என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லாபம் படத்தில் நடித்தபோது மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் கம்யூனிசத்தை பற்றி நிறைய கற்றுக் கொண்டதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவரது நடிப்பில் இந்தாண்டு வெளியான கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சுருதிஹாசன்

    இந்நிலையில், நடிகை சுருதிஹாசன் இணையதளம் வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது : “லாபம் படத்தில் நடித்தபோது மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் கம்யூனிசத்தை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். லாபம் படத்தில் நடித்தது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. தங்கை அக்‌ஷராவுக்கு படம் இயக்குவதில் அதிக ஆர்வம். எதிர்காலத்தில் அவர் படம் இயக்கினால் எனக்கு ஏற்ற கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். அப்பா தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வரவில்லை”.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆசிரமத்தின் திறப்பு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.எம்.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    லிங்குசாமியின் ஆசிரமம் திறப்பு விழாவில் எடுத்த புகைப்படம்
    லிங்குசாமியின் ஆசிரமம் திறப்பு விழாவில் எடுத்த புகைப்படம்

    இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தின் திறப்பு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.எம்.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு இயக்குனர் லிங்குசாமி டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.


    கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும். இந்த விருது ஒரு சிலை, ஒரு தகுதி பட்டயம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டதாகும். 
    இந்த விருது குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது: “ஓ.என்.வி குறுப் இலக்கிய விருது பெறுவதை பெரும் பெருமையாக கருதுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய பூமியான கேரளத்தில் இருந்து இந்த விருது வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழுக்கு சகோதர மொழி சூட்டிய மகுடமாக நான் இதைக் கருதுகிறேன்.

    மலையாளத்தின் காற்றும் தண்ணீரும் கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணில் இருந்து பெறும் விருதை மகுடமாக கருதுகிறேன். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்று தான். இந்த உயரிய விருதினை உலகத் தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    மு.க.ஸ்டாலின்
    மு.க.ஸ்டாலின்

    இதனிடையே, கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,  “தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல கேரளத்தின் புகழ்மிகு ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக” அவர் பாராட்டியுள்ளார்.
    நடிகர் பிரபாஸ், டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது.
    ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் பிரபாசுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தன. தற்போது இந்திய அளவில் பிசியான நடிகராக வலம்வரும் பிரபாஸ், டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது.  

    நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றபோது, ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் சொல்லப்பட்டது.

    இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரேவின் டுவிட்டர் பதிவு
    இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரேவின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரேயிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டர் வாயிலாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே, “பிரபாஸ் மிக திறமையான மனிதர் தான். ஆனால் நாங்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததே இல்லை” எனக் கூறியுள்ளார். இதன்மூலம் பிரபாஸின் ஹாலிவுட் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    நீண்ட நாட்கள் வசிப்பதற்கான கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு, துபாய் அரசு வழங்கி உள்ளது.
    அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

    சஞ்சய் தத்
    சஞ்சய் தத்

    இந்த விசாவை பெற பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விண்ணப்பித்தார். இதனை பரிசீலனை செய்த துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையின் பொது இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி, சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா வழங்கினார். நடிகர் சஞ்சய் தத் அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ள தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கடைசி நாளில் படக்குழுவினரிடம் ரஜினி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
    ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ரஜினி அடுத்த மாதம் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். 

    நடிகர் தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிக்க, மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் முகாமிட்டு உள்ளார். ரஜினியும் அவர்களுடன் தங்கி இருப்பார் என்று தெரிகிறது. கொரோனா பரவல் குறைவதை வைத்தே அவரது பயண திட்டம் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா? இல்லையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

    ரஜினிகாந்த்
    ரஜினிகாந்த்
     
    இந்த நிலையில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கடைசி நாளில் படக்குழுவினரிடம் ரஜினி மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்போது, ‘மேலும் ஒன்றிரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை உள்ளது. அதற்கு உடல் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. கொரோனா முடிவுக்கு வந்த பிறகே அடுத்த படம் பற்றி முடிவு செய்வேன்.

