என் மலர்
சினிமா செய்திகள்
டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.
டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.
டைரக்டர் ஸ்ரீதரின் "உரிமைக்குரல்'' படத்தில் எம்.ஜி.ஆரும், லதாவும் நடித்தார்கள். ஸ்ரீதர் மீண்டும் தனது "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தில் நடிக்க லதாவை அழைத்தார். ஒரு இளம் பெண்ணின் மன உணர்வுகளை படம் பிடித்த அந்த கதைக்கு `அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்று கவித்துவமான பெயரை சூட்டினார்.
இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படமானது.
இந்த மும்மொழிப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-
"உரிமைக்குரல்'' படத்தில் நடித்தபோதே ஸ்ரீதரின் அற்புதமான இயக்கும் திறமையை என்னால் உணர முடிந்தது. மறுபடியும் இவரது படத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளூர இருந்தது. நடிகர் சிவகுமாருடன் "கண்ணாமூச்சி'' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்ரீதரிடம் இருந்து அழைப்பு.
"அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' என்று ஒரு படம் எடுக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் தயார் ஆகிறது. மூன்று மொழிகளுக்கும் நீங்கள்தான் கதாநாயகி'' என்றார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.
தமிழில் விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் என்னுடன் நடித்தார்கள். தெலுங்கில் சரத்பாபு, முரளி மோகன். கன்னடத்தில் ஸ்ரீநாத் நடித்தார். மூன்று மொழி கதாநாயகர்களுடனும் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
எனக்கு தெலுங்கு சரளமாக பேச வரும். கன்னட வசனங்களை மட்டும் தமிழில் எழுதி வைத்து பேசினேன்.
தமிழில் வெள்ளி விழா கொண்டாடிய இந்தப்படம், மற்ற 2 மொழிகளிலும் 100 நாட்கள் ஓடியது. இந்தப் படத்துக்கு பிறகு சிறிது இடைவெளிவிட்டு, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடித்த "மீனவ நண்பன்'' படத்திலும் நடித்தேன். உணர்வுபூர்வமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நின்றவர் டைரக்டர் ஸ்ரீதர்.''
இவ்வாறு லதா கூறினார்.
இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற "சஞ்சீர்'' படத்தை, தமிழிலும், தெலுங்கிலும் எடுத்தார்கள். தமிழில் எம்.ஜி.ஆர் - லதா நடிக்க "சிரித்து வாழவேண்டும்'' என்ற பெயரில் தயாரானது. தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவ் - லதா நடித்தனர்.
இரண்டு படங்களும் எஸ்.எஸ்.பாலன் டைரக்ஷனில் தயாராயின.
இந்தப் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-
"இரண்டு மொழிகளிலும் நான்தான் கதாநாயகி. இரண்டு படத்தின் சீன்களுமே அடுத்தடுத்து எடுக்கப்படும். தமிழ்ப்படம் என்றால், "தமிழ் ïனிட்டெல்லாம் வாங்க'' என்று அழைப்பார்கள். தெலுங்கு படப்பிடிப்பு என்றால், தெலுங்கு ïனிட்டை தயாராக இருக்கச் சொல்லி அறிவிப்பார்கள்.''
இரண்டிலும் நான் இருப்பேன்.
இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சி. பள்ளிக் குழந்தைகள் 20 பேரை வில்லன் கூட்டம் கொன்றுவிடும். கொலையாளி யார் என்பது எனக்கு மட்டும் தெரியும்.
ரோட்டில் நின்றபடி சாணை பிடிக்கிற கேரக்டரில் நான் நடித்தேன். கொலையாளி யாரென்று தெரிந்த நிலையிலும், பயம் காரணமாக வெளியே சொல்லாமல் மவுனமாகிவிடுவேன்.
உண்மை எனக்குத் தெரிந்தும் சொல்லாமல் இருக்கிறேன் என்பது, ஹீரோவுக்கு தெரிந்து விடும். அதன் பிறகு என்னை சந்திக்கிற ஹீரோ (எம்.ஜி.ஆர்) நேராக குழந்தைகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மார்ச்சுவரிக்கு இழுத்துப் போவார். உயிரிழந்த அந்த குழந்தைகளை காட்டி, "நல்லாப்பாரு! சாக வேண்டிய வயசா இவங்களுக்கு? இவங்கள்ல எத்தனை பேர் காமராஜர், அண்ணாவா வந்திருப்பாங்களோ? இந்தப் பிஞ்சுகளை கருக்கின பாவி பற்றி தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன்னைவிட சுயநலவாதி யாருமில்லை'' என்கிற மாதிரி உணர்ச்சி பொங்க
பேசுவார்.இந்த வசனத்தைப் பேசுவதற்கு முன் என்னை மார்ச்சுவரி அறை வரை கையை பிடித்து இழுத்துச் செல்லும் எம்.ஜி.ஆர்., உள்ளே என்னைப் பிடித்திருக்கும் கையை உதறிவிட்டு இப்படி பேசுவார். நான் அவர் சொல்வதை கேட்டு மனம் மாறுவது போல் காட்சி.
மறுநாள் இதையே தெலுங்கில் எடுத்தார்கள். காட்சி படமாக்கப்பட்டபோது, கதாநாயகன் என்.டி.ராமராவ் வேகவேகமாக என் கையை பற்றிக்கொண்டு மார்ச்சுவரிக்கு இழுத்துப்போனார். அப்போதே அவர் அந்த கேரக்டருக்குள் `இன்வால்வ்' ஆகிவிட்டது தெரிந்தது.
நேராக மார்ச்சுவரி அறையை அடைந்தவர், பிடித்துக் கொண்டிருந்த என் கையை உதறிவிட்டு குழந்தைகளைப் பார்த்து வசனம் பேசவேண்டும். ஆனால், என் கையை உதறுவதாக நினைத்துக் கொண்டு, வேகமாக தள்ளிவிட்டார். நான் கீழே விழுந்து விட்டேன்.
ஆனால், உணர்ச்சிமயமாக நடிப்பில் மூழ்கிவிட்ட ராமராவ் அதை கவனிக்கவில்லை. உயிரற்ற குழந்தைகளைப் பார்த்து ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே போனார். வசனத்தை அவர் பேசி நிறுத்திய பிறகுதான், என்னை அவர் உதறிய வேகத்தில் நான் விழுந்ததை புரிந்து அதிர்ந்து போனார். என்னிடம் வருத்தம் தெரிவித்தார். பெரிய நடிகராக இருந்தும் அவர் வருத்தம் தெரிவித்தது என்னை நெகிழச் செய்தது. "அதெல்லாம் ஒன்றுமில்லை'' என்று கூறி அவரது வருத்தத்தை சரி செய்தேன்.
தெலுங்குப் படப்பிடிப்புக்கு போனால் என்னைப் பார்த்த மாத்திரத்தில், "லதா காரு! பிரதர் நல்லாயிருக்காரா?'' என்று கேட்பார். அவர் `பிரதர்' என்று சொல்வது எம்.ஜி.ஆரை. இருவரிடமும் அப்படியொரு சகோதர பாசம் இருந்தது.
தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் நான் நடித்த "அந்தால ராமுடு'' நன்றாக ஓடியது. "உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெற்று நடித்த படம் இது.
அதுமாதிரி `காந்தி புட்டின தேசம்' படத்தில் கிருஷ்ணம ராஜ×வுடன் சேர்ந்து நடித்தேன். இப்படத்தில் நடித்ததற்காக, ஆந்திர அரசின் விருது எனக்குக் கிடைத்தது.''

