என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், ராமாயண கதையில் ராவணனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மகாபாரத கதையையும் மலையாளத்தில் படமாக்க உள்ளனர். தெலுங்கில் ராமாயண கதை ஆதிபுருஷ் என்ற பெயரில் படமாகிறது.
இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். சீதையாக நடிக்க கீர்த்தி சனோனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரூ.500 கோடி செலவில் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில் இந்தியிலும் ராமாயண கதை சீதா என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் சீதா என்று பெயர் வைத்துள்ளனர்.

சீதா படத்தின் போஸ்டர்
இந்த படத்தில் சீதையாக நடிக்க கரீனா கபூர், அலியாபட் ஆகியோர் பரிசீலிக்கப்படுவதாகவும் கரீனா கபூருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது. ராவணன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேசி வருகிறார்கள். அவருக்கு கதை பிடித்துள்ளதால் ராவணனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அலாவ்கிக் தேசாய் இயக்குகிறார்.
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், இயக்குனர்கள் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இத்தொடரை இயக்கி உள்ளனர். இதில் நடிகை சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாகவும், மனித வெடிகுண்டாகவும் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இந்த நிலையில் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில் சமந்தா போராளி சீருடையில் குண்டுகளை வெடிக்கும் காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரித்து இருப்பதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ள இந்த தொடரை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

இயக்குனர்கள் டீகே மற்றும் ராஜ்
இந்நிலையில், சர்ச்சைக்கு விளக்கம் அளித்து ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளின் அடிப்படையில் யூகமான கருத்துகள் எழுந்துள்ளன. இந்த தொடரின் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் தமிழர்கள். தமிழ் மக்களையும் தமிழ் கலாசாரத்தையும் நன்கு அறிவோம்.
தமிழ் மக்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ளது. இந்த தொடருக்காக பல வருடங்கள் உழைத்துள்ளோம். அனைவரும் தொடர் வெளியாவதுவரை பொறுத்திருந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடரை பார்த்த பிறகு நீங்கள் பாராட்டுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளனர்.
பிரபல நடிகர் அடித்து துன்புறுத்தியதால், அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்துவந்த, இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியை உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உன்னி தேவ் மீது பிரியங்கா கடந்த வாரம் போலீசில் புகார் அளித்தார். மனுவில் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்து இருந்தார். புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 26.