     ‘அண்ணாத்த’ படம் என் கரியரில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படத்தை எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கவலையாக இருந்தது. இப்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. எல்லோரும் வீட்டுக்குப் போய் பத்திரமா இருங்க. மீதி இருக்கும் பணிகளை கொரோனா குறைந்த பிறகு செய்யலாம் என சொன்னாராம்.
    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.
    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.

    அந்த படங்களின் விவரம் வருமாறு:-

    1. கலியுகக் கண்ணன்

    2. ஒரு கொடியில் இரு மலர்கள்

    3. முத்தான முத்தல்லவோ

    4. சிட்டுக்குருவி

    5. பெண்ணை சொல்லிக் குற்றமில்லை

    6. கடவுள் அமைத்த மேடை

    7. சாட்டையில்லாத பம்பரங்கள்

    8. வடை மாலை

    9. ஒரே ஒரு கிராமத்திலே

    10. மகுடி

    11. பெண்கள் வீட்டின் கண்கள்

    12. அவள் ஒரு அதிசயம்

    13. அதிர்ஷ்டம் அழைக்கிறது

    14. பெண்ணின் வாழ்க்கை

    15. என் தமிழ் என் மக்கள்

    16. புரட்சி வீரன் புலித்தேவன்.

    இவற்றில் "வடைமாலை'', வாலியும், ஒளிப்பதிவாளர் மாருதிராவும் இணைந்து டைரக்ட் செய்த படமாகும். ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படம், 1982 மார்ச் மாதம் 12-ந்தேதி வெளிவந்தது.

    வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், "சிறந்த படம்'' என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் 1 லட்ச ரூபாய் விருதையும் பெற்றது.

    "என் தமிழ், என் மக்கள்'' என்ற படம், சிவாஜிகணேசன் நடித்து, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்ததாகும்.

    "புதுக்கவிஞர்கள் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

    "என்னுடைய சினிமாத் துறையில், பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது.

    காரணம், இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக்கொண்டு விடுவான் என்கின்ற அற்ப சிந்தனையெல்லாம் என் மனதில் அரும்பியதில்லை. எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாதென்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்.

    அதனால், தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே என்னுடைய அன்புத்தம்பி வைரமுத்து, ஒரு பேட்டியில் கீழ்க்கண்டவாறு சொன்னார்: "கண்ணதாசனுக்கும் நான் பாட்டெழுதுவது பற்றி கவலையில்லை; வாலிக்கும் என் வருகையில் வருத்தமில்லை'' என்று.

    இன்னும் சொல்லப்போனால், நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது, "இது தமிழுக்குக் கிடைத்த பெருமை'' என்று என்னை வாழ்த்திக் கடிதம் எழுதிய முதல் நபரே, தம்பி வைரமுத்துதான்.

    ஏவி.எம்.சரவணனோடு சேர்ந்து எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தியதும் அவரே.

    இப்படியெல்லாம் அனைவரது அன்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் நான், இன்றைய சினிமாப் பாடல்களைப் பற்றி அன்றைய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் கருத்துச் சொல்லப்போனால், என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் உள்ளங்கள் வருத்தப்படுமோ என்று அஞ்சி மவுனம் காத்து வந்திருக்கின்றேன்.

    இவ்வாறு வாலி கூறினார்.

    "பாட்டு எழுதி அதற்கு மெட்டமைப்பது நல்லதா? அல்லது மெட்டு போட்டு விட்டு, அதற்கு பாட்டு எழுதுவது நல்லதா?'' என்ற கேள்விக்கு பதில் அளித்து வாலி கூறியதாவது:-

    "என்னைப் பொறுத்தவரையில், இரண்டுமே சரியான வழிகள்தாம். போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன?

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையிலும் சரி, இசைஞானி இளையராஜா இசையிலும் சரி, நான் எத்துணையோ பொருட்செறிவு மிகுந்த பாடல்களை அவர்கள் கொடுத்த மெட்டுக்கு எழுதியிருக்கிறேன்.

