என் மலர்
சினிமா செய்திகள்
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை படத்தில் வரும் கொக்கி குமாரை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் 2006 ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. வெளியான நேரத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஆண்டுகள் செல்ல செல்ல இந்தப் படத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

படத்தின் கதை உருவாக்கம், இசை, எடிட்டிங், கேமரா பணி என அனைத்தையும் தற்போது பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். தனுஷின் கொக்கி குமார் கதாபாத்திரத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவான நிலையில், தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதை கொண்டாடி வருகிறார்கள்.

புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் செல்வராகவனுக்கு ரசிகர்கள் தொடர்ந்து அன்பு வேண்டுகோள் வைத்து வருகின்றனர். செல்வராகவனும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் இரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தை 2 ஓடிடி நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கிறது.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை இரண்டு ஓடிடி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளுக்கு ஜீ 5 நிறுவனமும், இந்தி மொழிக்கு நெட் பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது.
ஒரே நாளில் தனது 2 நண்பர்களை கொரோனாவால் இழந்திருப்பதாக பாடலாசிரியர் விவேக் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கொரோனா 2-ம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகிறார்கள்.


பாடலாசிரியர் விவேக்கின் பதிவு
அந்த வகையில் தற்போது பாடலாசிரியர் விவேக் தனது 2 நண்பர்களை ஒரே நாளில் இழந்திருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “ஒரே நாளில் எனக்கு மிகவும் நெருக்கமான 2 நண்பர்களை நான் இழந்துள்ளேன். இது உங்கள் அனைவரையும் பயப்பட வைக்கும் பதிவு அல்ல. இந்த கடினமான கால கட்டத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற அக்கறையில் செய்த பதிவு” என்று கூறியுள்ளார்.
குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் போன்ற படங்களில் நடித்த லட்சுமி மேனன் நான் சிங்கிள் இல்லை என்று கூறி இருக்கிறார்.
நடிகை லட்சுமி மேனன் ‘கும்கி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன்பிறகு சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றார். அவர் நடிப்பில் குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.

இதற்கிடையில் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் நடித்தார். முத்தையா இயக்கத்தில் உருவான இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றி பெற்றது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் லஷ்மி மேனன், அவ்வெப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதோடு ரசிகர்களுடனும் பேசி வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த லட்சுமி மேனன், ஆமாம் என்று கூறினார். அதேபோன்று மற்றொரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, நான் எப்போதுமே சிங்கிள் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து யார் அந்த காதலர் என கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர்.
ஏ.செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காக்கி’ படத்தின் முன்னோட்டம்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காக்கி’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் சத்யராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோரும் போலீஸ் அதிகாரி வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். சாந்தனு நடித்த ‘வாய்மை’ படத்தை இயக்கிய ஏ.செந்தில்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.
காக்கி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் ரவிமரியா, ஜான் விஜய், ஈஸ்வரிராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, அவ்கத் இசையமைத்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் தற்போது ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கைவசம் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்கள் உள்ளன. ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்ததும் இந்த 2 படங்களிலும் நடிக்க சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளார்.

சிரஞ்சீவி
இந்நிலையில், நடிகர் சிரஞ்சிவி மேலும் ஒரு தமிழ் படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தை தான் சிரஞ்சீவி தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளாராம். பிரபாஸின் ‘சாஹோ’ படத்தை இயக்கிய சுஜித்திடம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதையை தனக்கேற்றபடி மாற்றியமைக்க சொல்லி உள்ளாராம் சிரஞ்சீவி. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறதாம்.
மாணவிக்காக குடுக்கும் குரலில் தாயின்குரல், தந்தையின்குரல், அண்ணனின் குரல் என்று சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும் என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்-லைன் வகுப்பின்போது பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள். சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது.
இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர்.

பேரரசு
சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக குடுக்கும் குரலில் தாயின்குரல், தந்தையின்குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.
உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகததின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்.
இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தான் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டதாக கவுரி கூறியுள்ளார்.

நடிகை கவுரி கிஷனின் இன்ஸ்டாகிராம் பதிவு
மேலும், அப்பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகளும் இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள கவுரி, உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் அப்பாடல் காட்சியை படமாக்க புஷ்பா படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதியும், 2-ம் பாகம் அடுத்தாண்டும் வெளியாக உள்ளது.

தீஷா பதானி, அல்லு அர்ஜுன்
இந்நிலையில், புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுகிறதாம். அப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது பிரபல பாலிவுட் நடிகை தீஷா பதானியை அப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் அப்பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.
பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்குகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ், ஜான் ஆபிரஹாம்
இந்நிலையில், சலார் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் சலார் படம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை ரஜிஷா விஜயன், விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார்.
தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ரஜிஷா விஜயன்
இதையடுத்து தமிழில் கார்த்தி, சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா, விரைவில் தெலுங்கில் அறிமுகமாக உள்ளாராம். அவர் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகினி உடையில் போஸ் கொடுத்தவாறு இருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரீத்து வர்மா. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான அவர், தற்போது கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகிலும் பிசியான நடிகையாக வலம்வருகிறார் ரீத்து வர்மா.

ரீத்து வர்மா
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை ரீத்து வர்மா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரீத்து வர்மா. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.