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான அஸ்வின், ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதேபோல் பவித்ராவும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். புகழ் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஸ்வின் உடன் புகழும் இணைந்து நடிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியதாவது: “இது முற்றிலும் காதலை மையமாக கொண்ட காமெடி படம். கதைக்கு அஸ்வின் பொருத்தமாக இருந்ததால் தயாரிப்பாளர் அவரை பரிந்துரைத்தார். இப்படத்திற்கு பின் புகழ், காமெடியில் தனக்கான இடத்தை பிடிப்பார். தற்போது நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. மே மாத இறுதியில் படப்பிடிப்பை துவக்க உள்ளோம்” என்றார்.
முதன்முறையாக சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ள அஸ்வின், எல்லாப் புகழும் இறைவனுக்கே என குறிப்பிட்டு ஒரு வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ், தமிழ் மற்றும் மலையாளத்தில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’ போன்ற ஆந்தாலஜி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார்.

இப்படத்திற்கு மலையாளத்தில் ‘ரஜினி’ என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தலைப்பை வெளியிடவில்லை. இப்படத்தில் காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளதால் படத்திற்கு ரஜினி என தலைப்பு வைத்துள்ளார்களாம். தமிழில் ஏற்கனவே ரஜினி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவதால், இப்படத்திற்கு ‘ரஜினி ரசிகன்’ என தலைப்பு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக, தனுஷ் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமசும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ‘கள’ என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில், கலந்துகொண்ட டொவினோ தாமஸ், சண்டைக்காட்சியில் நடிக்கும்போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு ஆபரேஷன் செய்து, காயம் குணமாகி தற்போது படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.
தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன், போலீஸ் அவசர உதவி எண் ஆன 100 என்ற நம்பரைக் குறிப்பிட்டிருந்தார். நடிகர் சுருதி ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

அதன்படி, தமிழ்படம் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.
அந்நியன் ரீமேக் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு விளக்கமளித்து இயக்குனர் ஷங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்நியன் படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதையடுத்து, ஷங்கர் தன்னிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்வதாக அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.
படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் படத்துக்கு அவர் வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும், அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.
திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது, ரீமேக் செய்யவும் முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையின்றி, உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பின்னராவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இனி இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களை பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை ‘பானா காத்தாடி’ புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் 30-ந் தேதி ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராதா, தமிழில் சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆனார்.
பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். சென்னையில் வசித்து வரும் நடிகை ராதா, கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே வசந்த ராஜா, அடிக்கடி ராதா மீது சந்தேகப்பட்டதாகவும், அவருடன் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த நடிகை ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்திய வசந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் நந்தினி இதுபற்றி விசாரணை நடத்தினார். இதில் சப்- இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி 2 குழந்தைகளுடன் ஆர்.ஏ.புரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் வசந்தராஜா திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் ராதாவை 2-வதாக ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் வசந்தராஜா.
நடிகை ராதா ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவர் மீதும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே, நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கர்ணன் படத்தை பார்த்து பாராட்டியதோடு, அதில் உள்ள தவறையும் சுட்டிக்காட்டி இருந்தார். 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், அச்சம்பவம் 1997ல் திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என படக்குழு உறுதியளித்திருந்தது.

அதன்படி தற்போது அந்த தவறை கர்ணன் படக்குழு சரிசெய்துள்ளனர். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்' படத்தில் ரெமோ, அம்பி, அந்நியன் ஆகிய மூன்று வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் நடித்து இருந்தார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற படம் ‘அந்நியன்'. இதில் ரெமோ, அம்பி, அந்நியன் ஆகிய மூன்று வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் நடித்து இருந்தார். தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, ஷங்கர் இயக்குகிறார்.
இந்நிலையில், அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும், ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை பெறவில்லை என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: அந்நியன் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம் தான் முழு உரிமை இருக்கிறது.

ரீமேக் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் ரீமேக் செய்தால் அது சட்டப்படி குற்றம். பாய்ஸ் படம் தோல்வியடைந்து, உங்கள் இமேஜூக்கு பாதிப்பு வந்தபோது நான் தான் அந்நியன் பட வாய்ப்பை உங்களுக்கு கொடுத்து பழைய நிலைக்கு கொண்டு வந்தேன்.
ஆனால் இப்போது நீங்கள் என்னை தவிர்த்துவிட்டு அந்நியனை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது உங்களது கீழ்த்தரமான மனநிலையை காட்டுகிறது” என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சுந்தர்.சி, கொரானாவில் இருந்து மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி-யும் கொரோனாவால் சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணம் அடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒருவாரம் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் குஷ்பு மற்றும் அவரது மகள்கள் சுந்தர்.சியை பார்க்க முடியும் என்று குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.