என் மலர்
சினிமா

சிரஞ்சீவி, பாவலா சியாமளா
கொரோனா வறுமையால் விருதுகளை விற்ற நடிகைக்கு உதவிக்கரம் நீட்டிய சிரஞ்சீவி
வறுமையில் வாடும் நடிகை பாவலா சியாமளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிரஞ்சீவிக்கு பாராட்டுக்கள குவிந்த வண்ணம் உள்ளன.
பழம்பெரும் தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா, கடந்த 1984-ல் வெளியான சேலஞ்ச் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்த்ரா, கட்கம் கவுரி, பிளேடு பாப்சி, ரெயின்பொப், குண்டூர் டாக்கீஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக 2019-ல் மதுவடலரா படம் வந்தது. அதன்பின் கொரோனாவால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வருமானம் இன்றி கஷ்டப்படுவதாக கூறிவந்தார். சியாமளாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இந்நிலையில், வறுமையில் வாடும் நடிகை சியாமளா, தனக்கு திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்ட விருதுகளை விற்று இருக்கிறார். சியாமளா கஷ்டப்படுவதை அறிந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட சங்கத்தின் மூலம் மாதம் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளார் சிரஞ்சீவி. அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Next Story






