என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
    நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள், தோல்வி அடையும்போது குறைப்பது இல்லை என்றும் பட அதிபர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.

    இந்த நிலையில் தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளின் புதிய சம்பள பட்டியல் இணையதளத்தில் பரவி வருகிறது. நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை கேட்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

    கீர்த்தி சுரேஷ் - காஜல் அகர்வால்
    கீர்த்தி சுரேஷ் - காஜல் அகர்வால்

    அனுஷ்கா ரூ.3 கோடி வாங்குகிறார். சமந்தா ஒரு படத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் படங்கள் உள்ளன. பேமிலிமேன் 2 வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

    தமன்னா - திரிஷா
    தமன்னா - திரிஷா

    கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி கேட்பதாக தகவல். இவர் அண்ணாத்த, சாணிகாகிதம் மற்றும் மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படங்கள் கைவசம் வைத்துள்ளார். காஜல் அகர்வால் ரூ.2 கோடி வாங்குகிறார். இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், தெலுங்கில் ஆச்சார்யா உள்பட 7 படங்கள் காஜல் அகர்வாலிடம் உள்ளன. திரிஷா ரூ.2 கோடியும், சுருதிஹாசன், தமன்னா ஆகியோர் ரூ.1 கோடியே 50 லட்சமும் கேட்பதாக கூறப்படுகிறது.
    எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருத்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஸப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸப்ரூன் நிஸார் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

    மனைவியுடன் யுவன் சங்கர் ராஜா
    மனைவியுடன் யுவன்சங்கர்ராஜா

    ஸப்ரூன் நிஸார் முதன் முறையாக யு1 ரெக்கார்ட்ஸுக்கு வீடியோ நேர்காணலை வழங்கியுள்ளார். அதில் அனைத்து வகையான தனிப்பட்ட கேள்விகளுக்கும் அமைதியாக பதிலளித்தார். அப்போது போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவனின் மனைவி ஸப்ரூன், “யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆமா வீட்லேயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்” என சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
    சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி, அதன்பின் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
    தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்கள் ரசிகர்களையும் சமூக ஊடகப் பின்தொடர்பவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவித்து வருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை நடிகர் சூரி பகிர்ந்துக் கொண்டார்.

    இந்நிலையில், “நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு ஆறு நாளாச்சு, எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல் சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு, இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க- உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக” என பதிவு செய்திருக்கிறார்.


    கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருக்கும் வைரமுத்துக்கு ஓ.என்.வி விருது வழங்க பட்டத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
    மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் வைரமுத்து இந்த விருது வழங்கப்பட்டதுக்கு தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

    வைரமுத்து - பார்வதி
    வைரமுத்து - பார்வதி

    ஓஎன்வி சார் நமது பெருமை, ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் பார்வதி.
    சிம்பு நடிப்பில் வெளியான பாடல் ஒன்று 100 மில்லியன்களை கடந்த நிலையில் தற்போது ஹிப் ஹாப் ஆதியின் பாடலும் அதேபோல் 100 மில்லியன்களை கடந்துள்ளது.
    சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்று நடிகர் சிம்பு நேற்று அறிவித்தார்.

    சிம்பு - ஹிப் ஹாப் ஆதி

    இந்நிலையில் இன்று ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் இடம் பெற்ற சிங்கிள் பசங்க என்ற பாடல் 100 மில்லியன்களை கடந்து இருக்கிறது. இதை நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி பகிர்ந்திருக்கிறார்.
    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
    சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். 

    இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். 

    யுவன் சங்கர் ராஜாவின் பதிவு
    யுவன் சங்கர் ராஜாவின் பதிவு

    இப்படத்தின் ஏ ராசா என்னும் இரண்டாவது பாடலை (மே 28) நாளை வெளியிட இருப்பதாக இசையமைப்பாளர் அறிவித்திருக்கிறார்.
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த நடிகை மீனாவின் 40 வருட திரைப் பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
    நடிகை மீனா 1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் 1990-ல் ஒரு புதிய கதை படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமாகி கொடி கட்டி பறந்தார். அனைத்து பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார். திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் திரிஷ்யம் 2 படம் வந்தது. மீனா சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவர் நடித்த முக்கிய படங்களின் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பை வெளியிட்டு உள்ளார்.

    அவர் கூறும்போது, ‘1981-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 40 வருடங்களாக சினிமாவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக கதாநாயகர்கள், சக கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.

    எனது குடும்பத்தினர் உற்சாகப்படுத்தினர். அனைவரின் ஆதரவு இல்லாமல் இத்தனை காலம் சினிமாவில் நீடித்து இருக்க முடியாது. எனது சினிமா பயணத்துக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது இதயத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.

    மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் அக்னிச் சிறகுகள் படத்தின் முன்னோட்டம்.
    விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’.  ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.ஏ.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். 

    அருண் விஜய்

    மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி சீனு எனும் கதாபாத்திரத்திலும், அருண் விஜய் ரஞ்ஜித் எனும் கதாபாத்திரத்திலும், அக்‌ஷரா ஹாசன் விஜி எனும் கதாபாத்திரத்திலும், சென்ராயன் டாக்ஸி தல எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் துல்கர் சல்மான். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது.

    பால்கி
    பால்கி 

    இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். நடிகர் துல்கர் சல்மான் இந்தியில் நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார். தனுஷ் பாலிவுட்டில் நடித்த ஷமிதாப் படத்தை இயக்குனர் பால்கி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
    நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார்.
    2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ. 

    இதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. காரணம், திரைக்கதையில் சில திருத்தங்களை செய்யச் சொன்னாராம் ஷாருக்கான். அவர் விருப்பத்திற்கேற்ப திரைக்கதையை மாற்றி தற்போது ஓகே வாங்கிவிட்டாராம் அட்லீ.

    ஷாருக்கான், அட்லீ

    ‘பதான்’ படத்தில் நடித்து முடிந்த பின்னர், அட்லீ படத்தில் நடிக்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளாராம். இந்தாண்டு இறுதியில் அட்லீ - ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. 
    ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகளவில் 12 மொழிகளில் வெளியாக உள்ளதாம்.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. 

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்
    ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் மட்டுமல்லாது, ஆங்கிலம், கொரியன், துர்க்கிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய அந்நிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அவற்றோடு ஜப்பான் மற்றும் சீன மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். இதன்மூலம் ‘ஆர்ஆர்ஆர்’ படம் உலக அளவில் 12 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின், தெலுங்கு ரீமேக்கை சிரஞ்சீவி கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார். 

    தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

    சிரஞ்சீவி
    சிரஞ்சீவி 

    ஏனெனில், கதையில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யச் சொல்லியிருந்தாராம் சிரஞ்சீவி. ஆனால் மோகன்ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை திருப்திபடுத்தவில்லையாம். இதனால் நடிகர் சிரஞ்சீவி இப்படத்தை கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவியின் இந்த முடிவால் படத்தின் ரீமேக் உரிமையை வேறு தயாரிப்பாளருக்கு விற்க ராம்சரண் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ×