என் மலர்
சினிமா

பாடலாசிரியர் விவேக்
ஒரே நாளில் 2 நண்பர்களை இழந்து விட்டேன் - பாடலாசிரியர் விவேக் உருக்கம்
ஒரே நாளில் தனது 2 நண்பர்களை கொரோனாவால் இழந்திருப்பதாக பாடலாசிரியர் விவேக் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கொரோனா 2-ம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகிறார்கள்.


பாடலாசிரியர் விவேக்கின் பதிவு
அந்த வகையில் தற்போது பாடலாசிரியர் விவேக் தனது 2 நண்பர்களை ஒரே நாளில் இழந்திருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “ஒரே நாளில் எனக்கு மிகவும் நெருக்கமான 2 நண்பர்களை நான் இழந்துள்ளேன். இது உங்கள் அனைவரையும் பயப்பட வைக்கும் பதிவு அல்ல. இந்த கடினமான கால கட்டத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற அக்கறையில் செய்த பதிவு” என்று கூறியுள்ளார்.
Next Story






