என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். 

    அந்தவகையில், கர்ணன் படத்தை பார்த்து ரசித்த திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் ஐபிஎஸ், படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கர்ணன்... நியாயமற்ற அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுகிறான். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் சக்திவாய்ந்த படம். கர்ணன் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்” என குறிப்பிட்டுள்ளார்.
    சந்தன கடத்தல் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, ‘மாவீரன் பிள்ளை’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
    தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். 

    இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

    இந்நிலையில், சினிமாவில் நடிக்க வந்தது ஏன் என்பது பற்றி வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கூறியதாவது: ‘‘விவசாயிகள் மற்றும் மது ஒழிப்பு போராட்டங்கள் பற்றிய படம் என்பதால் நடிக்க ஒத்துக்கொண்டேன். படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டத்தின் பல இடங்களிலும், டெல்லியிலும் நடைபெற்றது. 

    மாவீரன் பிள்ளை படத்தின் போஸ்டர்

    சினிமாவில் நடிக்க எனக்கு என் கணவர் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’’ என்றார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
    ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி, சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

    நடிகர் சூரி, ரஜினியுடன் நடிப்பது இதுவே முதன்முறை, அது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “தலைவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு, வேற லெவல் எனர்ஜி. அவருடன் நடிப்பது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

    சூரி

    அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் புது கார் வாங்கி இருக்கிறார்.
    ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

    பொங்கலுக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக ‘பவானி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன்.

    விஜய் சேதுபதி, மகேந்திரன்

    சமீபத்தில் அவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். தற்போது அந்த காருடன் நடிகர் விஜய் சேதுபதியை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் மகேந்திரன். அந்த காரை ஓட்டிப் பார்த்த விஜய் சேதுபதி, அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் எடுத்த புகைப்படங்களை மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘என்னோட பவானி... விஜய் சேதுபதி அண்ணா’ எனக் குறிப்பிட்டுள்ளார். 
    தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள ‘வக்கீல் சாப்’ திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    இந்தியில் வெளியான பிங்க் படம், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ‘வக்கீல் சாப்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த பவன் கல்யாண், இப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆதலால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

    ஆனால், இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார் பவன் கல்யாண். ஏனெனில் பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நடிகர் பவன் கல்யாண், தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.

    பவன் கல்யாண்

    இதனை உறுதி செய்து, அவரது ஜனசேனா கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கட்சியை சேர்ந்த பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவன் கல்யாண் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தை, அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
    பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

    மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லீலா சாம்சன்

    இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி, ஹலிதா ஷமீமின் சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை லீலா சாம்சன், அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம், வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

    கர்ணன் படத்தில் தனுஷை அடுத்து நடிப்புக்காக அதிகமான பாராட்டுகளை பெற்றவர் என்றால் அது நட்டி நட்ராஜ் தான். போலீஸ் அதிகாரி வேடத்தில் திறம்பட நடித்திருந்தார்.

    நட்டி நட்ராஜின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், கர்ணன் படம் பார்த்தவர்கள் தனக்கு போனில் மெசேஜ் அனுப்பி திட்டுகிறார்கள் என நட்டி நட்ராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது: “என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ், கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா. முடியிலப்பா, அது வெறும் நடிப்புப்பா, ரசிகர்களுக்கு எனது நன்றி”. இவ்வாறு அவர்  பதிவிட்டுள்ளார்.
    ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை வாணி போஜன், ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.  

    அந்த வகையில், விக்ரம் பிரபு ஜோடியாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சசிகுமாருக்கு ஜோடியாக ‘பகைவனுக்கு அருள்வாய்’, விக்ரமின் ‘சியான் 60’, சூர்யா தயாரிக்கும் 2 படங்கள், ராதாமோகன் இயக்கும் படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் வாணி போஜன். 

    பரத், வாணி போஜன்

    இந்நிலையில், அவர் அடுத்ததாக பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாடல்களே இல்லாமல் இப்படம் உருவாகி வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
    பிக்பாஸ் நடிகை மயில் அருகே சென்றபோது, அது சட்டென்று பறந்து தன் காலால், நடிகையின் முகத்தில் தாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளன.
    நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி இந்தியில் பிக்பாஸ் 9-வது சீசனில் போட்டியாளராகப் பங்கு பெற்றார். இதையடுத்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார். தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். 

    டிகங்கனா சூர்யவன்ஷி

    இந்நிலையில், நடிகை டிகங்கனா சூர்யவன்ஷியை மயில் ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் மயில் அருகே சென்றபோது, அது சட்டென்று பறந்து தன் காலால், அவர் முகத்தில் தாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளன. இதை சற்றும் எதிர்பார்த்திராத நடிகை டிகங்கனா, பயத்தில் அலறிப்போனார்.


