என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், இயக்குனர் ஒருவரின் வீடு தேடி சென்று அவரை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரம், இயக்குனர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு சென்று அவரை பாராட்டி இருக்கிறார்.

    விக்ரம் - மாரி செல்வராஜ்

    இயக்குனர் மாரி செல்வராஜ், கர்ணன் படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் மூலம் தயாரிக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் சங்கர், அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகரை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார்.
    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் சங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    ரன்வீர் சிங் - சங்கர்

    இந்நிலையில், இயக்குனர் சங்கர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ படத்தின் தழுவலாக உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு 2022 ஆண்டு தொடங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    பிரபல மலையாள நடிகரும், தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்தவருமான பகத் பாசில் படங்களுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கொரோனா பரவல் திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கில் பல மாதங்கள் மூடப்பட்ட தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து உள்ளன. இதனால் திரையரங்குகளில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வந்துள்ளன. மலையாளத்தில் பகத் பாசில் நடித்துள்ள சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளன. 

    பகத் பாசில்

    தியேட்டர்களை திறந்த பிறகும் பகத் பாசில் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அவரது படங்களை இனிமேல் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பகத் பாசில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் தடை குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பகத் பாசில் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.
    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

    இதுபற்றி லதா கூறியதாவது:-

    "15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். "மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா?'' என்று கேட்டார்.

    போனேன். என்னைப் பார்த்ததும், "உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா?'' என்று கேட்டார்.

    அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். "லதா! உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா?'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.

    நான் எதுவும் பேசாமல், அவரிடம் இருந்த காண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

    என்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும், பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது?

    ஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட "டாக்டர் சிவா'', "அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.

    ஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. "என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு தேதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.

    சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் "சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன்.

    செட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. "அண்ணனுடன் (எம்.ஜி.ஆர்) நடிக்கிறீங்க. என் கூட இது முதல் படம். நடிப்பில் எந்த மாதிரி சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க'' என்று சொன்னவர், "உங்க அப்பா என்னோட நல்ல நண்பர் தெரியுமா?'' என்றும் சகஜமாக பேசி, பதட்டமில்லாமல் நடிக்க வைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன்.

    இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

    மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்.

    எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.

    நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார். "கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும்'' என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன்.

    நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, "நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும்'' என்று பாராட்டினார்.

    இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜ×, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள்.

    "சிரித்து வாழவேண்டும்'' என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார். (மும்மொழிப் படத்தில் கதாநாயகி)

    "சிவகாமியின் செல்வன்'' படத்தில் சிவாஜியும், லதாவும். இவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.

    "வட்டத்துக்குள் சதுரம்'' என்ற படத்தில் சுமித்ரா, லதா
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் படத்தை பார்த்து பாராட்டியதோடு, தவறையும் சுட்டிகாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

    கர்ணன்

    1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன் - சூரியஒளிப் பெண் என்ற படத்தின் முன்னோட்டம்.
    888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன் - சூரியஒளிப் பெண்' திரைப்படம் பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவங்கியது. 

    2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனையான சாந்தி செளந்தரராஜன் வாழ்வை எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. குறிப்பிடத்தக்க வகையில், சாந்தி செளந்தரராஜனும் மதுரை மாவட்டத்தின் ADSP-ஆன S.வனிதா ஆகியோர் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டனர்.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.
    பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

    மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி, லீலா சாம்சன் என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பூவையார்

    இந்நிலையில், இப்படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
    சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்துள்ளார் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 

    இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. பாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது. 

    வெற்றி மாறன் - சூர்யா - ஜிவி பிரகாஷ்

    இந்நிலையில் வாடிவாசல் படத்துக்கான இசைப்பணிகள் தொடங்கியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதிதாக கிடைத்திருக்கும் இந்த அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

    இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு 1947 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இணை தயாரிப்பு ஓம் பிரகாஷ் பட். பொன் குமரன் இந்தப் படத்தை இயக்குகிறார். 

    ஏ.ஆர்.முருகதாஸ் - ஓம் பிரகாஷ் பட்

    தற்போது படத்தின் முன்னணி பணிகள் தொடங்கியுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
    தமிழில் ரஜினி, கமல் படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸின் தனித்திறமையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
    தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.

    இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிவேதா தாமஸ், சூர்யா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இடம் பெற்ற ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்...’ என்ற பாடலை பாடி தானே இசையமைத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

    நிவேதா தாமஸ்

    இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நிவேதா தாமஸை புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள். மேலும் பல பாடல்களை பாடி வெளியிடுமாறும் கேட்டு வருகின்றனர்.


    தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் மாதவன், கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.
    கடந்த மாதம் 25ம் தேதி மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் 14 நாட்கள் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். தற்போதைய சோதனையில் மாதவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள மாதவன், ''எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. 

    மாதவன்

    அம்மா உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளது. வைரஸ் தொற்று நிலையை முற்றிலுமாக கடந்து வந்துவிட்டோம். கடவுள் அருளால் அனைவரும் நலமுடன் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம்'' என்று தெரிவித்திருக்கிறார்.
    நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் திருமணம் செய்து கொள்ளும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
    ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.

    அதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டாவின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா

    இதற்கான அழைப்பிதழை நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


    ×