    உதாரணமாக இரண்டைச் சொல்கிறேன்:

    விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் வரும் "உலகம் ஒரு பெண்ணாகி'' என்ற பாடல்.

    இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "தாய் மூகாம்பிகை'' படத்தில் வரும் "ஜனனீ... ஜனனீ...'' என்ற பாட்டு.

    இந்த இரண்டு பாட்டுகளும் தரமாக இல்லையா என்ன? தமிழ் சிதிலப்பட்டிருக்கிறதா, என்ன?

    ஒரு மெட்டுக்கான சிறந்த பாட்டை எழுதுவது எப்பொழுதும் சாத்தியமான காரியம்தான். ஆனால் அதற்குரிய கால அவகாசம், இன்றைய அவசர சினிமாவில் கிடைப்பதில்லை. இதுதான் உண்மையான நிலை.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இசையமைப்பாளர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இசையமைக்க இருக்கும் ஒரு படத்திற்கு பாட்டெழுத நான் ஒப்பந்தமாகியிருந்தேன். ஒரு மரியாதை நிமித்தம், என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தார் அந்த இசையமைப்பாளர்.

    அவர் தந்தையை நான் பல்லாண்டுகளுக்கு முன்பே நன்கறிந்து பழகியவன். அதையும் எனக்கு நினைவுபடுத்தி, தன்னை அவருடைய மகன் என்று தெரிவித்துக் கொண்டார், அந்த இளம் வயது இசையமைப்பாளர்.

    "என்ன தம்பி! டிïன் கொண்டு வந்திருக்கியா?'' என்று நான் அன்போடு வினவினேன்.

    "இல்லை சார்! எனக்கு டிïன் போட்டு உங்ககிட்டக் கொடுக்க ரொம்ப நாழி ஆகாது. இருந்தாலும், எனக்கு என் டிïனைவிட, உங்க வார்த்தைகள்தான் முக்கியம். நீங்க எழுதிக் கொடுங்க... நான் நாலஞ்சு விதமா டிïன் போட்டு, உங்ககிட்ட காட்டுகிறேன்...'' என்றார் அந்த இளைஞர்.

    உடனே நான் சொன்னேன்: "தம்பி! இது ஒரு சிச்சுவேஷன் சாங் இல்லை. பசங்க ஜாலியாப் பாடுற பாட்டு. இதுக்கு ரிதம்தான் முக்கியம். அதனாலே நீ டிïன் போட்டு, அதற்கு நான் பாடல் எழுதினால்தான் நல்லாயிருக்கும். டிïனைப் போட்டு நாளைக்கு அனுப்பு. நான் பாட்டு எழுதி வைக்கிறேன். இருந்தாலும், `பாட்டெழுதி அதுக்கு டிïன் போடணும். வார்த்தைதான் முக்கியம்' அப்படின்னு நீ சொன்னதுக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று சொல்லி, அந்த இசையமைப்பாளரை வாழ்த்தி அனுப்பினேன்.

    பிறகு, அந்த இளம் வயது இசையமைப்பாளரிடமிருந்து மறுநாள் டிïன் வந்தது... நான் பாட்டெழுதிக் கொடுத்து அனுப்பினேன்.

    பாட்டு பயங்கரமாக பாப்புலர் ஆனது.

    அந்த இளம் வயது இசையமைப்பாளர்தான், என் நண்பர் சேகரின் மைந்தன், ஏ.ஆர்.ரகுமான்.