உன்னி தேவ், பிரியங்கா
இதனிடையே உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால் தான் பிரியங்கா இறந்ததாகவும், இதனால் உன்னிதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரியங்காவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், நடிகர் உன்னி தேவ்வை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.
1977-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரானார்.
தேர்தலில் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர். நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' என்ற படம் முடிவடையும் தருணத்தில் இருந்தது. மீதியிருந்த இரண்டொரு காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். அதன்பின் நடிக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், 1978-ல் அவர் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். அதுபற்றி, கவிஞர் வாலி எழுதியிருப்பதாவது:-
`அக்கரைப்பச்சை', `இளைய தலைமுறை' முதலிய படங்களைத் தயாரித்த என் நண்பர் ஜி.கே.தர்மராஜ் அவர்களும், புகழ் வாய்ந்த ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களும் ஒரு நாள் இரவு என் வீட்டிற்கு வந்தார்கள்.
"நான் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நண்பர் மாருதிராவும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நíங்கதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதணும்'' என்று வந்த விஷயத்தை சுருக்கமாக விளக்கினார், தர்மராஜ்.
``இப்போது என் கைவசத்தில் எந்தக் கதையும் இல்லையே...'' என்று நான் தயங்கியவாறே சொல்லிவிட்டு, "யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்?'' என்று தர்மராஜை வினவினேன்.
"யார் ஹீரோவா நடிக்கப்போகிறார்ங்கறதை அப்புறம் சொல்றேன். ஆனால் அந்த ஹீரோதான் உங்ககிட்ட கதையை வாங்கி, வேலையை ஆரம்பிக்கச் சொல்லி எங்களை இங்கே அனுப்பினார்...'' என்று மாருதிராவ் ஒரு சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.
"அவருக்கு எப்படிக் கதை எழுதணும்னு, உங்களுக்குத்தான் தெரியும்னு அவரே சொன்னாருங்க. அவர் வீட்லேருந்துதான், அவர் சொல்லி அனுப்பித்தான் நாங்க நேர உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்...'' என்று புன்னகைத்தார், தர்மராஜ்.
நான்தான் கதை வசனம் எழுத வேண்டுமென்று என் எழுத்தில் அவ்வளவு ஆர்வம் கொண்டு, இவர்களை என் வீட்டிற்கு அனுப்பிய ஹீரோ யாராக இருக்கக்கூடும் என்று நான் வியப்பும், மகிழ்வும் விழிகளில் குமிழியிட ஒரு வினாடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.
பிறகு, தர்மராஜிடம், "உங்களை என்கிட்ட அனுப்பிச்ச ஹீரோ யாரு சார்? அதெ முதல்ல சொல்லுங்க...'' என்று விடாப்பிடியாகக் கேட்டேன்.
அவர் யாரென்று, தர்மராஜ் சொன்னதும் நான் திகைத்துப்போனேன். இது கனவா? நனவா? என்று நான் கிள்ளிப் பார்க்காத குறைதான்.
"நிஜமாவா சொல்றீங்க?'' என்று நான் மாருதிராவிடமும், தர்மராஜிடமும் மாறி மாறிக்கேட்டேன்.
"உங்களுக்கு சந்தேகமிருந்தா, நீங்க வேணும்னா அவர்கிட்டயே, போன் பண்ணிப் பேசுங்க...'' என்றார் தர்மராஜ்.
"அதுக்குக் கேக்கலீங்க. அவர் சினிமாவில் நடிக்க முடியாதே... அப்படியிருக்கும்போது எப்படி உங்ககிட்ட நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு? சாத்தியமில்லாத விஷயத்தைச் சொல்றீங்களே சார்!'' என்று சொன்னேன் நான்.
தர்மராஜ் மெல்லிய புன்னகையை இதழோரம் இழையவிட்டவாறே, "இந்தப் பத்தாயிரம் ரூபாயை அட்வான்சா வாங்கிக்கங்க. அப்புறம் அண்ணனோட நீங்களே பேசி, அவர் நடிக்கிறார்ங்கற விஷயத்தை உறுதி பண்ணிக்கிட்டு, கதை எழுத ஆரம்பியுங்க...'' என்று என் கையில் காசோலையைத் திணித்துவிட்டு மாருதிராவுடன் காரில் ஏறிப்போய்விட்டார்.
மறுநாள் அதிகாலையிலேயே நானே என் காரை ஓட்டிக்கொண்டு அன்புக்குரிய என் அண்ணனை அவர் இருப்பிடத்தில் சந்தித்து, "நீங்க படத்திலே நடிக்க ஒத்துக்கிட்டு, என்னைக் கதையெழுதச் சொல்லி தர்மராஜையும், மாருதிராவையும் என் வீட்டுக்கு அனுப்பிச்சீங்களாண்ணே!'' என்று ஒரே மூச்சாகப் பேசி முடித்தேன்.
"ஆமாம். நான் நடிக்கப்போகிறேன்... சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. ஏப்ரல் 14-ந்தேதி பூஜை!'' என்று அவர் சொன்னதும் நான் வியப்பால் வாயடைத்துப்போனேன்.
ஏனெனில் என்னிடத்தில் படத்தில் நடிக்கப்போவதாகச் சொன்னவர், அப்போது முதல்-அமைச்சராகக் கோட்டையில் கொலுவிருந்த என் அன்பு அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள்.
"ஏண்ணே, நீங்க முதல்-அமைச்சரா இருந்துக்கிட்டு சினிமாவில் நடிக்கறது...'' என்று நான் சொல்வதற்குள், "சாத்தியமான்னு கேக்குறீங்களா? சாத்தியமா இருக்கத் தொட்டுத்தான் உங்களைக் கதை எழுதச் சொல்றேன்'' என்று பாசத்தோடு என் கன்னத்தை வருடினார் எம்.ஜி.ஆர்.
நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு பகலாக உட்கார்ந்து எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக ஒரு கதையை உருவாக்கினேன்.
10 நாட்கள் கழித்து, `கதை தயார்' என்று எம்.ஜி.ஆருக்கு டெலிபோன் செய்தேன்.
அன்று இரவு, அண்ணன் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான குஞ்சப்பன், என் வீட்டிற்கு வந்தார்.
"நாளைக் காலை 6 மணி விமானத்தில் சி.எம். கூட நீங்களும் மதுரைக்குப் போறீங்க. விமானப் பயணத்திலேயே கதையைக் கேட்டுக்கறேன்னு சொன்னாரு. அடுத்த நாள் விமானத்தில் நீங்க மதுரையிலிருந்து மெட்ராசுக்குத் திரும்பிடலாம். அதுக்கும் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கறேன்'' என்று குஞ்சப்பன் தான் வந்த விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
விமானத்திலேயே எம்.ஜி.ஆருக்குக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. திருநெல்வேலிக்கும் என்னை உடன் அழைத்துச் சென்றார். அன்று இரவு நெடுநேரம், நானும் அவரும் அந்தக் கதையைப் பேசிப் பேசி மெருகேற்றினோம்.
படத்திற்கு, "உன்னை விடமாட்டேன்'' என்று தலைப்பு வைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். எம்.ஜி.ஆர். பொன்னிறம் மின்னப் புன்னகைத்தார். அவர், புன்னகைத்தால் `சம்மதம்' என்று அர்த்தம்.
சென்னை வந்த பிறகு திரைக்கதையை எழுதும் பணியில் நான் ஈடுபட்டாலும், `ஒரு மாநில முதல்-அமைச்சர் சினிமாவில் நடிப்பதை, மத்திய அரசு எப்படி ஒத்துக்கொள்ளும்' என்கிற சந்தேகம் என் சிந்தனை ஓட்டத்தை அவ்வப்போது தடை செய்து கொண்டுதானிருந்தது.
ஓரிரு வாரங்கள் கழித்து ஒருநாள் அதிகாலையில் தொலைபேசியின் மணி, என் துயிலைக் கலைத்தது.
ரிசீவரை எடுத்து, `ஹலோ!' என்றேன்.
`வாழ்க!' என்று சொல்லிவிட்டு, "காலை பேப்பர் பார்த்தீங்களா? உடனே எடுத்துப் பாருங்க'' என்றார் எம்.ஜி.ஆர். உடனே போனை வைத்துவிட்டார்.
"மாநில முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, தன் கடமைகளுக்கு குந்தகம் வராமல் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை'' என்று பொருள்பட பத்திரிகையாளர்களிடம் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் சொல்லியிருந்த விஷயம், பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.
பிறகென்ன! இரவு பகலாக திரைக்கதையை எழுதி முடித்தேன். படத்தின் இயக்குனராக கே.சங்கரை அமர்த்திக் கொள்ளும்படி எம்.ஜி.ஆர். என்னிடத்திலும், தயாரிப்பாளர் தர்மராஜிடமும் சொன்னார்.
"யாரை இசையமைப்பாளராகப் போடுவது?'' என்று தர்மராஜ் கேட்டார்.
"புதுசா ஒரு பையன் வந்திருக்கிறாரே! அந்தப் பையனைப் போட்டுக்கலாம். பாட்டெல்லாம் கேட்டேன். நல்லாயிருக்கு'' என்றார், எம்.ஜி.ஆர்.
"நீங்க, இளையராஜாவைச் சொல்றீங்களா?'' என்றேன் நான்.
"ஆமாய்யா!'' என்றார் எம்.ஜி.ஆர்.
பிறகு என்னைப் பார்த்து, "நீங்கபோயி பூஜைக்கு தலைமை தாங்க வரச்சொல்லி, கவர்னரைக் கூப்பிடுங்க. தர்மராஜையும் அழைச்சுக்கிட்டுப் போய், நான் சொன்னேன்னு சொல்லுங்க...'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பேரில், நானும், தர்மராஜ×ம் கவர்னர் மாளிகைக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்ள அழைத்தோம்.
`என்ன கதை? என்ன மாதிரிப்படம்?' என்றெல்லாம் கவர்னர் என்னிடம் கேட்டறிந்து கொண்டு, வருவதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
பிறகு, சில காரணங்களை முன்னிட்டு கவர்னர் வருகை தவிர்க்கப்பட்டது.
பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவுடன், எம்.ஜி.ஆர். அவர்களும், ஏனைய அமைச்சர்களும் கலந்து கொள்ள படத்தின் பூஜைக்கான அழைப்பிதழ்கள் அச்சாகிக் கொண்டிருந்தன.
விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக அண்ணன் எம்.ஜி.ஆர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, "படத்துவக்க விழாவிற்கு, நாஞ்சில் மனோகரனைத் தலைமை தாங்கச் சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வரவேற்புரையை நிகழ்த்துங்கள்'' என்று என்னைப் பணிந்தார்.
பூஜை, குறிப்பிட்ட நாளில் கோலாகலமாக நடந்தது. இளையராஜாவின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, எம்.ஜி.ஆர். முன்னிலையில் பாடல் ஒலிப்பதிவாயிற்று.
அந்நாளில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்து கொண்டே, படத்திலும் நடிக்கப் போகிறார் என்னும் செய்தியை, அன்றாடம் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் கொண்டு வந்தன.
ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, படத்தில் நடிப்பதை, என்ன காரணத்திற்காகவோ எம்.ஜி.ஆர். மறுபரிசீலனை செய்து தவிர்த்து விட்டார்.
காரணத்தை நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் 3600 நடன கலைஞர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.
கொரோனா முதல் அலையின்போதே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அதிக அளவிலான நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியவர் அக்ஷய் குமார். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே நிவாரண நிதி அளித்துள்ள அக்ஷய் குமார், தற்போது 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களை வழங்கியுள்ளார்.

