' படத்தில் நடித்த நேரத்தில் பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பியிருக்கிறார், விஜயகுமார். இந்த விபத்தில்
4 நாட்கள் `கோமா' நிலையில் இருந்து கண் விழித்திருக்கிறார்.
அதுபற்றி அவர் கூறுகிறார்:-
"டைரக்டர் ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகை படத்தில் எனக்கும் முக்கிய கேரக்டர். அப்போதிருந்த அரசியல் பின்னணியில் பரபரப்பான படமாக எதிர்பார்க்கப்பட்டது அந்தப்படம். என் சம்பந்தப்பட்ட காட்சிகளை தர்மபுரியில் படமாக்கினார்கள்.
என் இளைய மகள் ஸ்ரீதேவிக்கு அப்போது 5 வயது இருக்கும். சினிமா படப்பிடிப்புக்கு நான் எப்போது புறப்பட்டாலும், "அப்பா! காரில் இரவுப் பயணம் மட்டும் செல்ல வேண்டாம்'' என்று கூறுவாள். அப்பா மீதான அதிகபட்ச பாசமாக அதை எடுத்துக் கொள்வேன்.
தர்மபுரியில் முடிந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து கோபிசெட்டிப்பாளையம் போக வேண்டியிருந்தது. மறுநாள் அங்கே படப்பிடிப்பு. இரவு படப்பிடிப்பு முடிந்து 11 மணிக்குத்தான் கார் வந்தது. எனக்கு அப்போது மகள் ஸ்ரீதேவியின் `ராத்திரி கார் பயணம் வேண்டாம்' என்ற வார்த்தைகள் காதுக்குள் வந்து போயின.
ஆனாலும் கம்பெனியின் அவசரம் கருதி காரில் புறப்பட்டு விட்டேன். கார் வேலூரில் இருந்து புறப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் போய்க் கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டி 2 மணி அளவில் நான் கொஞ்சம் கண்ணயர்ந்த நேரம் கார் எதிரில் வந்த லாரி மீது மோதி, மூன்று குட்டிக்கரணம் அடித்தது. காரில் இருந்து நான் தூக்கியெறியப்பட்டது தெரிந்தது. மரணத்தை ருசிபார்க்க நேர்ந்த அனுபவமும் அப்போது
கிடைத்தது.என் இதயத்துடிப்பு படிப்படியாக குறைவது எனக்குத் தெரிகிறது. `நோ' என்று அலறுகிறேன். மறுபடி துடிப்பு ஏறுகிறது.
மீண்டும் இறங்கத் தொடங்கும்போது `நோ' என்று அலறுவேன். இப்படி ஜீவ மரணப் போராட்டத்திலும் மகள் ஸ்ரீதேவி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போகின்றன...
அப்புறம் என்ன நடந்தது என்று தெரியாது. பெங்களூரில் உள்ள மணிபால் ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் கழித்து கண் விழித்தேன். விலா எலும்புகள் உடைந்திருந்தன என்றார்கள். தொடையின் ஒரு பக்கம் கிழிந்து தையல் போட்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் என்னைப் பார்த்தவர்கள் `மறுபிறவி' என்றார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு நான் காரில் இரவுப் பயணத்தை அது எத்தனை அவசரமானாலும் மேற்கொள்வதில்லை.
இந்த விபத்து சமயத்தில் டைரக்டர் பி.வாசுவின் வால்டர் வெற்றிவேல் படத்திலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் `ஆயிரம் பரா' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். "நான் குணமாகி வர மாதக் கணக்கில் ஆகலாம். எனவே, என் கேரக்டரில் வேறு நடிகரைப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அனுப்பியும், அவர்கள் எனக்காக காத்திருப்பதாக சொல்லி விட்டார்கள். நான் திருப்பிக் கொடுத்த அட்வான்சையும் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். நெகிழ்ந்து போனேன்.'