    அப்போது நான் எழுதிக் கொடுத்ததுதான் "ஜென்டில்மேன்'' படத்தில் வருகிற "சிக்குபுக்கு ரயிலு'' பாடல்.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு வாலி எழுதிய பாடல்கள்

    ஒரே காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் வாலி பாடல்கள் எழுதினார். அவர் பாடல் எழுதிய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் விவரம் வருமாறு:-

    எம்.ஜி.ஆர். படங்கள்

    1. நல்லவன் வாழ்வான் 2. தாயின் மடியில் 3. தெய்வத்தாய் 4. படகோட்டி 5. ஆசை முகம் 6. ஆயிரத்தில் ஒருவன் 7. எங்க வீட்டுப்பிள்ளை 8. கலங்கரை விளக்கம் 9. தாழம்பூ 10. பணம் படைத்தவன் 11. அன்பே வா 12. சந்திரோதயம் 13. தாலி பாக்கியம் 14. நாடோடி 15. நான் ஆணையிட்டால் 16. பெற்றால்தான் பிள்ளையா 17. அரச கட்டளை 18. காவல்காரன் 19. ஒளிவிளக்கு 20. கணவன். 21. கண்ணன் என் காதலன் 22. குடியிருந்த கோயில் 23. ரகசிய போலீஸ் 24. அடிமைப்பெண் 25. நம் நாடு 26. என் அண்ணன் 27. எங்கள் தங்கம் 28. மாட்டுக்கார வேலன் 29. தலைவன் 30. தேடிவந்த மாப்பிள்ளை 31. ஒரு தாய் மக்கள் 32. குமரிக்கோட்டம் 33. நீரும் நெருப்பும் 34. ரிக்ஷாக்காரன் 35. இதயவீணை 36. அன்னமிட்டகை 37. நான் ஏன் பிறந்தேன் 38. ராமன் தேடிய சீதை 39. உலகம் சுற்றும் வாலின் 40. நேற்று இன்று நாளை. 41. சிரித்து வாழவேண்டும் 42. உரிமைக்குரல் 43.இதயக்கனி 44. நினைத்ததை முடிப்பவன் 45. நாளை நமதே 46. ஊருக்கு உழைப்பவன் 47. உழைக்கும் கரங்கள் 48. நீதிக்கு தலைவணங்கு 49. இன்றுபோல் என்றும் வாழ்க! 50. நவரத்தினம் 51. மீனவநண்பன் 52. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.

    சிவாஜி படங்கள்

    1. அன்புக்கரங்கள் 2. மோட்டார் சுந்தரம் பிள்ளை 3. செல்வம் 4. பேசும் தெய்வம் 5. இரு மலர்கள் 6. நெஞ்சிருக்கும் வரை 7. உயர்ந்த மனிதன் 8. கலாட்டா கல்யாணம் 9. அஞ்சல் பெட்டி 520 10. எங்க மாமா 11. எதிரொலி 12. சுமதி என் சுந்தரி 13. தேனும் பாலும் 14. பாபு 15. தவப்புதல்வன் 16. பாரத விலாஸ் 17. மனிதரில் மாணிக்கம் 18. சிவகாமியின் செல்வன் 19. அன்பே ஆருயிரே 20. டாக்டர் சிவா. 21. மன்னவன் வந்தானடி 22. என்னைப்போல் ஒருவன் 23. பைலட் பிரேம்நாத் 24. ஜஸ்டிஸ் கோபிநாத் 25. நான் வாழவைப்பேன் 26. விசுவரூபம் 27. அமரகாவியம் 28. சத்தியம் சுந்தரம் 29. மாடி வீட்டு ஏழை 30. மோகனப்புன்னகை 31. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 32. ஊரும் உறவும் 33. தியாகி 34. துணை 35. பரீட்சைக்கு நேரமாச்சு 36. வா கண்ணா வா 37. ஹிட்லர் உமாநாத் 38. இமைகள் 39. சந்திப்பு 40. சுமங்கலி 41. நீதிபதி 42. மிருதங்க சக்ரவர்த்தி 43. வெள்ளை ரோஜா 44. இரு மேதைகள் 45. சரித்திர நாயகன் 46. சிம்ம சொப்பனம் 47. தாவணிக்கனவுகள் 48. வம்ச விளக்கு 49. நாம் இருவர் 50. நீதியின் நிழல் 51. படிக்காத பண்ணையார் 52. பந்தம் 53. படிக்காதவன் 54. ராஜரிஷி 55. ஆனந்தக் கண்ணீர் 56. சாதனை 57. தாய்க்கு ஒரு தாலாட்டு 58. விடுதலை 59. தாம்பத்தியம் 60. வீரபாண்டியன். 61. என் தமிழ் என் மக்கள் 62. ஞானப்பறவை 63. சின்ன மருமகள் 64. தேவர் மகன் 65. நாங்கள் 66. மன்னவரு சின்னவரு
    ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால் நோயாளிகளுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் உதவிய செய்ய இருக்கிறார்.
    ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நடிகர், நடிகைகள் ஆன்லைன் மூலம் உதவிகள் செய்து வருகிறார்கள். 