அக்ஷய் குமார் - கணேஷ் ஆச்சார்யா
இந்த தகவலை நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா வெளியிட்டுள்ளார். நடக்குழுவினருக்கு உதவி செய்யும்படி அக்ஷய் குமாரிடம் தான் கோரிக்கை வைத்ததாகவும் அதை தொடர்ந்து 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை தனது கணேஷ் ஆச்சார்யா அறக்கட்டளையிடம் அக்சய் குமார் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் அவர்களின் அண்ணன் குரு என்பவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கினார். இவருடைய அண்ணன் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாநாடு, பத்து தல படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படம், மேலும் பத்து தல, இயக்குனர் சுசீந்திரன் மற்றும் ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என்று பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது, அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் வெற்றி மாறன் தற்போது சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவார். இதனால் சிம்புவை வைத்து திரைப்படம் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் பல பேருக்கு உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட்டின் வீட்டிற்குச் சென்று மக்கள் உதவி கேட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறார்.
தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.
இந்நிலையில் சோனுசூட்டின் வீட்டிற்கு சென்று பொதுமக்கள் பலரும் உதவி கேட்டு வருகிறார்கள். அவர்களை சந்தித்து குறைகளை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகர் காளி வெங்கட், அது குறித்த அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சிறந்த துணை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் காளி வெங்கட் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இந்த வீடியோவை வெளியிடலாமா வேண்டாமா என்று யோசித்தேன். இது ஒரு விழிப்புணர்வு வீடியோ மாதிரி தான். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க.
இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்ததால உடனே அட்மிட் ஆகனும்னு சொன்னாங்க. சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல்ல இடமில்லை. போன மாசம்தான் இது நடந்தது. நான் இதுல இருந்து வென்றே தீருவேன்னு என்றெல்லாம் நினைக்கல. வந்துருச்சு அடுத்த என்ன பண்ணலாம்ன்னு தான் இருந்தேன்.
டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அட்வைஸ் கேட்டு தான் நான் நடந்துகிட்டேன். கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதானல வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க, வந்துடுச்சுன்னாலும் அலட்சியமா இருக்காதீங்க. தைரியமா இருங்க. முக்கியமா எந்த அறிகுறி தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி, அவர் சொல்றத கேளுங்க என வீடியோவில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான், இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள் என்று உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தனது தாய் இறந்தது குறித்து உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