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படத்தின் புதிய அப்டேட்டை நடன இயக்குனர் வெளியிட்டு இருக்கிறார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். விஜய்யின் 65-வது படமான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த நிலையில் தளபதி 65 படத்தில் ஜானி மாஸ்டர் நடனப்பயிற்சிக்காக இணைந்திருக்கிறார். இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில், “என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன்.” என்ற பதிவுடன், இந்த பாடலுக்கான ரிகர்சல் ஏப்ரல் 24ம் தேதி என்றும், மே 3 முதல் 9 வரை பாடலின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து இருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்ணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
எம்.ஜி.ஆர் மகன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தோணிதாசன் மற்றும் பூஜா வைத்யநாத் பாடியுள்ள, “ஏறெடுத்து பாக்காம, என்னண்ணுதான் கேக்காம” பாடலை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். இந்த பாடலை “எனக்குப் பிடித்த பாடல்” என்று சசிகுமார் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறும்போது, ‘பொன்ராம் சார் படத்துக்காக ஒரு பாட்டு எழுதணும்ணு அந்தோணிதாசன் அண்ணா சொல்லும்போதே மனசுக்குள்ள ஒரு கொண்டாட்டம். ஏன்னா பொன்ராம் சார் படத்தின் பாட்டெல்லாம் கண்டிப்பா பெரிய ஹிட் ஆகும். வேற லெவல்ல ரீச் ஆகும். கூடவே சசிகுமார் சார்… லவ் டூயட் …. கன்ஃபார்ம் படம் பெரிய ஹிட் ஆகும், பாடலாசிரியராக என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு போகும்ணு நம்பிக்கை வந்தது.
பொன்ராம் சார், பாடல் வரிகள் பற்றி கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேசுனாங்க, “ஏன்டா நீயும் பார்க்கும் போது, சட்டை வேர்க்குது”, “வீச்சருவா போல ஓன் நெனைப்பு கீற”… இதுபோல பாடலில் வரும் விஷயங்களை நீங்க என்ன அர்த்தத்தில் எழுதி இருக்கீங்கன்னு கேட்டாங்க. என் விளக்கத்தைக் கேட்டுட்டு சில இடங்களில் மட்டும் வேற வார்த்தை போடலாம்னு சொன்னாங்க. பாடல் வரிகளுக்காக முழுசா கதையை சொல்லி, படத்தில் பாடல் வரும் இடத்தையும் சூழலையும் சொன்னாங்க. ரொம்ப அன்பான மனிதர். அழகான ஒரு பாடல் எழுத வாய்ப்பு தந்ததுக்கு ரொம்ப நன்றி சார்.

படப்பிடிப்பு தளத்தில் சசிகுமார் சாரை சந்தித்தோம். அப்பவே பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார். “தெக்குதெச காத்தே… போடி என்னை சேர்த்தே” வரிகளை பாடி சந்தோஷப்படுத்தினார். உலகம் முழுவதும் திரும்ப திரும்ப பேசப்பட்டுக் கொண்டே இருக்கும், சுப்பிரமணியபுரம் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நண்பர்களின் நண்பர் சசிகுமார் சாரின் பாராட்டு எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது.
படப்பிடிப்பில் என்னிடம் நேரில் சொன்னதை இப்போது மக்களிடம் சொல்லி என்னை மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார். உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார். நாளை (மார்ச் 30) என் பிறந்தநாள். உங்களுடைய வாழ்த்தும் பாராட்டும் இந்தப் பிறந்தநாளில் எனக்கு கிடைத்த பெரிய பரிசா நெனைக்கிறேன். மீண்டும் நன்றி சார்.
மிக முக்கியமாக இந்த வாய்ப்புக்கு முதல் காரணமான அந்தோணிதாசன் அண்ணாவுக்கு பெரிய நன்றி. நடனம் அமைத்திருக்கும் பிருந்தா மாஸ்டர், சத்யராஜ் சார், சமுத்திரக்கனி சார், கதாநாயகி மிர்ணாளினி, தயாரித்திருக்கும் ஸ்கிரீன் ஸீன் நிறுவனம், சோனி மியூசிக் நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.