    நிதி அகர்வால்

    இந்நிலையில் நிதி அகர்வால், கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே டிஸ்டிரிப்யூட் லவ் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளார். இதில் ஒரு குழுவை நியமித்து எந்தெந்த பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து உடனுக்குடன் இந்த நிறுவனத்தின் மூலம் உதவி செய்யப் இருக்கிறார் நிதி அகர்வால்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, நவம்பர் ஸ்டோரி வெப் தொடரின் வெற்றி குறித்து பேட்டியளித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் தற்போது நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் வெளியாகி உள்ளது. இந்தத் தொடர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள், இத்தொடரின் கதை மற்றும் இதில் நடித்தவர்கள் திறனை பாராட்டி வருகின்றனர். 
       
    நவம்பர் ஸ்டோரியை மில்லியன் கணக்கான இந்தியர்கள் இந்தத் த்ரில்லர் வெளியான இந்த வார இறுதியில் பார்த்துள்ளனர். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இந்த தொடரை ராம் சுப்பிரமணியன் இயக்கி இருக்கிறார். தமன்னாவுடன் இதில் பசுபதி, ஜி.எம்.குமார், அருள் தாஸ் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

    தமன்னா

    இந்த தொடரின் வெற்றி குறித்து தமன்னா கூறுகையில், “நவம்பர் ஸ்டோரி' பார்வையாளர்களிடமிருந்து பெற்றுத்தந்த பாராட்டு மற்றும் அன்பு மிகுந்த ஊக்கமளிக்கிறது. வெப் சீரிஸ்கள் நல்ல கன்டென்ட்டுடன் வழங்கப்படும்போது அதற்கு முழு அளவில் மக்கள் வரவேற்பை வழங்குவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த வெப் சீரிஸை பார்த்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளும்போது, நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது' என்றார். 
    தான் நடித்த படத்தின் பாடல் ஒன்று சாதனை படைத்து இருப்பதால், அதற்கு நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
    சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு வெளியானது. இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கி இருந்தார்.

    சிம்பு

    இந்த படத்துக்கு சிம்பு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு ரசிகர்களுக்கு சிம்பு நன்றி சொல்லி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக அமைந்துவிட்டது.

    கார்த்தி

    சமீபத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் மாஸ் காட்டுவதற்காக புகை பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைத்து வருகின்றனர். பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் வெறும் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தி தன்னுடைய படங்களில் பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார். இது குறித்து கூறிய கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பிடிக்கும் படி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா ரசிகர்களுக்கு பயப்படுவதாக கூறியிருக்கிறார்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா துரை, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சூர்யாவின் தம்பி கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு TWITTER SPACEல் கலந்துக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

    சூர்யா  - பாண்டிராஜ்

    அப்போதும் சூர்யா ரசிகர்கள் அவரிடம் ‘சூர்யா 40′ அப்டேட் குறித்து கேட்டுக் கொண்டே இருந்தனர். படத்தை பற்றி எதுவும் சொல்லக்கூடாது. படத்தின் தலைப்பு முதல் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. சூர்யா சார் ரசிகர்கள் அப்டேட் கேட்டுட்டே இருக்காங்க.. ட்விட்டர் பக்கமே வர முடியல..” என தெரிவித்தார் பாண்டிராஜ்.
    ×