என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தியாகராஜன், மோகன சுந்தரி செந்தில்வேல் வழங்கும் புதிய படமான வென்றிடபழகு டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாஸ் வழங்கும் தியாகராஜன், மோகன சுந்தரி செந்தில்வேல் தயாரிப்பில் தொடங்க இருக்கும், புதிய தமிழ் திரைபடத்தின் தலைப்பை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.சுரேஷ் காமாட்சி அவர்களால் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை தனபால் கணேஷ் இயக்க உள்ளார். 

    வென்றிடபழகு என்ற இத்திரைப்படத்தின் தலைப்பு ரசிகர்களிடமும், மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் தலைப்பை போலவே படமும் ஒரு நல்ல சமூக கருத்து கொண்ட படமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

    விவேக்

    இன்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், ‘பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்” எனத் தெரிவித்தார்.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 65’ படப்பிடிப்பு ஜார்ஜாவில் நடந்து வரும் நிலையில், அங்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்போது ‘தளபதி 65’ திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே இப்படத்தில் நடிக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பாக ஜார்ஜாவில் தொடங்கியது. விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்துக் கொண்டனர். இந்நிலையில், ஜார்ஜியாவில் தற்போது குளிரான தட்பவெப்பம் மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என்றும் தினமும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    விஜய் - நெல்சன்

    இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஜார்ஜியாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டுத்தான் படக்குழுவினர் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழில் அழகிய தீயே, பாச கிளிகள், மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்த நவ்யா நாயர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க இருக்கிறார்.
    தமிழில் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாச கிளிகள், மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். இவர் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 2010-ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவ்யா நாயர் நடித்து கடைசியாக 2014-ல் திரிஷ்யா என்ற கன்னட படம் வெளியானது. 

    நவ்யா நாயர்

    தற்போது நவ்யா நாயர் மீண்டும் நடிக்க உள்ளார். பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகும் மலையாள படமான திரிஷ்யம் 2-ம் பாகத்தின் ரீமேக்கில் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடிக்கிறார். திரிஷ்யம் 2 மலையாளப் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
    தமிழில் ரஜினிகாந்தின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

    தீபிகா படுகோனே கடந்த 2019-ம் ஆண்டு எம்.ஏ.எம்.ஐ. மும்பை திரைப்பட விழா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்பு அமீர்கானின் மனைவி கிரண் ராவ் இந்த பதவியில் இருந்தார். இந்த நிலையில் மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை தீபிகா படுகோனே திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

    தீபிகா படுகோனே

    இதுகுறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எம்.ஏ.எம்.ஐ. மும்பை திரைப்பட விழா தலைவராக இருந்து சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள சாதனையாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியானது. ஆனால் தற்போது எனது இதர பணிகள் காரணமாக திரைப்பட விழா தலைவர் பதவிக்கு அர்ப்பணிப்பை கொடுக்க இயலவில்லை. எனவே இந்த பதவியில் இருந்து விலகுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் காஜல் அகர்வால், அடுத்ததாக பெரிய கோஸ்டியுடன் களமிறங்க இருக்கிறார்.
    பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் பேயாக நடித்து உள்ளனர். தற்போது காஜல் அகர்வாலும் புதிய படத்தில் பேயாக நடிக்கிறார். 

    இந்த படத்துக்கு கோஷ்டி என்று பெயர் வைத்துள்ளனர். கல்யாண் இயக்குகிறார். இவர் பிரபுதேவா நடித்த குலேபகாவலி, ஜோதிகா நடித்த ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கியவர். காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். 

    காஜல் அகர்வால்

    இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, சத்யன் உள்பட 30 நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். காஜல் அகர்வால் பேயாக மட்டுமன்றி போலீஸ் அதிகாரியாகவும் சினிமா நடிகையாகவும் வருகிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு பேய் தொந்தரவு கொடுப்பதால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது கதை. பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.
    கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஷாருக்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், ரன்பீர் கபூர். கோவிந்தா, கார்த்திக் ஆர்யன், செந்தில், டைரக்டர் சுந்தர்.சி. நடிகைகள் நக்மா, நிவேதா தாமஸ், கவுரி கிஷான், ஐஸ்வர்யா லட்சுமி, பூமி பெட்னெகர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளனர். சிலர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 

    இந்த நிலையில் ஷாருக்கான் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. பதான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு துபாயில் நடந்தது. தற்போது மும்பையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். பதான் படக்குழுவினருக்கு முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ததில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    ஷாருக்கான்

    இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ஷாருக்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் அபிரகாம் ஆகியோரும் நடிக்கின்றனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன், தன்னுடைய நண்பர் மகத்தின் காதலுக்கு துணை நின்றிருக்கிறார்.
    ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

    சிம்பு வெளியிட்ட காதல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இந்நிலையில், மகத் நடிப்பில் உருவாகி வரும் ‘காதல் ConditionsApply’ என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார். லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் தயாரிக்கும் இந்த படத்தை அரவிந்த் இயக்குகிறார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார்.
    விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ’மாஸ்டர்’. இப்படத்தை சேவியர் பிரிட்டோ தனது எஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். இவர் அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார்.

    இந்த படத்தை அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ படங்களை இயக்கிய விஷ்ணு வரதன் இயக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

    மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.


    தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அரவிந்த் சாமி, ஆர்யாவின் படத்தில் நடித்து இருக்கிறார்.
    தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.

    தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’, ‘தலைவி’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    ரெண்டகம் பட போஸ்டர்

    இப்படங்களை நடிகர் அரவிந்த் சாமி தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வந்தார். தற்போது இந்த படத்திற்கு தமிழில் ‘ரெண்டகம்’ என்றும் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
    படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார்.
    இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்பையும் பெற்றது.

    தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித்  தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார். 

    சமுத்திரக்கனி இந்த படத்தில் காவல்துறையில் பணிபுறியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிகார மையத்தில் பணிபுரியும்  ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார். ஹரிகிருஷ்ணன், இனியா, இயக்குனர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். யுகபாரதி, முத்துவேல் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.ரஞ்சித், ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்.
    அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார்.

    இவர் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன.

    ரைட்டர்

    இந்நிலையில் இவர் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ‘ரைட்டர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். மேலும் எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் என்றும் சமூக வலைத்தளத்தில் பா.ரஞ்சித் பதிவு செய்துள்ளார்.
    ×