    99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
    இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்' என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. 

    இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ''இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன். 

    ஏ.ஆர்.ரகுமான்

    சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்'' என்றார்.
    சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.
    "சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

    புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.

    இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது.

    இந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.

    புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார்.

    அதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.

    புதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

    சொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.

    புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் "பி.ஏ'' தேறினார்.

    மகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.

    புதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள்  ஏற்பட்டன.

    இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் "மணிக்கொடி'' என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், "வ.ரா'' ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

    "மணிக்கொடி''யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் "காந்தி'', சங்கு சுப்பிரமணியத்தின் "சுதந்திரச் சங்கு'' ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.

    புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை "வ.ரா''வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.

    புதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச் சென்றது. "மணிக்கொடி''யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் "ஊழியன்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப்பதவியில் அவர் அதிக காலம்

    நீடிக்கவில்லை."மணிக்கொடி''யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், "தினமணி'' நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார்.

    "தினமணி'' ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார். "நாசகாரக்கும்பல்'' போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், "தினமணி'' ஆண்டு மலரில் வெளிவந்தவைதான்.

    1943-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் "தினமணி''யை விட்டு விலகி, "தினசரி''யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் "தினசரி''யில் சேர்ந்தார். பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.

    "தினமணி''யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். "இளங்கோவன்'' என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். "மணிக்கொடி'' ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார். "மணிக்கொடி'' துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.

    எனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். "காமவல்லி'' என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது.

    "அவ்வையார்'' படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை)

    1945-ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்'' என்ற படக் கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை "வசந்தவல்லி'' என்ற பெயரில் படமாக்க வேண்டும் என்பது, அவரது திட்டம்.

    இதில், கதாநாயகனாக நாகர்கோவில் மகாதேவன் நடிப்பதாக இருந்தது. மகாதேவனை, சில நண்பர்கள் புதுமைப்பித்தனிடம் அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து முடிந்தது.

    "கதாநாயகனுக்கு அட்வான்ஸ் கொடுங்கள்'' என்று ஒருவர் கூற, புதுமைப்பித்தன் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அட்வான்சாகக் கொடுத்தார்!

    அதன்பின், சில பத்திரிகைகளில் "வசந்தவல்லி'' பற்றி விளம்பரங்கள் வெளிவந்தன. படம் தயாரிக்கப்படவில்லை.

    அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி, சட்டத்துடன்

    2ஷி ஆண்டு காலம் போராடி, 1947 ஏப்ரலில் விடுதலையானார்.

    அவருடைய மகத்தான வெற்றிப்படங்களான "ஹரிதாஸ்'', "சிவகவி'', "அசோக்குமார்'', "அம்பிகாபதி'' முதலான படங்களுக்கு வசனம் எழுதியவர் இளங்கோவன். அவருடன் மனத்தாங்கல் கொண்டிருந்த பாகவதர், விடுதலைக்குப்பின் சொந்தமாகத் தயாரித்த ''ராஜமுக்தி'' படத்துக்கு வசனம் எழுத புதுமைப்பித்தனை அழைத்தார்.

    படப்பிடிப்பு முழுவதும், புனாவில் அகில இந்தியப் புகழ் பெற்ற பிரபாத் ஸ்டூடியோவில் நடந்தது. புனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி வசனம் எழுதினார், புதுமைப்பித்தன்.

    வசனம் எழுதும் பணி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

    காசநோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது. 1948 மே மாதம் முதல் வாரத்தில் மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு, அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது.

    "ராஜமுக்தி''க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்த போதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.

    மனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ்  இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30-6-1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.

    புதுமைப்பித்தன் வரலாற்றில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி:

    தமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42-வது வயதில் காலமானார். இதற்கு 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழக அரசு லாட்டரியில் அவர் மனைவி கமலாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது.

    அந்த சமயத்தில், புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. "மகள் திருமணத்துக்கு, தந்தை கொடுத்த சீதனமாக இந்த பணத்தைக் கருதுகிறேன்'' என்றார், கமலா விருதாசலம்.

    தினகரி திருமணம் சிறப்பாக நடந்தது. கணவர் பெயர் சொக்கலிங்கம். இவர் என்ஜினீயர்.

    புதுமைப்பித்தன் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

    புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
    அமெரிக்காவில் கர்ணன் படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் முதல் நாளில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

    இந்நிலையில், தற்போது தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள தனுஷ், தனது மனைவி மற்றும் மகன்களுடன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் ‘கர்ணன்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார். 

    தனுஷ்

    அமெரிக்க திரையரங்குகளில் கர்ணன் படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக் கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததாக தயாரிப்பாளர் தாணுவிடம் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
    ×