என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68.

    கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது. செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவந்தார்.

    மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    கொரோனா வைரஸ்

    இந்தநிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.
    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

    "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்ற லதா, அங்கே பள்ளி மாணவிக்கே உரிய மனநிலையில் அந்த இயற்கை சூழ்நிலையை அனுபவித்தார்.

    ஒருமுறை, இஷ்டத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆரிடம் மாட்டிக்கொண்டார்.

    அந்த அனுபவம் பற்றி லதா கூறியதாவது:-

    "ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் ரூமில் நானும், மஞ்சுளாவும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது 'ஐஸ்கிரீம்' சாப்பிடலாமா என்று கேட்டார், மஞ்சுளா. எனக்கும் ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. எனவே, "சாப்பிடலாமே" என்றேன்.

    உடனே ரூமில் இருந்த இன்டர்காமில் ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுத்தேன். நான் கேட்ட 'வெண்ணிலா' ஐஸ்கிரீம் கிடைத்தது. நானும், மஞ்சுளாவும் சேர்ந்து இஷ்டத்துக்கு ஐஸ்கிரீமை வெட்டினோம்.

    இரண்டாவது நாளும் படப்பிடிப்பு முடிந்து வந்ததும், இதே கதைதான். இப்போது ஆர்டர் கொடுத்த ஐஸ்கிரீம், அறைக்கு வந்து சேர்ந்ததும், ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினோம்.

    அப்போது பார்த்து கதவு 'தட் தட்' என தட்டப்பட்டது. திறந்து யாரென்று பார்த்தால், வெளியே எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார்!

    எனக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆரை பார்த்ததும் பயந்துபோன மஞ்சுளா, அந்த பதட்டத்திலும் ஐஸ்கிரீமை மறைத்து வைத்து விட்டார்.

    உள்ளே வந்த எம்.ஜி.ஆர், "ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறதே" என்று சொல்லி எங்கள் இருவர் முகத்தையும் பார்த்தார். நாங்கள் எதுவுமே நடக்காததுபோல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருந்தோம்.

    நாங்கள் ஆர்டர் கொடுத்து, ஐஸ்கிரீம் வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டுதான் அவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

    அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு உட்கார்ந்தார், எம்.ஜி.ஆர். என்னை அருகில் அழைத்தார். "என்ன லூசு! நீங்க ரூம்ல இருந்து ஏதாவது வேணும்னு ஆர்டர் கொடுத்தால், அதுக்கான பில் எங்ககிட்ட தானே வரும். எனக்கும் ஐஸ்கிரீம் அதுவும் வெண்ணிலா ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். சரி சரி! ஒளிச்சு வெச்சிருக்கிறதை எடுங்க! சேர்ந்து சாப்பிடலாம்" என்றபோது எங்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    இப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் எங்கள் குழந்தை மனதை தெரிந்து கொண்டவர், அவரும் குழந்தை மாதிரி எங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் 'ஜில்'லென்ற அனுபவமாக இருக்கிறது."

    இவ்வாறு லதா கூறினார்.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாட்டில் முதலில் எடுத்தது 'சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' பாட்டுதான். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர், நாகேஷ், வெளிநாட்டு குழந்தைகளுடன் லதாவும் ஆடிப்பாடி நடித்தார்.

    இந்தப் பாடல் காட்சியின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "நடிகர் நாகேஷ் திறமையான நடிகர். ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பது தெரியும். ஆனால், நகைச்சுவை என்பது எப்போதும் அவரிடம் குடிகொண்டிருக்கிறது என்பதை அவருடன் பங்குகொண்ட அந்த படப்பிடிப்பின்போதுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன். திடீர் திடீரென அவர் அடிக்கிற கமெண்டுகளுக்கு எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

    எம்.ஜி.ஆர் - நான் - நாகேஷ் இருக்கிற நேரங்களில் இப்படி நாகேஷ் அடிக்கிற ஜோக்குகளுக்கு நான் சத்தம் போட்டு சிரித்து விடுவேன். இரண்டொரு முறை இதை கண்டு கொள்ளாமல் விட்ட எம்.ஜி.ஆர், அடுத்த முறை நான் சிரித்தபோது, "என்ன நீ! வயசுப்பொண்ணு இப்படியா சத்தமா 'கெக்கேபிக்கே'ன்னு சிரிக்கிறது?" என்று கேட்டார். கேள்வியில் கொஞ்சம் கோபம் இருந்தது. அப்புறம் நான் ஏன் வாயை திறக்கப்போகிறேன்?

