என் மலர்
சினிமா செய்திகள்
மனுஷா தயாரிப்பில் ரஹ்மான் ஜிப்ரீல் ஹீரோவாக நடித்து இயக்கி இருக்கும் ‘ஜூவாலை’ படத்தின் முன்னோட்டம்.
75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க, ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். இவர் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.
தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி வளர்த்து நடித்து உள்ளார்.

கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ‘ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹ்மான் ஜிப்ரீல்.
ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார். இவர் லண்டனைச் சேர்ந்தவர். பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தில் இருந்து, முக்கிய பிரபலம் விலகி உள்ளாராம்.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்தில் இருந்து ஒரே தொழில்நுட்ப குழுவுடன் தான் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் இயக்கத்தில் உருவாக உள்ள ‘விக்ரம்’ படத்திலும் அதே தொழில்நுட்ப குழுவுடன் தான் பணியாற்ற உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அப்படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் விலகி உள்ளாராம்.

சத்யன் சூரியன், கிரிஷ் கங்காதரன்
மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றிய சத்யன் சூரியன், கால்ஷீட் பிரச்சனை காரணமாக விக்ரம் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அவருக்கு பதிலாக விஜய்யின் சர்கார் படத்தில் பணியாற்றிய கிரிஷ் கங்காதரனை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 24-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கும் பொழுது, அங்கு பணி செய்யும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பெப்சி அமைப்பு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. உடல் உபாதைகளால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் அதற்கான உரிய கடிதத்தை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா, பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி, தற்போது பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். இவர் தற்போது 'லிகர்' படத்தை தயாரித்து வருகிறார்.

நடிகை சார்மி நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் நடிகர் விஜய் தேவரகொண்டா, அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகை சார்மி தற்போது தயாரித்து வரும் ‘லிகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பேரிடர் காலத்தில் உச்ச நடிகர்கள் தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பயனுள்ளதாக அமையும் என பேரரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு பிரபல இயக்குனர் பேரரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் உச்சத்தில் உள்ள சில நடிகர்களின் சின்ன அசைவுக்குகூட இங்கே பல அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்களின் ஒரு சொல்லுக்கு பல பொருள் சொல்லப்படுகிறது. அவர்களின் ஹேர் ஸ்டைல், உடை இவற்றைக்கூட அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள்.

இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் உச்ச நடிகர்கள் தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவோ அல்லது அறிக்கையோ வெளியிட்டால் அது நிச்சயம் மக்கள் மத்தியில் போய்ச்சேரும். பலரின் உயிர் காக்கும் செயலாகவும் அமையும். எத்தனை கோடி நிதி கொடுத்தாலும், அதைவிட இது பயனுள்ளதாக அமையும்” என பேரரசு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பேரரசு தமிழில், திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கிளாஸ்மேட்ஸ்’ நட்சத்திரங்களுடனான வீடியோ சாட்டிங்கின் போது எடுத்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை நடிகர் பிரித்விராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘கிளாஸ்மேட்ஸ்’. பிரித்விராஜ், ஜெயசூர்யா, நரேன், இந்திரஜித், காவ்யா மாதவன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். லால்ஜோஸ் இயக்கிய இப்படம் தமிழில் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் பல வருடங்களுக்குப்பின் மீண்டும் சந்திக்க கூடும்போது, அவர்களின் கல்லூரி காலங்களை நினைவுபடுத்துவது போல திரைக்கதை அமைந்திருந்ததால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இன்றளவும் மவுசு குறையாமல் இருக்கிறது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில், இதில் நடித்த நான்கு முக்கிய நடிகர்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, நரேன், இந்திரஜித் ஆகியோர் வீடியோ சாட்டிங் மூலம் ஒன்று கூடி பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ சாட்டிங்கை நடிகர் பிரித்விராஜ் தான் ஏற்பாடு செய்திருந்தாராம். மேலும் அவர்களுடனான வீடியோ சாட்டிங்கின் போது எடுத்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை நடிகர் பிரித்விராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் வழங்கி உள்ளனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக பெப்சி அமைப்புக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.
ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள்.
இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தி கிரே மேன் படத்தில் தனுஷ் தவிர மற்றுமொரு இந்திய நட்சத்திரமும் நடிக்கிறாராம். அவர் பெயர் ஐஸ்வர்யா சோனார். மராட்டிய நடிகையான இவர் ‘தி கிரே மேன்’ படத்திற்காக ஆடிசன் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்தப்படத்திற்காக சுமார் ஆறு மாதங்களாக நடைபெற்ற நடிப்பு பயிற்சியிலும் ஐஸ்வர்யா சோனார் கலந்துகொண்டாராம்.
நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும் ஊசி எங்கே என கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
வறுமையில் வாடும் நடிகை பாவலா சியாமளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிரஞ்சீவிக்கு பாராட்டுக்கள குவிந்த வண்ணம் உள்ளன.
பழம்பெரும் தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா, கடந்த 1984-ல் வெளியான சேலஞ்ச் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்த்ரா, கட்கம் கவுரி, பிளேடு பாப்சி, ரெயின்பொப், குண்டூர் டாக்கீஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக 2019-ல் மதுவடலரா படம் வந்தது. அதன்பின் கொரோனாவால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வருமானம் இன்றி கஷ்டப்படுவதாக கூறிவந்தார். சியாமளாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இந்நிலையில், வறுமையில் வாடும் நடிகை சியாமளா, தனக்கு திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்ட விருதுகளை விற்று இருக்கிறார். சியாமளா கஷ்டப்படுவதை அறிந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட சங்கத்தின் மூலம் மாதம் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளார் சிரஞ்சீவி. அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவா - அஜித் கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் வீரம். கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழை தொடர்ந்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இந்தியிலும் வீரம் படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. இந்தி ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், தற்போது அவருக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்துக்கு ‘பை ஈத் கபி தீவாளி’ என பெயரிட்டுள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே தேர்வாகி உள்ளார். தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் நிலையில், தற்போது அஜித்தின் வீரம் படமும் அங்கு ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