அதில், "இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவர் பிறந்த நாளைக்கு பிறகு (மே 23) இது நடந்துள்ளது. கடந்த 2008, மே 23-ஆம் தேதி என் கண்கள் கண்ணீரில் திரண்டிருந்தன. அவர் கோமா நிலையில் இருந்தார். நான் அவருக்கு முன் ஒரு கேக்கை வெட்டினேன், அந்த மருத்துவமனை ஐ.சி.யுவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன், வெளிப்படையாக எங்கள் இருவருக்குமே தெரியாது, என் வாழ்நாளில் நான் அவரை வாழ்த்தும் கடைசி வாழ்த்தாக அது இருக்கும் என்று!

அவர் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு விரைவில் திரும்பி வருவார் என்று எனக்கு பலமான நம்பிக்கை இருந்தது, ஆனால் மே 25-ஆம் தேதி (2008) சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். நான் உங்களை இழந்த இந்த நாள் வரை என் வாழ்க்கையில் நீங்கள் அறியாத எண்ணற்ற நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா. உங்கள் ஒரே குழந்தை!" என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் கார்த்தி நடிப்பில் கைதி படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தியும் 'கைதி 2' கண்டிப்பாக உருவாகும் என்று கூறினார். முதல் பாகத்தின் இறுதியிலிருந்து 2-ம் பாகம் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார். ஆனால், அதற்குப் பிறகு 'கைதி 2' குறித்து எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் 'கைதி 2' குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "கார்த்தி சார், லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக 'கைதி 2' உருவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோக்கள் வெளியான நிலையில் பாலை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.

இந்நிலையில் சோனுசூட்டின் மனித நேயத்தப் பாராட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் சோனு சூட்டின் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கினார்கள். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதே போல தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
இதில் ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட் பாலை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.