    "உலகம் சுற்றும் வாலிபன்" படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் அந்தப்படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றி பெற்றதை அறிந்தேன்.

    ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் "வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். எனவே தயாராக இரு" என்றார்.

    வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் வெற்றிக்காக மறுபடியும் வெளிநாடு போகும் வாய்ப்பு என்பது எனக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்தது. பாரீஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, ரஷியா என இந்த வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர். எத்தனை அன்பு கொண்டவர் என்பதை இந்தப் பயணத்தில் கண்கூடாக உணர முடிந்தது.

    இந்தப் பயணத்தில் நான் பட்ட ஒரே சிரமம், சாப்பாட்டு கஷ்டம்தான். அதுவும் ரஷியாவில் சாப்பாடு காரமோ காரம். இங்குள்ள 'ஆந்திர உணவு'தான் நமக்கு காரமாக தெரியும். ஆனால் ரஷிய உணவை சாப்பிட்டுப் பார்த்தவர்கள் ஆந்திர உணவை 'காரம்' என்று சொல்லவேமாட்டார்கள். அந்த அளவுக்கு காரமானது ரஷிய உணவு.

    இந்த சாப்பாட்டு விஷயத்தில் 2 நாள் சமாளித்துப் பார்த்தேன். பிறகு முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் சண்டைக்கே போய்விட்டேன். "போதும்! இனியும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. என்னை ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க" என்று அழாத குறையாக முறையிட்டேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நீ வெளியே சொல்கிறாய். என்னால் இந்த கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை. எனக்காக கொஞ்சம் பொறுமையாக இரு" என்று என்னை ஆறுதல்படுத்தினார்.

    ஒரு வழியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த இந்திய உணவகத்துக்கு அழைத்துப்போன எம்.ஜி.ஆர், "இப்போது உன் சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது. உன் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடு" என்றார். அவரும் இந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார்.

    சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் 'தாய்மை'க் குணம் கொண்ட எம்.ஜி.ஆரை பார்த்தேன். அங்கிருந்த பனிமலையை சுற்றிப் பார்க்க எம்.ஜி.ஆருடன் செருப்பு அணிந்தபடி கிளம்பினேன். போன பிறகுதான் 'ஷூ' இல்லாமல் நடக்க முடியாது என்று தெரிந்தது. பனிமலை பயணத்தில் குளிர் தாக்கி நடுங்கவும் ஆரம்பித்து விட்டேன். உடனே அவர் போட்டிருந்த கோட்டை கழற்றி என்னை போட்டுக்கொள்ளச் சொன்னார்.

    இப்படி பாதி தூரம் கடந்த நிலையில், 'இனி என்னால் நடக்க முடியாது' என்றேன். என் நிலையை புரிந்து கொண்டவர், என்னை அலாக்காக தூக்கியபடி நடந்து, பாதுகாப்பான இடம் வந்ததும் இறக்கி விட்டார். அவர் மட்டும் அன்றைக்கு இப்படி செய்திராவிட்டால், அந்த குளிரிலேயே விரைத்துப் போயிருப்பேன்."

    இவ்வாறு லதா கூறினார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு, பத்துதல படத்தை தொடந்து அடுத்ததாக பிரபல தயாரிப்பாளருடன் இணைய இருக்கிறார்.
    நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ’பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

    இந்த நிலையில் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன்,

    பார்த்தா தெரியாது நட்பு
    பழகினால் தான் தெரியும் நட்பு
    இவர் மேல சில பேருக்கு வெறுப்பு
    அதற்கு அவர் இல்லை பொறுப்பு

    சிம்பு - ரவீந்திரன்

    என்று பதிவு செய்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் அவ்வப்போது பொதுவான விஷயங்களுக்காக சந்திப்போம் என்றும் ஆனால் எங்களைப் பற்றி மிக அதிக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார். மிக விரைவில் சிம்புவின் திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
    ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடிகர் அஜித் புதிய முயற்சி ஒன்றை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். 

    வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், வலிமை படத்தில் அஜித் புதிய முயற்சியை கையாண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அஜித்

    வலிமை படத்தில் முதன்முறையாக அஜித் ஒரு பஸ்ஸை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. 'வலிமை' படத்தில் இடம்பெறும் ஒரு சேஸிங் காட்சியில் அஜித் ஒரு பஸ்ஸை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது 'வலிமை' படத்தின் மாஸ் காட்சிகளில் ஒன்றாக இருக்கும் எனவும், இந்தக் காட்சியை பார்க்கும் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
    விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஐபிஎல் அணியினர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘வாத்தி கம்மிங்’. அனிருத் இசை அமைத்திருந்த இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினும், இந்த பாடலுக்கு தீவிர ரசிகர் தான். 

    சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மைதானத்திலேயே வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தினார் அஸ்வின். அதன்பின் இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் இணைந்து அஸ்வின் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார். 

    ஐதராபாத் அணியினர்

    இந்நிலையில், தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய 3 பேரும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    தமிழில் மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், காமெடி நடிகரை கிண்டல் செய்து இருக்கிறார்.
    நடிகர் சதீஷ், படங்களில் நடிப்பதைப் போலவே நிஜ வாழ்விலும் கலகலப்பாக இருப்பவர். அவரது சமூகவலைதள கமெண்டுகளை வைத்தே அதைத் தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய போட்டோஷூட் படங்களை வெளியிட்டு “இப்போ நான் என்ன நினைக்கிறேன்?” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு “சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே” என்று சதீஷ் கமெண்ட் அடித்தார்.

    பிரியா பவானி சங்கர் - சதீஷ்

    அதற்கு பதிலளித்த பிரியா, சதீஷ் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அப்டி சொல்லாதீங்க கோபால்” என்று நக்கலாக பதிலளித்துள்ளார். பிரியா பவானி ஷங்கரின் இந்த பதில், சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் அடுத்தடுத்து 2 அப்டேட்கள் வெளியாக இருக்கிறது.
    2017 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான 'குற்றம் 23' திரைப்படத்தை இயக்கியவர் அறிவழகன். இவர் மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.

    அருண் விஜய்யின் 31 ஆவது படமான இதற்கு 'AV31' என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் என் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

    அருண் விஜய்

    இந்தப் படத்தின் டைட்டில் ஏப்ரல் 14 ஆம் தேதியும் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 15 ஆம் தேதியும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

     ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர். AV 31 படத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமையை 11:11 புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
    'மண்டேலா' படம் பார்த்துவிட்டு, வீடியோ கால் மூலமாக நடிகர் யோகி பாபுவைப் ஐபிஎல் வீரர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
    மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மண்டேலா'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினரை வாழ்த்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்கள்.

    தற்போது 'மண்டேலா' படத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியுள்ளார். வீடியோ கால் மூலமாக யோகி பாபுவிடம் பேசி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் வீரர்

    "சில நாட்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸில் 'மண்டேலா' திரைப்படம் பார்த்தேன். நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு. என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை. அவர் நடராஜனின் நண்பர் என்பது தெரிந்தது. வீடியோ கால் மூலம் என்னை யோகி பாபுவிடம் பேசவைத்தார்".

