என் மலர்
சினிமா செய்திகள்
ஆர்யா, விஷால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் எனிமி படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள 10 சதவீத படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார். மேலும் எனிமி படத்தின் டீசரை இரண்டு வாரத்திற்குள் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டி.சம்பத்குமார் இயக்கத்தில் அசோக், சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகி வரும் மாயத்திரை படத்தின் முன்னோட்டம்.
பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதிகம் திகில் படங்கள் தயாராகின்றன. அந்த வரிசையில் மாயத்திரை என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. இதில் அசோக் கதாநாயகனாகவும், சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜகுமாரி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தை டி.சம்பத்குமார் இயக்கி உள்ளார்.
குஷ்பு, சுஹாசினி, மீனா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சாய் தயாரித்துள்ளார். இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் சம்பத்குமார் கூறும்போது, “மாயத்திரை படத்தில் 26 நடிகர், நடிகைகள் பேயாக நடித்து இருக்கிறார்கள்.

தீங்கு செய்யாத பேயின் தியாகமும், பேரன்பும், குலதெய்வ வழிபாட்டின் சிறப்பும் படத்தில் இருக்கும். வில்லனும் பேயாக வருகிறார். ஒரு தியேட்டரும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. பழி வாங்கலும், பயமுறுத்தலும் இல்லாத பேய் படமாக தயாராகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது” என்றார்.
மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, வெங்கட் பிரபுவோடு கலந்துரையாடும் போது எடுத்த புகைப்படத்தை சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, வெங்கட் பிரபுவோடு கலந்துரையாடும் போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நான் பார்த்தவரைக்கும் மாநாடு படம் சிம்புவுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது.
இந்நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அதன்படி தனுஷை வைத்து இவர் இயக்கி உள்ள கர்ணன் படம், அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ், அடுத்ததாக விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். பா.இரஞ்சித் தயாரிக்க உள்ள இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளதாம்.
இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அவ்வாறு வெளியானால் தான் இது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது தெரியவரும்.
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஒத்த செருப்பு திரைப்படம், இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன.

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியது என்றே சொல்லலாம். ஏனெனில் இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

இவ்வாறு சினிமாவில் பல்வேறு புதுமைகளை செய்யும் பார்த்திபன், அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரும் இப்படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். இதுவரை அருமையான 3 பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரளாவில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காக தான் அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஓணம் பண்டிகையை கொண்டாட இருவரும், இதேபோல் தனி விமானத்தில் கேரளா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா, தற்போது ரஜினி - சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கர்ணன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ‘கர்ணன்’ படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே, படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்காக ‘கர்ணன்’ படத்தின் சிறப்புக் காட்சி, சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டது. படம் பார்த்து முடித்ததும், நடிகர் விஜய் சேதுபதி, மாரி செல்வராஜின் கையில் முத்தமிட்டு தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். “அற்புதமான படம். மனசார சொல்றேன். நீ நல்லா வருவ. லவ் யூ” என்று விஜய் சேதுபதி வாழ்த்தினார். இதனால் இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ந்து போனார்.
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கானையும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராவதால் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஷங்கர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
சுந்தர்.சி-யுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யுமாறு நடிகை குஷ்பு அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி-யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குஷ்பு டுவிட்டரில் கூறியதாவது: “எனது கணவர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்” என குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது கணவர் சுந்தர் சி-யும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
"மனோரஞ்சிதம்'' திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை விடவில்லை.
கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய "யாகசாலை'' என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.
"இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?'' என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.
வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.
இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.
இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-
"யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.
நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!
படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.
இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.
இந்தக் காலக்கட்டத்தில் "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.
படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.
இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்' கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.
என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்' செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.
படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.
மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய "அகிலா'' என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.
வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, "வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்'' என்று தெரிவித்தேன்.
அதன்படி அவர்கள் ஒரே `செக்' கொடுத்தார்கள். அந்தத் தொகை, "யாகசாலை'' படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.
யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, "அகிலா'' கதை "மீண்டும் பல்லவி'' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்' என்று டைட்டிலில் போட்டார்கள்.
"யாகசாலை'' 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.
படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, "அவுட்ரைட்'' முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!
வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.
"யாகசாலை'' ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் "அவுட்!'' சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.
அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!
என்னிடம் புகழ்வாய்ந்த - உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்' ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.
தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.
சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த "ஊஞ்சல் ஊர்வலம்'' என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.
பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.
சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட "கோவி.ராமாயண''த்தை என்னால் எழுத முடிந்தது.
நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.
இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.
ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.
ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.
இதற்கிடையே ரஜினி, "அபூர்வராகங்கள்'' படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.
"தென்னங்கீற்று'' படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். "குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்'' என்றார்.
ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் - நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்'படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?
சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று
சொல்வேன்:`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான்
துப்புவாள்!''இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.
மணிசேகரன் - சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.
மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது

தமிழில் காதலில் விழுந்தேன், நீர் பறவை, வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த சுனைனா, திருமணத்தை பற்றி பேசுவதை நிறுத்துங்க என்று கூறியிருக்கிறார்.
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் சுனைனாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
சமீபத்தில் டிரிப் என்னும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சுனைனா அளித்த பேட்டியில், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்கிறார் சுனைனா.

தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகளை மறுத்த அவர் இவை அனைத்தும் வந்ததிகளே என்றும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாக கூறிய சுனைனா, தனது திருமணம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு தனது திரைப்படங்கள் பேச வேண்டும்’ என்றார்.