    இவ்வாறு ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருடம் ஆகிவிட்டது என நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் கடந்த 1991ஆம் ஆண்டு நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சின்னதம்பி. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்த இந்தப் படத்தில் மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

    இந்தப் படத்தின் மூலம் பி.வாசுவின் மகன் சக்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    குஷ்பு

    அதில் 'சின்னத்தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நேரம் வேகமாக பறக்கிறது . பி வாசு சாருக்கு எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன். இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் கே பாலு (சமீபத்தில் அவரை இழந்தோம் ) மற்றும் பிரபு சார் அனைவருக்கும் நன்றியும் அன்பும்' என பதிவிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினி அரசியலுக்கு வராததில் எனக்கு மிகவும் வருத்தம் என்று பிரபல இயக்குனர் கூறியிருக்கிறார்.
    யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வரும் 14ந்தேதி வெளியாக இருக்கும் படம் மதில். கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மைம் கோபி, 'பிக்பாஸ்' மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படம் பற்றி அளித்த பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது, ‘மனசாட்சி சொல் படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைகுரல்தான் ‘மதில்’. கொரோனா காலகட்டத்தில் நடித்து முடித்தேன். கதையை கேட்டதும் தியேட்டருக்கே பண்ணலாமே என்றுகூட கேட்டேன். கதை முதல் உருவாக்கம் வரை அனைத்துமே அப்படி பிரம்மாண்டமாக தான் இருந்தது. ஓடிடி வளர்கிறது. அதை தடுக்க முடியாது. ஆனால் இது இன்னொரு தளம் தானே தவிர தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ரசிகர்கள் தாங்கள் விரும்பும் படங்களை தியேட்டர்களில் பார்க்கத்தான் விரும்புவார்கள். 

    கே.எஸ்.ரவிகுமார்

    என்னிடம் பெரிய ஹீரோக்களை வைத்து அதிக படங்கள் இயக்கி இருக்கிறீர்கள். அவர்ளுக்கான பார்முலா என்ன என்று கேட்கிறார்கள். அப்படி எதுவுமே தனியாக கிடையாது. இனி ஹீரோக்களே ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வார்கள். சூர்யா அதை தொடங்கி வைத்துள்ளார். டிஜிட்டல் வந்த பிறகு சினிமாவில் செலவு குறைந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி இல்லை. அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. சரியான திட்டமிடல் தான் செலவை குறைக்கும். 

    ரஜினி, கமலை மீண்டும் இயக்குவீர்களா? என்று கேட்டால் நான் தயாராக தான் இருக்கிறேன். கதைகள் நிறைய இருக்கின்றன. சில கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். அதற்கான நேரம் வரவேண்டும். சத்யராஜ் சாரை இயக்க விரும்பினேன். அது நடக்கவில்லை. ஆனால் அவருடன் நடித்தேன். பிரபுதேவாவுடன் இணைய திட்டமிட்டேன். நடக்கவில்லை. கமல், உதயநிதி, குஷ்பு என நண்பர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். அனைவருமே வெற்றி பெற விரும்புகிறேன். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தபோது எனக்கே வருத்தமாக தான் இருந்தது. அறிவித்த சில நாட்களுக்கு பின் பேசினேன். ஆனால் எல்லாவற்றையும்விட அவரது ஆரோக்கியம் தான் முக்கியம்’. இவ்வாறு அவர் கூறினார்.
    இளையராஜா இசையமைத்து இருக்கும் புதிய படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார்.
    இசைஞானி இளையராஜா இசையமைத்த "மதுரை மணிக்குறவன்" படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார். காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ளார். தூத்துக்குடி, மதுர சம்பவம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார். 

    மனசில பெரியவன் தான் மதுரக்காரன்... என்ற பாடலை இளையராஜாவே பாடியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்துள்ளார். மதுரை மணிக்குறவன் படத்தின் பின்னணி இசை முதல் படமாக இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. 

    இளையராஜா

    மதுரையில் நடந்த உண்மை சம்பவமும் பல கொலைக் குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உருவாக்கப்பட்ட கதையில் ஜி.காளையப்பன், சுமன், ராதாரவி பருத்தி வீரன் சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், கௌசல்யா, பருத்தி வீரன் சுஜாதா, கஞ்சா கருப்பு, அஸ்மிதா, ராஜ்கபூர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
    எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் அலேகா படத்தின் முன்னோட்டம்.
    ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கும் படம் அலேகா. ஆரி அர்ஜுனா நாயகனாக  அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

    ஆரி, ஐஸ்வர்யா தத்தா

    சத்யா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விவேகா, யுகபாரதி ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதி உள்ளனர். ஆர்.விஜயகுமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 
    ×